Tagged: இன்றைய சிந்தனை

கிறிஸ்தவ ஒற்றுமை

இன்றைய நற்செய்தியில் (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16) நாம் பார்க்கிற வேலையாட்கள், வேலைக்காகக் காத்துக்கொண்டிருந்தவர்கள், சோம்பேறிகள் அல்ல. காலையிலிருந்து அவர்கள் யாராவது தங்களை வேலைக்கு அழைத்துச்செல்வார்களா? என்று காத்திருக்கிறார்கள். இவர்கள் அன்றாடக்கூலிகள். சமுதாயத்தின் அடிவிளிம்பில் இருக்கக்கூடிய மக்கள். அடிமைகளைவிட இவர்களின் நிலைமை மிக மோசமாக இருந்தது. அடிமைகளின் நிலைமை அவர்கள் இருக்கும் வீட்டின் நிலைமையைப்பொறுத்து மாறுபடும். உணவுக்கு அவர்களுக்கு கஷ்டம் இருக்காது. என்னதான் அடிமை வேலை செய்ய வேண்டியிருந்தாலும், பட்டினி நிலைமை இருக்காது. ஆனால், இங்கே சொல்லப்படுகிற அன்றாடக்கூலிகளின் நிலைமை அப்படி அல்ல. உழைத்தால் தான் உண்ண முடியும் என்ற நிலைமை. கடுமையாக நாள் முழுவதும் உழைத்தாலும், அரைவயிற்று உணவு தான் அவர்களுக்கு கிடைக்கும். ஒருநாள் வேலையில்லை என்றாலும், அவர்களின் குடும்பமே பட்டினி கிடக்க வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட தொழிலாளர்களைத்தான் இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கிறோம். சீடர்கள் இயேசுவோடு தொடக்கமுதலே இருப்பதால் அவர்களுக்குத்தான் முதல் உரிமை என்பதல்ல. கிறிஸ்துவை, கிறிஸ்துவின்...

உடன் பணியாளர்களாக…

இன்றைய நற்செய்தியிலே (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-3), இயேசுவின் பணிவாழ்வில் அவரோடு உடனுழைத்தவர்களைப் பற்றிய செய்திகள் நமக்கு தரப்பட்டிருக்கிறது. இயேசுவின் திருத்தூதர்கள் மற்றும் பெண் சீடர்களைப்பற்றியும், அவர்கள் யார்? என்பது பற்றியும், நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். இயேசு தனிமனிதராக பணி செய்யவில்லை. அவருடைய பணிவாழ்வில் பலருக்கும் பங்கு இருந்ததை இது நமக்கு தெளிவாக்குகிறது. இந்த உலகத்தில் பொதுநலத்தோடு மற்றவர்களுக்கு உதவக்கூடிய மனிதர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதல் வகையான மக்களுக்கு, களத்தில் இறங்கி உதவி செய்ய முடியாது. இதற்கு அவர்களது பணி, குடும்பம், சூழ்நிலை தடையாக இருக்கலாம். ஆனால், தங்களால் இயன்றதை பொருளாகவோ, பணமாகவோ கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள். அதில் அவர்களுக்கு நிறைவு இருப்பதாக உணர்கிறார்கள். இரண்டாவது வகையான மக்களும் நேரடியாக முழுநேரத்தையும், முழுமூச்சியோடு இறங்க வாய்ப்பில்லாதவர்கள். ஆனால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தங்களது உடனிருப்பு மூலமாக, சிறு,சிறு உதவிகள் மூலமாக எப்போதும் பொதுநலனோடு உழைத்துக்கொண்டிருக்கிறவர்கள். மூன்றாவது வகையான மக்கள், முழுக்க முழுக்க மக்களுக்காக,...

இயேசு தரும் வாழ்வு

எங்கே இயேசு, பாவிகளோடும், வரிதண்டுபவர்களோடும் விருந்து உண்கிறார்? யாருடைய வீட்டில் இந்த விருந்து நடைபெற்றது? லூக்கா நற்செய்தியாளர் இந்த விருந்து, மத்தேயுவின் வீட்டில் நடைபெற்றதாக குறிப்பிடுகிறார். ஆனால், மத்தேயு மற்றும் மாற்கு, இந்த விருந்து இயேசுவின் இல்லத்திலோ அல்லது அவர் தங்கியிருந்த வீட்டிலோ நடைபெற்றிருக்கலாம் என்று சொல்கிறார்கள். ஒருவேளை, அவர்கள் சொல்வது போல், இயேசுவின் இல்லத்தில் என்றால், அது கூடுதலான சிந்தனையையும் நமக்குத்தருகிறது. “அழைத்தல்“ என்கிற வார்த்தைக்கான பொருளாக, விருந்தினர்களை இல்லத்திற்கு அழைப்பது என்பது பயன்படுத்தப்படுகிறது. இயேசு சொல்கிறார்: நீங்கள் விருந்தினர்களாக தற்புகழ்ச்சி உள்ளவர்களையும், அதிகாரவர்க்கத்தினரையும் அழைக்கிறீர்கள். நானோ, தங்கள் குற்றங்களை நினைத்து வருந்துகிறவர்களையும், திருந்துவதற்கு வாய்ப்பிற்காக காத்திருக்கிறவர்களையும் அழைக்கிறேன். ஆம், இயேசு மற்றவர்களை தீர்ப்பிடுவதற்காக அல்ல. மாறாக, அனைவரையும் ஒருங்கிணைத்து, அவர்களை நல்வழி செல்ல, வாய்ப்பு வழங்கக்கூடியவராக இருக்கிறார். அதற்காகத்தான் அவர் வந்திருக்கிறார். இயேசுவை உண்மையாக நாம் தேட வேண்டும். உண்மையான உள்ளத்தை வெகுஎளிதாக இயேசு கண்டறிந்துவிடுகிறார். அவர் நாம்...

கடவுளின் அன்பு அளவில்லாதது

கடவுள் மனிதர்களைப் படைத்தபோது, அவர்களுக்கான சுதந்திரத்தையும் கொடுத்தார். அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? என்பதையும் கற்றுக்கொடுத்தார். கடவுள் ஒருபோதும், தனது எண்ணத்தை மனிதர்கள் மீது புகுத்தியது கிடையாது. அவர்களுக்கான சுதந்திரத்தில் எப்போதும் அவர் தலையிட்டதும் கிடையாது. ஆனால், மனிதன் எப்போதுமே, தனது சுதந்திரத்திரத்தைத் தவறாகத்தான் பயன்படுத்தியிருக்கிறான். பயன்படுத்திக்கொண்டிருக்கிறான். சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்த, மனித இனம் இன்னும் முறையாகக் கற்றுக்கொள்ளவில்லை. அதனுடைய வெளிப்பாடுதான் இன்றைய நற்செய்தி வாசகம். இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு பரிசேயர்களையும், மறைநூல் அறிஞர்களையும் பார்த்து, அவர்களை எந்த தலைமுறையினருக்கு ஒப்பிடுவேன்? என்று ஆழ்ந்த அனுதாபத்தோடு பேசுகிறார். ஒவ்வொரு முறையும் அவர்கள் கடவுளின் திட்டத்திற்கு குறுக்கே நிற்கிறார்கள். ஒவ்வொரு முறையும் கடவுளின் அன்பையும், அவரது குரலையும் புறக்கணித்துக்கொண்டிருக்கிறார்கள். தன் கண்முன்னாலே, தான் அன்பு செய்கிறவர் தவறு செய்கிறபோது, தவறு என்று தெரிந்தும் அதைச் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறபோதுதான், அதன் வலி நமக்குத்தெரியும். கடவுளும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான்...

மன்னிக்கும் மனதைப்பெற….

பாவங்களை நாம் மூன்று வகையாகப் பார்க்கலாம். நாம் கடவுளுக்கு எதிராக செய்யக்கூடிய பாவங்கள் முதல் வகை. கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார். ஆனால், நாம் நன்றியுணர்வு இல்லாமல், அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் பலவேளைகளில், அவருக்கு எதிரான காரியங்களில் இறங்கியிருக்கிறோம். அவை கடவுளுக்கு எதிரான பாவங்கள். இரண்டாவது, நம்மோடு வாழக்கூடிய நம்முடைய சகோதர, சகோதரிகளுக்கு எதிராக நாம் செய்யக்கூடிய பாவங்கள். நாம் மட்டும் தான் வாழ வேண்டும் என்கிற சுயநலத்தோடு நாம் செய்யக்கூடிய பாவங்களை இந்த வகையில் உள்ளடக்கலாம். மற்றவரைப்பற்றி கவலைப்படாமல், நமது வாழ்வு, நமது குடும்பம் என்ற குறுகியமனப்பான்மை நம்மை பாவத்திற்கு அழைத்துச் செல்கிறது. மூன்றாவது வகையான பாவம், மற்றவர்கள் நமக்கு எதிராகச் செய்வது. நாம் சுயநலத்தோடு இருப்பது போல, மற்றவர்களும் சுயநலத்தோடு வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதன்பொருட்டு, நமக்கு எதிராக பாவம் செய்கிறார்கள். இதிலே, நற்செய்தியில் நாம் கடவுளுக்கு எதிராக செய்யக்கூடிய பாவங்களையும், மற்றவர்கள் நமக்கு எதிராக செய்யக்கூடிய...