Tagged: இன்றைய சிந்தனை

இரக்கப்படுவோருக்கு இறப்பில்லை

மத்தேயு 12:1-8 மனிதர்களாகிய நாம் பெரும்பாலும் இந்த உலகத்தை விட்டு போக விரும்புவதில்லை. இந்த உலகத்திலே நிலையாக வாழ வேண்டும் என்ற பேராசை அதிகமாக இருக்கிறது. இறப்பு வேண்டாம் என கடவுளிடம் போரட்டம் நடத்துபவர்கள் பலர் இருக்கிறார்கள். இறப்பில்லா வாழ்க்கை வேண்டும் என ஆசைப்படும் அத்தனை பேருக்கும் இன்றைய நற்செய்தி இனிப்புச் செய்தியாக வருகிறது. மனிதர்கள் இறக்காமல் வாழந்துக்கொண்டே இருக்கலாம். தலைமுறைதோறும் வாழ்ந்துக்கொண்டே இருக்கலாம். எப்படி? இரக்க உள்ளம் படைத்தவர்கள் வாழ்ந்துக்கொண்டே இருக்கலாம். அவர்கள் உடல் அழியலாம் ஆனால் அவர்களின் இரக்க உள்ளம் அழிவதில்லை. அவர்களுக்கு இறப்பில்லை. வாழ்நாட்களில் நாம் அரக்கத்தனமாக பல வேளைகளில் நடக்கிறோம். பல வேளைகளில் அமைதியை அழிக்கிறோம். பகைமையை வளர்க்கிறோம். இப்படி வாழ்கிற நாம் வாழ்வதில்லை. இறந்து போகிறோம். இப்படி இருப்பது நல்லதல்ல. இரக்கத்தோடு இருப்போம். இறக்காமல் இருப்போம். மனதில் கேட்க… • நான் அரக்கத்தனமாக இருப்பது எனக்கு அழகா? • இறக்காமல் இருக்க ஆசை இருக்கிறதா?...

நீங்கள் சுறுசுறுப்பானவரா? அல்லது தளர்வுற்றவரா?

மத்தேயு 11:28-30 நீங்கள் சுறுசுறுப்பானவரா? அல்லது தளர்வுற்றவரா? என்ற கேள்வியோடு நாம் கருத்துக்கணிப்பு நடத்தினால் வாழ்க்கையில் பல மனிதர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவதில்லை. மாறாக தளர்வுற்றவர்கள் தான் என்பது தெரிய வரும். வாடிய முகத்தோடு அவா்கள் நடப்பதைப் பார்க்கின்றபோது அவர்களிடத்தில் ஆற்றல் தீர்ந்துபோய் விட்டது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. உங்களிடத்திலே சுறுசுறுப்பாக செயல்படுவதற்கான ஆற்றல் தீர்ந்துவிட்டது என்றால் கவலை வேண்டாம். அந்த ஆற்றலைப் பற்றித்தான் இன்றைய நற்செய்தி வாசகம் பேசுகிறது. அந்த ஆற்றலை தருபவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பெருஞ்சுமைகளை இறக்கி வையுங்கள். கவலைகளை கொட்டுங்கள். சோகங்களை சொல்லுங்கள். உங்கள் துயரத்தின் புலம்பலை பற்றி பேசுங்கள். கவலை, சோகம், துயரம், பிரச்சினை, நோய் இவைகள் தானே உங்கள் ஆற்றலை உங்களிடமிருந்து பிடுங்கியது. அதனால்தானே நீங்கள் தளர்வுற்றுப் போனீர்கள்? அதைப்பற்றி கவலைப்படாதீர்ள். இப்போது எல்லாவற்றுக்கும் இளைப்பாறுதல் பெறுங்கள். அனைத்து ஆற்றலையும் அள்ளுங்கள். நிறைய அள்ளுங்கள். ஆண்டவரே அந்த ஆற்றல். மனதில் கேட்க… •...

ஆண்டவரின் கருவி அசீரியா ! (முதல் வாசகம்)

அசீரியர்கள் இஸ்ரயேல் மக்களைத் தோற்கடித்து, அடி பணியச் செய்த நிகழ்ச்சியை இறைவனின் பார்வையில் பார்த்து, பொருள் கொள்கிறார் எசாயா இறைவாக்கினர். இஸ்ரயேல் இறைவனைவிட்டுப் பிரிந்து சென்றதால், அதற்கு ஒரு பாடம் கற்றுத் தரும் நோக்குடன், அசீரியாவைத் தனது கருவியாக இறைவன் பயன்படுத்தினார் என்று சொல்கிறார் எசாயா. சில நேரங்களில் நமது வாழ்விலும் இதுபோன்று நிகழலாம். நாம் மனம் திரும்ப வேண்டும், இறைவனிடம் திருந்தி வரவேண்டும் என்பதற்காக, நமது எதிரிகளைக் கருவியாகப் பயன்படுத்துகிறார் இறைவன். நம்மைத் தாழ்வுக்கு உட்படுத்துகிறார். இவ்வாறு, அனைத்தும் இறைவனின் திருவுளப்படியே நிகழ்கின்றன என்னும் ஞானத்தை எசாயாவிடமிருந்து இன்று நாம் கற்றுக்கொள்கிறோம். நமக்குத் துன்பம் இழைக்கின்றவர்கள்கூட, இறைவனின் அனுமதியோடுதான் செயல்படுகின்றார்கள் என்பது ஒரு விடுதலை தரும் எண்ணம். மன்றாடுவோம்: தீமையையும் உமது கருவியாகப் பயன்படுத்தும் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் ஆணவத்தை அடக்கி, உம் பக்கம் எங்கள் இதயங்களைத் திருப்பவே, நீர் தீமைகளை, தோல்விகளை, அவமானங்களை எங்கள் வாழ்வில் அனுமதிக்கிறீர்...

தீமைக்கு விடைகொடு … கடவுளின் துயருக்கு பதில்கொடு

மத்தேயு 11:20-24 பழைய ஏற்பாட்டில் கடவுள் கவலையடைந்தார். மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது. இதை தொடக்கநூல் 6:5-6 வரையுள்ள இறைவார்த்தைகளில் வாசிக்கிறோம், “மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார். மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது”. புதிய ஏற்பாட்டில் குறிப்பாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கவலையடைகிறார். மனம் வருந்துகிறார். உள்ளம் உடைந்துப்போகிறார். கொராசின், பெத்சாய்தா மற்றும் கப்பர்நாகும் நகர்களில் தீமை பெருகியதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளில் நாள் முழுவதும் தீமை உருவானதையும் அவர் கண்ணாரக் கண்டதால் கலங்கி நிற்கிறார். அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள் என்பதற்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்து பல வல்ல செயல்களை அந்நகர்களில் செய்தார். அவையெல்லாம் பலனில்லாமல் போயிற்று. அவருடைய எதிர்பார்ப்பு எல்லாம் எரிந்து சாம்பலானது. நம் ஒவ்வொருவரையும் வரலாறு படைக்க வேண்டும் என்ற...

உங்கள் கட்டிடத்தை கட்டியது கடவுளா?

கார்மல் அன்னை திருவிழா அனைவருக்கும் கார்மல் அன்னை திருவிழா நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கார்மல் அன்னையின் பாதுகாப்பும் பரிந்துரையும் உங்களுக்கு என்றென்றும் கிடைப்பதாக! அன்னை மரியாள் என்ற கட்டிடத்தை கட்டியது கடவுள். அவர் ஒரு கட்டிடக் கலைஞர். அன்னை மரியாளின் கனவுகள், எதிர்காலம், தேவைகள், சாதனைகள் என அனைத்தையும் கட்டியது கடவுளே. அதற்கான முழு பொறுப்பையும் அன்னை மரியாள் கடவுளிடத்தில் கொடுத்துவிட்டார்கள். அதைத்தான் லூக் 1:38 ல் “நான் ஆண்டவரின் அடிமை உமது விருப்பப்படி எனக்கு நிகழட்டும்” என்கிறார் அன்னை மரியாள். ஆண்டவரே நான் உம்மிடம் என்னை தந்துவிட்டேன் நீர் என் உடலாகிய கட்டிடத்தை கட்டும் என்கிறார். அவர் கொடுத்ததால் கடவுள் மிகவும் எழில்மிக்கதாய் கட்டினார். எல்லோரும் போற்றும் வண்ணம் கட்டினார். நம்முடைய வாழ்வில் ஏன் முன்னேற்றம் இல்லை? காரணம் நாம் நம் உடலாகிய கட்டிடத்தை, கடவுளின் பொறுப்பில் ஒப்படைக்கவில்லை. நம் வாழ்க்கையின் பொறுப்பை கடவுளிடத்தில் கொடுக்கவில்லை. மாறாக நாமே எடுக்கிறோம்....