Tagged: இன்றைய சிந்தனை

எது வேண்டும்: அங்கலாய்ப்பா? ஆசீர்வாதமா?

மத்தேயு 13:36-43 “விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே! உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!. உமது ஆட்சி வருக!” என நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஜெபித்தார். தந்தையின் ஆட்சியை இம்மண்ணுலகில் நிறுவுவதே இயேசுவின் திருவுளம். தந்தையின் ஆட்சிக்கு யாரெல்லாம் உதவி செய்கிறார்களோ அவர்கள் இயேசுவிடம் இருந்து பாராட்டு பெறுவர். யாரெல்லாம் இடறலாக இருக்கிறார்களோ அவர்கள் தண்டனை பெறுவர். அங்கலாய்ப்பா? நம் வாழ்க்கையில் அங்கலாய்ப்பையும், அழுகையையும் உருவாக்குவது அலகையே. அலகை ஆட்சி செய்வதால் இருளிலே ஒருசிலரின் பயணம் போகிறது. குணங்களும் பேய் குணங்கள் தான் இவர்களிடம் நிறைந்து காணப்படுகின்றன. அலகையின் பிடியில் சிக்கிக்கொள்பவா்கள் கடவுளின் ஆட்சிக்கு தங்கள் பங்களிப்பை தருவதில்லை. அலகையின் விருப்பப்படி இவர்கள் ஆடுவதால் வாழ்க்கை திண்டாட்டமாகவே இவர்களுக்கு அமைகிறது. ஆசீர்வாதமா? கடவுளின் ஆட்சிக்கு உதவி செய்கிறவர்கள் கதிரவனைப்போல் ஒளி வீசுவர். இறைவனிடம் நெருங்கி இருப்பதால் இவர்களுக்கு ஆசீர்வாதக்கதவுகள் திறந்தே இருக்கின்றன. நற்குணங்களால் இவர்கள் பலர் வாழ்வில் வெளிச்சமாக திகழ்கின்றனர். ஆண்டவர்...

கடுகு, புளிப்பு மாவு : தைரியம் தரும் தைலங்கள்

மத்தேயு 13:31-35 மனிதர்களுக்கான பல பிரச்சினைகளில் தாழ்வு மனப்பான்மை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. தாழ்வு மனப்பான்மை என்பது நான் சிறியவன், சிறந்தவன் அல்ல என்பதிலிருந்து உதயமாகிறது. இந்த தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களுக்கு தைரியம் கொடுக்கும் தைலமாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். கடுகு உருவில் சிறியது ஆனால் சிறந்தது என்பதை தன் வாழ்க்கையில் எடுத்துக் காட்டுகின்றது. கடுகு தனக்குள்ளே இருக்கும் சக்தியை உணா்ந்ததால் வானத்துப் பறவைகள் தங்கும் அளவுக்கு தன்னுடைய பிரம்மாண்டமான சக்தியை அந்த சிறிய விதை வெளிக்கொணர்கின்றது. புளிப்பு மாவு கண்ணுக்கு புலப்படாதது. ஆனால் சிறந்தது என்பதை தன் வாழ்க்கையில் எடுத்துக் காட்டுகின்றது. மாவு முழுவதையும் புளிப்பேற்றும் தன்னுடைய பிரம்மாண்டமான சக்தியை வெளிப்படுத்துகின்றது. நமக்குள்ளே கடவுள் கொடுத்த பிரம்மாண்டமான சக்தி இருக்கிறது. அதை கண்டுபிடிப்போம். அதை உசுப்பிவிடுவோம். மிகவும் சிறியவைகள் இப்படி செய்கிறது என்றால் ஏன் நம்மால் செய்ய முடியாது? எல்லாமே முடியும். நம்மை ஆட்டிப்படைக்கும் தாழ்வு மனப்பான்மையை தரை...

பதவிக்கான ஆசை உங்களை விரட்டுகிறதா?

யோவான் 6:1-15 திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் (போப் பெனடிக்ட் XVI), உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது திருத்தந்தையாக இருந்தவர் ஆவார். இவர் 1927 ஏப்ரல் திங்கள் 16 ஆம் நாள் பவேரியா, ஜெர்மனியில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் ராட்ஸிங்கர் என்பதாகும். 2005 ஏப்ரல் திங்கள் 19 ஆம் நாள் தனது 78 அகவையில் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார். இவர் மூனிச் உயர் மறைமாவட்டத்தின் கர்தினால்-பேராயராக செயல்பட்டு வந்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 264 திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பினார். இவர் தன் வாழ்வில் செய்த ஒரு சிறப்பான செயல் இன்றும் நம் மனக்கண் முன் நிற்கின்றது. ஒருபோதும் நாம் அதை மறக்க முடியாது. அது நம் அனைவருக்கான அழியா பாடம், அழகான பாடம். 2013 பிப்ரவரி மாதம் 28ம் தேதி திருத்தந்தை பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை வெளியிட்டு அறிக்கை ஒன்றை 11 பிப்ரவரி 2013...

களைகளுக்கு தேவை மூன்று சுற்றுலாக்கள்

மத்தேயு 13:24-30 சிறு குழந்தையாய் நாம் இருந்த போது களைகள் நமக்குள் இருப்பதில்லை. ஆனால் நாம் வளர வளர களைகளும் நமக்குள்ளே வளருகின்றன. களைகள் வருவது இயல்பு. ஆனால் அந்த களைகளை விரட்டுவது தான் புத்திசாலித்தனம். ஒரு புத்திசாலி எப்படி களைகளை விரட்ட முடியும் என்பதை நற்செய்தி வாசகம் நமக்கு சொல்லித் தருகிறது. களைகளை மூன்று வழிகளில் நாம் விரட்டலாம். 1. அமைதி சுற்றுலா அமைதியாக இருக்கும் போது தான் நாம் நம்மைப் பற்றி அறிகிறோம். நமக்குள்ளே இலவசமாக சுற்றுலா செல்கிறோம். இந்த இன்பச் சுற்றுலா நம்மை பற்றிய முழு அறிவையும் கொடுக்கிறது. நம் களைகள் அனைத்தையும் அமைதி சுற்றுலா நமக்கு முன்னே எடுத்து வைக்கிறது. 2. இயேசுவோடு சுற்றுலா அமைதி சுற்றுலாவில் களைகளை கவனமாய் கண்டறிந்த பிறகு தியானம் மேற்கொள்ள வேண்டும். அந்த தியானம் இயேசுவாடு சுற்றுலா செல்ல வாய்ப்பு கொடுக்கும். அதிலே நாம் இயேசுவிடம் மன்னிப்பு கேட்டு மனம்...

தேர்வில் வெற்றியா? மதிப்பெண் என்ன?

மத்தேயு 13:18-23 காலையில் கண்விழித்தது முதல் இரவு கண்களை மூடும் வரை இறைவார்த்தையானது நம் உள்ளத்திலே விதைக்கப்படுகிறது. அது பல வடிவங்களிலே விதைக்கப்படுகிறது. திருவிவியத்தைப் படிக்கும்போதும், அருட்தந்தையர்களின் மறையுரைகளைக் கேட்கும் போதும் ஒரு சில சான்றோர்கள் நம்மோடு உறவாடும் போதும் இறைவார்த்தையானது உள்ளத்திலே விதைக்கப்படுகிறது. விதைக்கப்பட்ட இறைவார்த்தையை எடுத்து அதை வாழ்ந்து காட்டுபவர்களை நாம் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவர்களின் மதிப்பெண்களையும் நாம் பார்க்கலாம். 1. முப்பது மதிப்பெண்கள் இவர்கள் இறைவார்த்தையை ஆர்வமாக கேட்கிறார்கள். ஆனால் கடைப்பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை சாத்தான் அவர்களிடமிருந்து எடுத்துவிடுவதால் எல்லாமே இடையிலே முடிந்துவிடுகிறது. இவர்களின் மதிப்பெண்கள் முப்பது. தோல்வியடைகிறார்கள். 2. அறுபது மதிப்பெண்கள் இவர்கள் இறைவார்த்தையை ஆர்வமாக கேட்கிறார்கள். கடைப்பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உண்டு. ஒருசிலவற்றை கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் இடையில் சாத்தான் தொந்தரவு கொடுப்பதால் அவர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்க முடிவதில்லை. இவர்களின் மதிப்பெண் அறுபது. ஏதோ தத்தி முத்தி வெற்றியடைந்து விடுகிறார்கள்....