Tagged: இன்றைய சிந்தனை

மிகவும் முக்கியமான நபராக(VIP) நீங்கள் மாறலாம்…

மத்தேயு 13:10-17 நாம் அனைவரும் நன்கு அறிந்தபடி, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உவமைகள் வாயிலாக போதித்தார். அவர் போதனைகள் அனைத்தும் நம்மை செதுக்கி சீராக்கி நல்வாழ்விற்கு இட்டுச்செல்ல. நம் உடலில் அழுக்குகள், ஆபத்துக்கள் வந்து சேராமல் அணை போட வேண்டும் என்பதற்காக. மிகவும் குறிப்பாக நம் உடலிலுள்ள மூன்று உறுப்புகளில் அழுக்குகள் வந்து சேராமல் நாம் கருத்தாய் கவனமாய் இருந்தோம் என்றால் நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி, ஆர்ப்ரிப்பு, ஆனந்தம் வந்து சேர்ந்துக்கொண்டே இருக்கும். மிகவும் முக்கியமான நபராக(VIP) நாம் மாறலாம். கண், காது மற்றும் இதயம் இந்த மூன்றையும் பயன்படுத்தி மிகவும் முக்கியமான மனிதராக நாம் மாறலாம். ஒவ்வொன்றின் படைப்பின் முக்கிய அர்த்தத்தை உணர்ந்து பயன்படுத்தினால் அதன் பலன் நமக்கு பல மடங்கு கிடைக்கும். 1. ஆற்றல் நிறைந்த கண்கள் கண்களைக் கொண்டு புத்தகங்கள் வாசித்து நல்ல அறிவாளியாக, அறிஞராக மாறலாம். நல்லதைப் பார்த்து கவிதை எழுதி கவிஞராக உருவாகலாம்....

புனித பெரிய யாக்கோபு திருவிழா

புனித பெரிய யாக்கோபு திருவிழா பெரிய யாக்கோபு – பெரிய பணக்காரர் மத்தேயு 20:20-28 இன்று பெருமகிழ்வோடு நாம் புனித பெரிய யாக்கோபு நினைவு நாளைக் கொண்டாடுகிறோம். இவர் பெரிய யாக்கோபு என்றும் சந்தியாகப்பர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் பெத்சாய்தா ஊரைச் சார்ந்த செபதேயு, சலோமி ஆகியோரின் மகன். ஏன் இவரை பெரிய யாக்கோபு என்று அழைக்கின்றனர் என்பதற்கு, மற்றவர்களை விட வயதில் மூத்தவராக இருந்தவர். பெரிய உடல்வாகு உடையவர். அல்பேயுவின் மகன் யாக்கோபுவுக்கு முன்னதாக இயேசுவினால் அழைக்கப்பட்டவர் போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இவ்வுலகில் வாழும் மனிதர்கள் பெரிய பணக்காரர்களாக மாற வேண்டும் என அதிகமாக ஆசைப்படுகின்றனர். அதற்காகவே வாழ்நாள் முழுவதும் செலவழிக்கின்றனர். செலவழித்த பின் அமைதியின்றி, அனந்தமின்றி அலைகின்றனர். இதன் விளைவாக வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் என சோகப் பாடல்களை பாடிக் கொண்டு திரின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் புனித பெரிய யாக்கோபு விழா நம்மை பெரிய...

உறவுகளோடு உறவாடுவதில் வித்தியாசம் நல்லதா?

நாம் எல்லா உறவுகளையும் சரிசமமாக பார்ப்பதில்லை. அறவே தெரியாதவர்களோடு நம் உறவு என்பது மிகவும் தூரமாக இருக்கும். ஓரளவு தெரிந்தவர்களோடு நமது உறவு ஓரளவு நெருக்கமாக இருக்கும். நண்பர்களோடு நம் உறவு பக்கமாகவே இருக்கும். நம் உடன்பிறப்புகளோடு நம் உறவைப் பற்றி சொல்லவே வேண்டாம் அது மிகவே நெருக்கமாக இருக்கும். நம் உறவுகளை வைத்து நம் பழக்கத்தில் வித்தியாசத்தை வெளிப்படுத்துகிறோம். இப்படிப்பட்ட வித்தியாசத்தை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதை சிறிது மாற்றலாம் என ஒரு வித்தியாசமான சிந்தனையைக் கொண்டு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து மக்கள் கூட்டத்தோடு பேசிக்கொண்டிருக்கும் போது அவருடைய தாய் மற்றும் சகோதரர்கள் வருகிறார்கள். அவர்களுடைய வருகையானது அவருக்கு சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் அவரது உள்ளம் உயர்ந்து போகவில்லை, குரலில் ஆனந்த சத்தம் கேட்கவில்லை. அவர் இயல்பாகவே இருந்தார். ஒரு வித்தியாசத்தை வெளிப்படுத்தவில்லை. உறவுகளிலே எல்லாருக்கும் ஒரே முக்கியத்துவத்தை அவர் கொடுத்தார். அவருடைய குடும்பத்திற்கென்று சிறப்பான வரத்தையோ,...

பெற்றுக்கொண்டோர் பேறுபெற்றோர்

பெற்றுக்கொண்டு கொடுப்பதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை என்கிற விழுமியத்தை நமக்குக் கற்றுக்கொடுக்கிற அருமையான பகுதி. நாம் கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய செல்வங்கள் அனைத்துமே பயன்படுத்துவதற்கும், மற்றவர்களுக்கு பயன்படுவதற்கும் தான் என்பதை நாம் உணர, இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்புவிடுக்கிறது. இயேசு தனது சீடர்களை நற்செய்திப் பணிக்கு அனுப்புகிறார். அவர்களுக்கு தேவையான வல்லமையைக் கொடுக்கிறார். நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு, தீய ஆவிகளை ஓட்டுவதற்கு, நற்செய்தியை துணிவோடு அறிவிப்பதற்கு, அவர்களை தயாரித்து அனுப்புகிறார். சீடர்கள் இயேசுவிடமிருந்து வல்லமையைப் பெற்றுக்கொண்டது, தாங்களே வைத்திருப்பதற்காக அல்ல, அதை மற்றவர்களுக்கு கொடுப்பதற்காகத்தான். அந்த வகையில், இயேசுவின் சீடர்கள் அதனை நிறைவாகச் செய்கிறார்கள். அதில் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். காரணம், பெற்றுக்கொண்டு, கொடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை அவர்கள் அனுபவித்துவிட்டார்கள். கிறிஸ்தவ வாழ்வு என்பது, கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்டு, மற்றவர்களுக்கு கொடுப்பதுதான். இன்றைக்கு இருக்கிற அரசியல்வாதிகள், அரசியலை ஒரு வியாபாரமாகப் பார்க்கிறார்கள். நான் தேர்தலில் இவ்வளவுக்கு முதலீடு செய்கிறேன். நான் எவ்வளவுக்கு வாரிச்சுருட்ட முடியுமோ, அவ்வளவுக்கு சுருட்ட வேண்டும்....

இயேசுவின் மறைப்பணி உத்தி

“பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்” என இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகிறது. “கூக்குரலிட மாட்டார். தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நீதியை வெற்றிபெறச் செய்யும்வரை நெரிந்த நாணலை முறியார்” என்னும் எசாயா இறைவாக்கினரின் வாக்கு நிறைவேறியதாக வாசகம் முடிகிறது. ஒரு பக்கம் இயேசு பரிசேயரின் சூழ்ச்சியை அறிந்தவராய், அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்கிறார். தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேசவேண்டாம் என்று தாம் குணமாக்கியவர்களிடம் கண்டிப்பாகச் சொன்னார். ஆனால், அதே வேளையில் தமது குணமாக்கும், நற்செய்தி அறிவிக்கும் பணியையும் சென்றவிடமெல்லாம் தொடர்ந்து ஆற்றினார். இதையே நாம் அவரது மறைப்பணி உத்தி என்று அழைக்கலாம். பரிசேயர்களுக்கு அஞ்சி, தமது பணியை இயேசு கைவிட்டுவிடவில்லை. ஆனால், இயன்றவரையில் அவர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் தம்மைக் காத்துக்கொண்டார். தமது “நேரம் வரும்வரையில்” தாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும், வீணாகச் சிக்கிக்கொண்டு, பணி செய்யும்...