Tagged: இன்றைய சிந்தனை

அனைத்து தெய்வங்களே! ஆண்டவரைத் தாழ்ந்து பணியுங்கள்

திருப்பாடல் 97: 1, 2b, 6, 7c, 9 கடவுள் ஒருவர் என்பது நமது நம்பிக்கை. ஆனால், இன்றைய திருப்பாடலில், பல தெய்வங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை எப்படி புரிந்து கொள்வது? இங்கே சொல்லப்படக்கூடிய தெய்வங்கள் யார்? இஸ்ரயேல் மக்களைப் பொறுத்தவரையில், கடவுளைப்பற்றிய அவர்களது நம்பிக்கை இதுதான். அவர்கள் மற்ற தெய்வங்களை புறக்கணிப்பது கிடையாது. ஆனால், அவர்கள் “யாவே“ இறைவனை மட்டும் நம்பினார்கள். தங்களது யாவே இறைவன் தான், எல்லா தெய்வங்களுக்கும் தலைமையாக இருக்கிறவர் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். மத்திய கிழக்குப் பகுதிகளில் இருந்த நாடுகள் அனைத்திலும், தங்களுக்கென்று ஒரு காவல் தெய்வங்களை வணங்கி வந்தார்கள். பாபிலோனியர்கள் தங்களுக்கென்று ஒரு தெய்வத்தை வழிபட்டார்கள். அமலேக்கியர்களுக்கென்று ஒரு தெய்வம் இருந்தது. இவர்கள் அனைவருடைய வல்லமையும், அந்த நாட்டின் எல்கைக்குள்ளாக மட்டுமே இருப்பதாக, மக்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கை இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இஸ்ரயேல் மக்கள், யாவே இறைவன் ஒருவர் தான் எல்கைகளைக்...

நமது திருமுழுக்கை நினைவுகூர்வோம் !

இன்று ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு விழா. இவ்விழாவில் தந்தை இறைவனாலும், தூய ஆவியாலும் வலிமைப்படுத்தப்பட்டார். அவரது பணிவாழ்வின் தொடக்கமாக அவரது திருமுழுக்கு அமைந்தது. இந்த நாளில் நாம் நமது திருமுழுக்கைக் கொஞ்சம் நினைவுகூர்வோமா? நாம் திருமுழுக்கு பெற்ற அன்று பின்வருவன நடைபெற்றன: 1. தந்தை இறைவன் நம்மை ஆண்டவர் இயேசு வழியாகத் தமது சொந்தப் பிள்ளைகளாக்கிக் கொண்டார். அன்றிலிருந்து நாம் இறைவனின் பிள்ளைகள். இந்த உணர்வோடு நான் வாழ்கிறேனா? இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேனா? 2. நாம் திருச்சபையின் உறுப்பினர்களானோம். தாய்த் திருச்சபையின் அன்புப் பிள்ளையாக நான் வாழ்கிறேனா? திருச்சபைக்குரிய கடமைகளை நான் நிறைவேற்றுகிறேனா? 3. திருமுழுக்கால் நற்செய்தி அறிவிக்கும் கடமையைப் பெற்றோம். அந்தக் கடமையை நான் ஆற்றுகிறேனா? எனது நற்செய்தி அறிவிக்கும் பணி என்ன என்பது பற்றிச் சிந்தித்து, ஏதாவது செய்கிறேனா? ஆண்டவரின் திருமுழுக்கு நாளில் நமது திருமுழுக்கை நினைவுகூர்ந்து, நமது கடமைகளை ஆற்ற முன்வருவோம். மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா,...

இயேசுவின் பரந்த மனம்

இன்றைய நற்செய்தியில் இயேசுவைப் பார்த்து, தொழுநோயாளி, நீர் விரும்பினால் குணமாவேன் என்று சொல்கிறான். இயேசு தாமதிக்கவில்லை. உடனடியாக, “விரும்புகிறேன், குணமாகு“ என்று சொல்கிறார். இயேசு நாம் நோயிலும், துன்பத்திலும் அவதியுற வேண்டும் என்று ஒருநாளும் நினைத்தது இல்லை. நாம் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார். அவரே இந்த உலகத்திற்கு நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மனிதனாக வந்தார். நாம் குணம்பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறபோதெல்லாம், அவர் குணம் கொடுத்தார். ஓய்வுநாள் என்று கூட பார்க்கவில்லை. அதனால், தான் பலரது எதிர்ப்புக்களையும், ஏளனங்களையும் சந்திக்க வேண்டியது வரும், என்பது பற்றி அவர் கவலை கொள்ளவும் இல்லை. நன்மை என்றால் நினைத்தமாத்திரத்தில் அதை செய்து முடித்தார். பலவேளைகளில் நாம் கடவுள் எனக்கு துன்பத்தைக் கொடுக்கிறார். நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் கடவுள் தான் காரணம், என்று பதில் தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறபோது, கடவுளை பதிலாக நினைக்க ஆரம்பிக்கிறோம். ஆனால், அது உண்மையல்ல. கடவுள் நாம் அனைவரும்...

ஆண்டவரே, நீர் விரும்பினால் என் நோயை நீக்க உம்மால் முடியும்” (லூக்கா 5:12)

— விவிலியத்தைப் புரட்டும்போது நம்பிக்கை என்னும் ஆழ்ந்த சக்தியோடு செயல்பட்ட பல ஆண்களையும் பெண்களையும் நாம் சந்திக்கிறோம். ஆபிரகாம் ”நம்பிக்கையின் தந்தை” என அழைக்கப்படுகிறார். கடவுள் தம் வாக்கில் தவறாதவர் என்றும் தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறமாட்டார் என்றும் ஆபிரகாம் முழுமையாக நம்பினார். அதுபோல, இயேசுவைச் சந்தித்த மனிதருள் பலர் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்ததை நாம் காண்கிறோம். அதிசய செயல்களைப் புரிந்த போதெல்லாம் இயேசு மக்களிடமிருந்த நம்பிக்கையே அச்செயல்கள் நிகழக் காரணம் என்று கூறினார். மக்கள் நம்பிக்கை இல்லாதிருந்தபோது அவர்கள் நடுவே இயேசு அதிசய செயல்களை ஆற்ற இயலாமல் போயிற்று. தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இயேசுவை நோக்கி, ”ஆண்டவரே, நீர் விரும்பினால் என் நோயை நீக்க உம்மால் முடியும்” (லூக் 5:12) என்று மன்றாடினார். இந்த மனிதரின் வார்த்தையில் நம்பிக்கை துலங்குவதை நாம் எளிதில் காணலாம். அவர் தம் விருப்பம் நிறைவேற வேண்டும் என்று கேட்கவில்லை. மாறாக, இயேசுவின் விருப்பம்...

ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்

தொடர்ந்து மூன்றாவது நாளாக அரசத் திருப்பாடலான திபா 72 ஐயே பதிலுரைப் பாடலாகப் பாடுகிறோம். “ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்” என்பதையே பல்லவியாக வேண்டுகிறோம். இன்று 14, 15, 17 என்னும் மூன்று வசனங்களையும் நாம் நம்முடைய சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம். “அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார். அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது” என்றும், “அவருக்காக இடையறாது வேண்டுதல் செய்யப்படுவதாக. அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு நாள் முழுதும் மன்றாடப்படுவதாக! அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைத்திருப்பதாக! அவர் மூலம் மனிதர் ஆசிபெற விழைவாராக. எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக” என்னும் வரிகள் இன்று நம் கவனத்தை ஈர்;க்கின்றன. பொதுவாக இந்தத் திருப்பாடல் சாலமோன் மன்னனைக் குறித்தாலும், மேற்சொல்லப்பட்ட வரிகள் சாலமோனைவிட இயேசுவுக்கே அதிகம் பொருந்துகின்றன. எனவே, “மெசியாவின் திருப்பாடல்” என இதனை அழைக்கின்றனர் விவிலிய அறிஞர்கள். இதன் காரணமாகவே,...