Category: இன்றைய சிந்தனை

தயங்காதே! தளராதே!

மாற்கு 10:46-52 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 30ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்புமிக்கவர்களே! இளம் தொழிலதிபர் ஒருவரின் வெற்றி கதையை உங்களுக்குச் சொல்கிறேன். சீனநாட்டைச் சார்ந்தவர் அவர். தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்து சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆனவர். அவர்தான் ஜாக் மா. இவர்தான் அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர். 2016 ஆம் ஆண்டில் உலகின் 33 வது கோடிஸ்வரர் இவர். தோல்விகளைக் கண்டு தயங்காத அவர் உள்ளம் நமக்கு ஆச்சரியத்தை தருகிறது. தொடர் முயற்சிகளை எடுக்க தவறாத அவரின் தாராள இதயம் நம் அனைவரின் கவனத்தை ஈர்க்கிறது. அவரின் வெற்றிக்கான படிக்கட்டுகள் பல. வாருங்கள் படிக்கட்டுகளைப் பார்க்கலாம். அவை ஒவ்வொன்றும் நமக்கு பசுமையான பாடங்களளே.  30 முறை வெவ்வேறு வேலைகளுக்கு விண்ணப்பித்து 30லும்...

கடவுளின் கருணை

இந்த உலகத்தில் விபத்துக்களில் மனிதர்கள் சிக்கி இறக்கிறபோது, குறைந்த வயதில் வாழ்வை இழக்கிறபோது, நமது மனித சிந்தனையில் எழுவது, இவர்கள் முற்பிறவியில் ஏதோ தவறு செய்திருக்க வேண்டும். எனவே தான், இவர்கள் இந்த பிறவியில் வாழ்வை முடிக்க இயலவில்லை என்பது. ஆனால், இறப்பிற்கும் வாழ்விற்கும் தொடர்பில்லை என்கிற கருத்தை இயேசு சொல்கிறார். இறப்பு யாரையும் எப்போதும் தழுவலாம். இறப்பு எப்போது, யாருக்கு, எங்கே வரும் என்பது தெரியாது. நாம் உயிர் வாழ்வதால், நாம் புனிதர்கள் என்று நினைக்க வேண்டாம். ஒருவேளை அதுவே கடவுள் நாம் மனம்மாறுவதற்கு கொடுத்திருக்கிற அழைப்பாக இருக்கலாம். அந்த வாய்ப்பை நல்ல முறையில் நாம் பயன்படுத்தி, நமது வாழ்வை சீர்படுத்த எண்ணுவதுதான், மிகச்சிறந்த சிந்தனையாக இருக்கும். ஒவ்வொருநாளும் கடவுள் நம்மீது வைத்திருக்கிற கருணையின் வெளிப்பாடு. அந்த கருணையை நாம் நல்ல முறையில் பயன்படுத்தி, நமது வாழ்வை சரியான தடத்திற்கு கொண்டு செல்ல, இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். வாழ்க்கை என்கிற...

நன்மதியையும் அறிவாற்றலையும் எனக்குப் புகட்டும்

திருப்பாடல் 119: 66, 68, 76, 77, 93, 94 வாழ்க்கை என்பது சிக்கல்கள் நிறைந்தது என்று சொல்கிறோம். இது உண்மை தானா? என்று சிந்தித்து, அதற்கான நிதர்சனத்தை நாம் பார்க்கிறபோது, அது பொய்யான தோற்றம் என்பது புலப்படுகிறது. வாழ்க்கை என்பது சிக்கலானது அல்ல, அதை நாம் தான் சிக்கல் நிறைந்ததாக மாற்றுகிறோம். உண்மையில் வாழ்க்கை என்பது அற்புதமானது. அழகானது. நம்முடைய வாழ்க்கை அழகானதாக அற்புதமானதாக இருக்க வேண்டுமென்றால், என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும் என்பதை, இன்றைய திருப்பாடல் அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது. வாழ்க்கையில் நடக்கும் அநேக பிரச்சனைகளுக்கு நாம் எடுக்கிற தவறான முடிவுகள் தான் காரணமாக இருக்கிறது. முடிவுகளை சரியாக எடுக்கத் தெரியாததன் விளைவு, நாம் பிரச்சனைக்குள்ளாக மாட்டிவிடுகிறோம். முடிவுகளை நாம் எடுக்கிறபோது, அறிவாற்றலோடு, நன்மதியோடு எடுக்க வேண்டும். உணர்வுகளுக்கு மட்டும் இடம் கொடுக்காமல், பொறுமையாகச் சிந்தித்து, நல்ல முறையில் செபித்து, அனுபவத்தின் அடிப்படையில் நேர்மையான உள்ளத்தோடு நாம் எடுக்கிற...

ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்

திருப்பாடல் 1: 1 – 2, 3, 4 & 6 மகிழ்ச்சி என்கிற ஒற்றைச் சொல்லுக்காகத்தான் இந்த உலகத்தில் இருக்கிற அனைவரும் ஏங்கிக்கொண்டிருக்கிறோம். நாம் செய்கிற வேலை, நம்முடைய கடின உழைப்பு, நாம் ஈட்டுகிற செல்வம் அனைத்துமே இந்த மகிழ்ச்சிகாக மட்டும் தான். இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை நமக்கு அமைய வேண்டுமென்றால், நமது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பதில் தான் இன்றைய திருப்பாடல். எப்படி வாழ்ந்தால், நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதற்கான அழைப்பாக இந்த திருப்பாடல் அமைகிறது. மகிழ்ச்சியாக வாழ விரும்பும் ஒரு மனிதர் ஆண்டவரின் திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து வாழ வேண்டும். இது தான் மகிழ்ச்சியான வாழ்விற்கான அடிப்படை. திருச்சட்டம் என்பது கடவுள் நமக்கு வழங்கிய சட்டம். நாம் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு ஒழுங்குமுறைகளை விளக்கக்கூடிய வழிகாட்டி. அந்த திருச்சட்டத்தை மேலோட்டமாக அல்லாமல், அதனை தியானித்து, அந்த திருச்சட்டத்தின் உட்பொருளை...

ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில்…

திருப்பாடல் 124: 1ஆ – 3, 4 – 6, 7 – 8 நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் நம்மை விட உயர்ந்த நிலையில் இருக்கிறவர்களை நம்மோடு நாம் ஒப்பீடு செய்து கொண்டு வாழ்ந்து வருகிறோம். இந்த திருப்பாடல் சற்று வித்தியாசமாக சிந்திப்பதற்கு அழைப்பதற்கான பாடலாக இருக்கிறது. ஆண்டவர் இஸ்ரயேல் மக்கள் சார்பாக இருந்ததனால், அவர்களால் வாழ்க்கையில் உயர முடிந்தது. ஒருவேளை ஆண்டவர் இஸ்ரயேல் மக்கள் சார்பாக இருந்திருக்கவில்லை என்றால், என்ன நடந்திருக்கும் என்பதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் நமக்கு சிந்தனையாக தருகிறார். திருப்பாடலில் வருகிற சிந்தனையை நம்முடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். இன்றைக்கு நாம் இருக்கிற நிலையோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். இன்றைக்கு நாம் இருக்கிற நிலையில் இல்லாமல், நம்மை விட கீழான நிலையில் உள்ளவர்கள் போல, நம்முடைய வாழ்வு அமைந்திருந்தால் நாம் எப்படி இருந்திருப்போம்? ஆக, கடவுள் நம்மை பல மனிதர்களை விட சிறப்பான அன்பாலும், அருளாலும் நிரப்பியிருக்கிறார். நம்மை விட...