Category: இன்றைய சிந்தனை

இறைத்திட்டத்திற்கு அர்ப்பணிப்போம்

திருத்தூதர் பணி 8: 1 – 8 அழுகை, மகிழ்ச்சி என்கிற இரண்டுவிதமான உணர்வுகளையும் சேர்த்து, இந்த வாசகம் நமக்கு தருகிறது. அழுகைக்கு காரணம் என்ன? ஸ்தேவான் இறந்துவிட்டார். கிறிஸ்துவின் நற்செய்தியை துணிவோடு அறிவித்த ஸ்தேவான் கொலை செய்யப்பட்டுவிட்டார். அது மட்டுமல்ல, கிறிஸ்தவர்களை சவுல் துன்புறுத்துகிறார். மகிழ்ச்சிக்கு காரணம் என்ன? பிலிப்பு நற்செய்தியை அறிவிக்கின்றார். மக்கள் நடுவில் பல புதுமைகளைச் செய்கிறார். ஆக, ஒருபுறத்தில் மக்கள் கவலையினாலும், துன்பங்களினால் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில், மக்கள் மகிழ்ச்சியின் விளிம்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஸ்தேவானின் இறப்பு நிச்சயம் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பை உருவாக்கியிருக்க வேண்டும். இதற்கு மேல், தங்களுக்கு கடவுளுடைய வார்த்தையை யார் போதிப்பார்கள்? என்கிற எண்ணம் சந்தேகமாய் எழுந்திருக்க வேண்டும். ஆனால், கடவுளின் திட்டம் அற்புதமானது, ஆச்சரியத்தை உண்டு பண்ணக்கூடியது என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள். அதனுடைய வெளிப்பாடு தான், இந்த கவலையும், மகிழ்ச்சியும். கடவுளின் மீட்புத் திட்டம் ஒரு குறிப்பிட்ட மனிதரோடு முடிந்து விடுவதில்லை....

உண்மை – தூய ஆவியாரின் உறைவிடம்

திருத்தூதர் பணி 7: 51 – 8: 1 ஸ்தேவான் கடுமையான வார்த்தைகளால் மக்களையும், மூப்பர்களையும், மறைநூல் அறிஞர்களையும் சாடுகிறார். அவருடைய கடுமையான வார்த்தைகளுக்கு காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் அனைவரும் மாசற்ற இயேசுவைக் கொலை செய்துவிட்டார்கள் என்பது தான். ஸ்தேவானின் பார்வையில், இயேசுவைக் கொலை செய்தது தற்செயலாக நடந்திருக்கவில்லை. இவர்கள் அனைவருமே குற்றப்பிண்ணனியோடு தான் இருந்திருக்கிறார்கள். ஏனென்றால், இயேசுவுக்கு முன்பிருந்த இறைவாக்கினர்களைக் கொன்றார்கள். இறைவாக்கினர்க்கெல்லாம் இறைவாக்கினராக இருந்த இயேசுவையும் கொன்றார்கள். ஆக, கொலை செய்வது என்பது அவர்களுக்கு புதிதானது அல்ல. அது மட்டுமல்ல, அத்தோடு அவர்கள் நிற்கப்போவதில்லை. இவற்றை எடுத்துரைக்கின்ற தன்னையும் கொலை செய்ய இருக்கிறார்கள், என்று தன்னுடைய சாவை ஸ்தேவான் முன்னறிவிக்கின்றார். ஸ்தேவானின் போதனையைக் கேட்டவர்களின் பதில்மொழி என்ன? ”அவரைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடித்தார்கள். இவ்வளவுக்கு வஞ்சக எண்ணமும், பகைமை உணர்வும் அவர்களது உள்ளத்தில் எழக்காரணம் என்ன? தூய ஆவி இல்லாத நிலை தான், அவர்களின் பழிவாங்கும்...

ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்”

திருப்பாடல் 119: 23 – 24, 26 – 27, 29 – 30 இறைவன் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களை தான் வாக்களித்த நாட்டிற்கு வழிநடத்தினார் என்பதை, மீட்பின் வரலாறு நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. இந்த மீட்பின் வரலாற்றில் பல இலட்சக்கணக்கான மக்களை வழிநடத்துவது என்பது எளிதான காரியமல்ல. அவர்களைக் கட்டுக்கோப்பாக வன்முறையில்லாமல், பாதுகாப்பாக வழிநடத்த வேண்டுமென்றால், இறைவனின் துணையும், அவர் கொடுத்திருந்த வழிமுறைகளையும் கடைப்பிடிப்பது அவசியமாகிறது. இத்தகைய எண்ணத்தை வலியுறுத்தக்கூடிய வகையில் அமைந்ததுதான், இந்த திருப்பாடல். கடவுளின் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் வலியுறுத்துகிறார். கடவுளின் சட்டப்படி நாம் நடக்கிறபோது, நமது வாழ்க்கையில் நாம் இடறி விழமாட்டோம். கடவுளின் சட்டங்களைக் கடைப்பிடிப்பது எளிதானது அல்ல. ஆனால், நமது வாழ்க்கையில், நாம் துணிவோடு நடப்பதற்கு, அது வழிசெய்யக்கூடியதாக இருக்கிறது. நம்மை அரவணைத்துச்செல்லக்கூடியதாக இருக்கிறது. சிதறிக்கிடந்த இஸ்ரயேல் மக்களை ஒன்றுசேர்ப்பதற்கு உதவியாக இருந்தது கடவுளின் சட்டங்கள் தான். அதனை...

உயிர்த்த இயேசுவின் பிரசன்னம்

இயேசுவின் பாடுகள், வலி, வேதனை, இறப்பு ஆகியவை நிச்சயம் இயேசுவின் சீடர்ளுக்கு பயங்கரமான வேதனையைக்கொடுத்திருக்கும். இப்போதைக்கு வாழ்க்கை அவர்களுக்கு வெறுப்பாக இருந்திருக்கும். அவர்கள் மீதே அவர்களுக்கு வெறுப்பு வந்திருக்கும். ஏனென்றால், அவர்களும் அதற்கு ஒரு காரணம் என்கிற குற்ற உணர்ச்சி அவர்களை நிரப்பியிருந்தது. நிச்சயமாக அந்தப்பாடுகளின் வலி, வேதனை வார்த்தைகளில் சொல்லி மாளாது. இவ்வளவு பயங்கரங்கள் நடந்தபிறகு, இயேசு அவர்கள் நடுவில் தோன்றினால் சீடர்களின் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும்? நிச்சயம் அவர்கள் பட்ட வலிகள் மறைந்திருக்கும் ஆனந்தம் அவர்களை ஆட்கொண்டிருக்கும். அவர்கள் எதைப்பற்றியும் கலங்கியிருந்திருக்க மாட்டார்கள். அவர்கள் மனது முழுவதும் மகிழ்ச்சிதான். தாங்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறோம் என்றுகூட உணராத அளவுக்கு அன்பினால், மகிழ்ச்சியினால் அவர்கள் ஆட்கொள்ளப்பட்டிருந்தார்கள். கவலைகள், கண்ணீருக்கு ஆண்டவர்தரும் ஆனந்தம் நிச்சயம் அளவிட முடியாதது. கவலைகள், கலக்கங்கள் வருகிறபோது, உயிர்த்த ஆண்டவரின் இருப்பை நாம் அதிகமாக உணர வேண்டும். அவர் நம்மோடு இருக்கிறார் என்கிற எண்ணம் நிச்சயம் நமக்கு அதிகமாக...

நீதியுள்ளோர் ஆண்டவரைப்புகழ்வது பொருத்தமானதே

திருப்பாடல் 33: 1 – 2, 4 – 5, 18 – 19 இந்த உலகத்தில் நீதிமான்களை எல்லாருமே புறந்தள்ளிவிடுகிறார்கள். அவர்களை எள்ளி நகையாடுகிறார்கள். அவர்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அவர்கள் அனைவராலும் ஏளனமாகப் பார்க்கப்படுகிறார்கள். எதற்காக? ஏன் அவர்கள் இப்படிப் பார்க்கப்படுகிறார்கள்? அவர்கள் நீதியோடு, நேர்மையோடு வாழ வேண்டும் என்பது, இந்த உலகத்தின் பார்வையில் வாழத்தெரியாத மனிதர்களாக அவர்களை அடையாளம் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது, அவர்கள் நேர்மையாக வாழ்ந்ததால், அவர்கள் பல துன்பங்களையும் சந்திக்க நேரிடுகிறது. அந்த துன்பங்களைப் பார்க்கிறபோது, நாம் ஏன் நேர்மையோடு வாழ வேண்டும் என்கிற எண்ணம் நமக்குள்ளாக வருகிறது. ஆனால், இதுதான் சரியான வாழ்க்கை, இப்படி வாழ்வது தான் இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை என்பதை, திருப்பாடல் ஆசிரியர் வலியுறுத்திச் சொல்கிறார். அது கடினமான வாழ்க்கை தான். இந்த உலகத்தின் பார்வையில் பரிகாசம் செய்யப்படக்கூடிய வாழ்க்கை தான். ஆனாலும், அந்த வாழ்க்கையின் நிறைவை, அதை வாழ்பவர்கள் மட்டுமே...