Category: இன்றைய சிந்தனை

நான் தந்தையுள்ளும் தந்தை என்னுள்ளும் (யோவான் 3 : 31-36)

நற்செய்தியாளர் யோவான் திருமுழுக்கு யோவானின் சீடராவார் என விவிலிய அறிஞர்கள் கூறுகிறார்கள். அதனால்தான் திருமுழுக்கு யோவானைப் பற்றிய பல நெருங்கிய குறிப்புகளை யோவான் நற்செய்தியில் அதிகமாகக் காணமுடிகின்றது. உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியை குருவே தமது சீடர்க்கு அறிமுகம் செய்து வைக்கிறார். இடியின் மகன் என்று அழைக்கப்படும் யோவான் இதனாலேயே இறைமகன் என்ற உண்மையைத் திருமுழுக்கு யோவான் வாயிலாக வலியுறுத்துகிறார். கூடவே இருந்து அறிந்ததால்தான் தனது நற்செய்தியின் தொடக்கத்திலேயே இயேசுவை விண்ணக மகனாக நமக்கு எழுதுகிறார். “தொடக்கத்தில் வாக்கு இருந்தது, அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது” என்ற மறையுரைக்குச் சான்று பகர்கிறார் திருமுழுக்கு யோவான். “ மேலிருந்து வருபவர் அனைவருக்கும் மேலானவர், தாம் கண்டதையும் கேட்டதையும் பற்றியே அவர் சான்று பகர்கிறார் (3:32) நாம் ஒரு நபரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவரைப்பற்றி நெருக்கமாக அறிந்தவரிடம் விசாரிப்போம். ஓர் ஊரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவ்வூரிலேயே பிறந்து வளர்ந்தவரிடம்...

ஏழை கூவியழைத்தான். ஆண்டவர் அவனுக்கு செவிசாய்த்தார்

திருப்பாடல் 34: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8 விவிலியத்தில் ஏழைகள் என்று சொல்லப்படுகிறவர்கள் யார்? ஏழைகளை நாம் இரண்டு வகையாகப் பார்க்கலாம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை ஏழைகள் என்று நாம் சொல்கிறோம். அதேபோல, கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைக்கிறவர்களையும் ஏழைகள் என்று சொல்கிறோம். இவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்க வேண்டும் என்ற நியதில்லை. ஆனால், பணம் இருந்தாலும், கடவுளுக்கு முன்னுரிமை கொடுக்கிறவர்கள், கடவுளை தங்களது முழுமுதற்செல்வமாக ஏற்றுக்கொள்கிறவர்கள். இறைவன் இந்த இரண்டு பேரையுமே கருத்தில் கொள்கிறார். அதாவது, இந்த உலகத்தில் யாரெல்லாம் நிர்கதியில்லாமல் இருக்கிறார்களோ, கடவுளே தங்களது வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் அனைவரையும், கடவுள் கண்ணோக்குகிறார். அவர்களது குரலுக்கு செவிசாய்க்கிறார். கடவுள் எப்போதுமே, இந்த சமுதாயத்தின் தாழ்நிலையில் இருக்கிறவர்களை கைதூக்கி விடக்கூடியவராக இருக்கிறார். அவர்களது நிலைகண்டு மனம் வெதும்புகிறவராக, அவர்களும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக, முழுமையான முயற்சியை...

தூய ஆவியின் செயல்பாடுகள்

கடவுளைப்பற்றியும், கடவுள் சார்ந்த செயல்பாடுகளைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கு நமது மனித அறிவு புரிந்து கொள்ள முடியாம் இருப்பதை நிக்கதேமும், அதனை விளக்குவதற்கு முயற்சி எடுக்கிற இயேசுவைப்பற்றியும் இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கிறோம். நிக்கதேம் ஒரு படித்த மனிதர். மறைநூலை நன்கு ஆராய்ந்து அறிந்தவர். இறைஉணர்வு மிக்கவர். கடவுள் மற்றும் கடவுள் சார்ந்த செயல்பாடுகளுக்கு முக்கியத்துவத்தைக் கொடுப்பவர். ஆனால், அவராலே, இயேசுவின் விளக்கத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த உலகத்தில், ஒன்று எப்படி இயங்குகிறது என்பது தெரியாமலேயே பலவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். மின்சாரமோ, தொலைக்காட்சியோ, வானொலியோ எப்படி இயங்குகிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவைகளை நாம் பயன்படுத்துகிறோம். அவற்றைப்பற்றிய முழுமையான அறிவு இல்லையென்றாலும் கூட, அவற்றின் பயன்பாட்டில் நாம் எந்தவித சுணக்கமும் காட்டுவதில்லை. அதே போலத்தான் தூய ஆவியைப்பற்றிய நமது அறிவும். தூய ஆவியின் செயல்பாடு எப்படி என்பதை நம்மால் அறிய முடிவதில்லை. ஆனால், தூய ஆவியின் செயல்பாடு ஒவ்வொரு...

”ஆண்டவரே! உம்மிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர்

திருப்பாடல் 2: 1 – 3, 4 – 6, 7 – 9 கடவுள் தான் இஸ்ரயேல் மக்களை ஆள்வதற்காக தாவீதைத் தேர்ந்தெடுத்தார். தாவீது எருசலேமில் இஸ்ரயேல் மக்களை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால், வேற்றுநாட்டினர் இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக போர்தொடுக்கின்றனர். இந்த போர், இஸ்ரயேல் மக்களுக்கு எதிரானதோ, தாவீதுக்கு எதிரானதோ அல்ல. இது கடவுளுக்கு எதிரான போர். ஏனென்றால், இஸ்ரயேல் மக்களைத் தாக்குவது கடவுளையே தாக்குவது போலானதாகும். ஏனென்றால், எப்போது தாவீது இஸ்ரயேல் மக்களின் அரசனாக மாறினாரோ, அப்போதே அவர், கடவுளின் மைந்தனாக மாறிவிட்டார். எனவே, இனி கடவுளின் அருட்கரம் தான், அவரைப் பாதுகாக்கப் போகிறது. இந்த திருப்பாடல் இயேசுவின் வருகையைக் குறிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. இயேசு எப்படியெல்லாம் கடவுளால் பேணிப் பாதுகாக்கப்பட போகிறார். இயேசுவின் வாழ்க்கை எவ்வளவு சவால்களுக்கு மத்தியில் இருக்கப்போகிறது என்கிற, எதிர்காலத்தில் நடக்க இருக்கிற நிகழ்வுகளையும் இந்த திருப்பாடல் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. எவ்வளவு சோதனைகள்...

ஆண்டவரது வலக்கை உயர்ந்துள்ளது

திருப்பாடல் 118: 1, 14 – 15, 16, 18, 19 – 21 நமது அன்றாட வாழ்வில், நமக்கு நெருக்கமானவர்களைப் பார்த்து நாம் சொல்வோம்: ”இவர் என்னுடைய வலக்கரம் போன்றவர்”. இங்கு வலக்கரம் என்பது நம்பிக்கைக்குரியவராக அடையாளப்படுத்தப்படுகிறது. எசாயா 41: 13 ”நானே உன் கடவுளாகிய ஆண்டவர். உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து, ”அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்”. பொதுவாக எல்லா மக்களுமே வலது கையை முக்கியமாக பயன்படுத்துவதால், அது ஒருவருடைய பலத்தை, ஆற்றலை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது. லூக்கா 20: 43 ”நான் உம் பகைவரை உமக்கு கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்” என்று திருப்பாடலில் உள்ள வசனம் மேற்கோள் காட்டப்படுகிறது. இங்கு வலது கரம், அதிகாரத்தின் அடையாளமாகச் சொல்லப்படுகிறது. மாற்கு 10: 37 ல், யாக்கோபு மற்றும் அவருடைய சகோதரர்கள், இயேசுவின் வலப்பக்கத்தில் அமரும் பாக்கியத்தைக் கேட்கின்றனர். மத்தேயு 25 வது அதிகாரத்தில், தந்தையின் ஆசீர் பெற்றவர்களை...