நாம் வாழப்போகும் வாழ்க்கை
முரண்பாடுகளின் உலகம் நாம் வாழக்கூடியது. இங்கே குறைகள் சொல்லக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகம். நல்லவற்றைப் பாராட்ட வேண்டும் என்பதோ, குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதோ, இங்கேயிருக்கிற மனிதர்களுக்கு பழக்கமல்ல. ஒருவர் எதைச்செய்தாலும் அதில் எப்படி குற்றம் கண்டுபிடிக்கலாம் என்கிற மனப்பான்மை தான், இன்றைய தலைமுறையினரிடத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. இயேசுவும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த முரண்பாட்டை விளக்குகிறார். இயேசு வாழ்ந்த போது, திருமுழுக்கு யோவானும் அவருடைய சமகாலத்தவராக இருந்தார். திருமுழுக்கு யோவான் ஒருவிதமான தவ வாழ்க்கையை வாழ்ந்தவர். தன்னை முழுமையாக வருத்திக் கொண்டவர். ஆடம்பரங்களை விரும்பாதவர். தனிமையை விரும்பி, தனிமையாக வாழ்ந்தவர். இயேசு மக்களோடு மக்களாக, மக்களில் ஒருவராக வாழ்ந்தவர். இரண்டு பேரையும் மக்கள் குறைகூறினார்கள். ஒருவரைப் பற்றி சொன்ன குறையைத்தான் மற்றவர் வாழ்ந்தார். ஆனால், அப்படிப்பட்ட வாழ்வையும் மக்கள் குறைகூறினார்கள். நமது வாழ்க்கையில் நாம் குறைகூறுகிறவர்களாக இருக்கிறோமா? அடுத்தவர் ஒரு செயலைச் சிறப்பாகச் செய்யும்போது, அதனைப்...