Category: இன்றைய சிந்தனை

ஆன்மீகம் நிறைந்த குடும்பங்கள் !

இன்று திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு குடும்பமும் ஆண்டவர் இயேசுவின் ஆசிபெற்ற குடும்பமாக விளங்க இன்று சிறப்பாக மன்றாடுவோம். குடும்பங்கள் பலவிதமான சிக்கல்களைச் சந்திப்பதை இன்று பார்க்கிறோம். மண முறிவுகள், பிளவுகள், ஊடகங்களின் தாக்கத்தால் அறநெறிச் சிக்கல்கள் போன்றவை குடும்பத்தின் ஆணி வேரையே அசைத்துப் பார்க்கின்றன. திருமணம் செய்யாமல், குடும்ப வாழ்வுக்குள் நுழையாமல் விருப்பம்போல் வாழலாம் என்னும் மனநிலை மெல்ல, மெல்ல பரவி வருகிறது. எனவே, குடும்பங்களை உறுதிப்படுத்தும் பணியை நாம் அக்கறையுடன் ஆற்றவேண்டும். குடும்பங்கள் ஆன்மீகம் நிறைந்தவையாகத் திகழ்ந்தால்தான், இன்றைய சவால்களைச் சந்திக்க முடியும். இந்த குடும்பங்களின் ஆன்மீகம் இறைநம்பிக்கை, நற்பணி, நல்லுறவு, நற்செய்தி அறிவி;ப்பு என்னும் நான்கு தளங்களில் கட்டப்பட வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் நாள்தோறும் செபித்து, இறைவார்த்தையின்படி, அருள்சாதனங்களில் பங்கேற்று வாழ்வதே இறைநம்பிக்கையின் வெளி;ப்பாடு. தங்கள் கடமைகளை நேர்மையுடனும், கடமையுணர்வுடனும் நேர்த்தியாக ஆற்றுவது நற்பணியின் வெளிப்பாடு. பல்வேறு விதமான உறவுகளில் பாராட்டு, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல், இழத்தல் போன்ற...

இயேசுவின் பிறப்பு தரும் செய்தி

இயேசுவைக் குழந்தையாக பார்த்த சிமியோன் இறைவாக்குரைக்கிறார். அவருடைய இறைவாக்கு என்ன? ”இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணமாக இருக்கும்” என்கிற செய்தி அவரால் இறைவாக்காகச் சொல்லப்படுகிறது. யாருடைய எழுச்சி? யாருடைய வீழ்ச்சி? இதுவரை மக்களை சட்டங்களால், ஒழுங்குகளால் சிறைப்படுத்தியிருந்த அதிகாரவர்க்கத்தினரிடமிருந்து இயேசு விடுதலையைக் கொண்டு வர இருக்கிறார். இது அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறவர்களுக்கான வீழ்ச்சி. இனிமேல் அவர்கள் அடிமைப்படுத்த முடியாது. அதேபோல, ஏழைகள், எளியவர்கள், சட்டங்களினால் வீணாக சிறைப்பட்டிருந்தவர்கள் அனைவருக்கும் எழுச்சி. ஏனென்றால், அவர்களுக்கும் மீட்பு இருக்கிறது என்கிற செய்தி, மிகச்சிறப்பான செய்தி. இத்தகைய இறைவாக்கு தான், சிமியோனால் உரைக்கப்படுகிறது. இயேசுவின் பிறப்பு இந்த உலகத்தின் ஏற்றத்தாழ்வுகளை சரிவரக் கொண்டு வர இருக்கிறது. அது சமத்துவத்தையும், சமநீதியையும் எதிர்பார்க்கிறவர்களின் வெற்றி. அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்று எண்ணுகிறவர்களின் வெற்றி. அந்த வெற்றி, இயேசுவின் பிறப்பினால், இந்த மண்ணில் மலரட்டும். ~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

மாசற்ற குழந்தைகள் திருவிழா

மாசற்ற குழந்தைகள் தினம் என்றால் என்ன? இதனைக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? உரோமை அரசால், யூதர்களை ஆள்வதற்கு என்று நியமிக்கப்பட்ட ஏரோது அரசரால் கொல்லப்பட்ட குழந்தைகளைத்தான், மாசற்ற குழந்தைகள் தினமாக, திருச்சபை கொண்டாடுகிறது. ஏரோது எதற்காக, ஒன்றுமறியாத பச்சிளங்குழந்தைகளைக் கொல்ல வேண்டும்? ஞானிகளால் மெசியா பிறந்திருக்கிறார் என்பதை அறிந்த ஏரோது, குழந்தையினால் தன்னுடைய அரசுக்கு ஆபத்து என்று நினைத்தான். ஆனால், எந்த குழந்தை தன்னுடைய பதவிக்கு ஆபத்தாக வருகிறது என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னுடைய பதவியை காப்பாற்றுவது ஒன்றே, அவனுடைய இலக்காக இருந்தது. அதற்காக எத்தனை குழந்தைகளை பழிகொடுத்தாலும் தகும் என்று நினைத்தான். அவர்கள் அனைவரையும் ஈவு, இரக்கமில்லாமல் கொன்றொழித்தான். எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்பது தெளிவாக இல்லை. ஆனால், கொல்லப்பட்ட குழந்தைகள் அனைவருமே, திருச்சபையினால் மறைசாட்சிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். அதிகார வெறிக்கு பழிகடாக்கள் தான் இந்த மாசற்ற குழந்தைகள். இன்றைக்கு பெற்றோர், தாங்கள் நிறைவேற்ற முடியாத ஆசைகளை தங்களின் குழந்தைகளிடத்தில்...

யோவானின் விசுவாசம்

இயேசு அன்பு செய்த சீடர்களில் மூவருள் ஒருவர் யோவான். யோவான் மீது இயேசு தனி அன்பு கொண்டிருந்தார். ஒரு நற்செய்தியையும், திருமுகத்தையும், திருவெளிப்பாட்டு நூலையும் எழுதியிருந்தாலும், யோவானைப்பற்றி அதிகமாக நற்செய்தி நூல்களில் நாம் காண முடியாது. ஆனால், யோவானுடைய விசுவாசம் அளப்பரியது. அதற்கு எடுத்துக்காட்டு இன்றைய நற்செய்தி. ”யோவான் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக்கண்டார். ஆனால், உள்ளே நுழையவில்லை”. இந்த இறைவசனம் யோவானுடைய இறைநம்பிக்கையைப் பறைசாற்றுவதாக இருக்கிறது. அவருக்குப்பின்னால் சீமோன் பேதுரு வருகிறார். அவரும் குனிந்து பார்க்கிறார். ஆனாலும், அவர் உள்ளே செல்கிறார். இயேசுவின் துணிகள் கிடப்பதை யோவான் பார்த்ததும், அவருக்குள்ளாக பலவிதமான எண்ணங்கள் ஓட ஆரம்பிக்கிறது. துணிகள் கலைந்து காணப்படவில்லை. அப்படியே இருக்கிறது. அதைப்பார்த்தவுடன் அப்படியே உயிர்ப்பை நம்புகிறார். அதாவது, நடக்கிற நிகழ்வுகளை விசுவாசக்கண்கொண்டு யோவான் பார்க்கிறதனால், அவரால் நம்ப முடிகிறது. நமது வாழ்வில் நடக்கும் அதிசயங்களையும், அற்புதங்களையும் பார்ப்பதற்கு நமக்கு விசுவாசம் வேண்டும். விசுவாசம் இருந்தால் மட்டுமே நம்மால்,...

கிறிஸ்துமஸ் மகிழ்விலும் சான்று பகர்வோம் !

முதல் மறைசாட்சியான புனித ஸ்தேவானின் விழாவை இன்று கொண்டாடுகிறோம். இயேசுவுக்காக தன் உயிரையும் கையளித்து, மறைசாட்சிகளின் வரலாற்றில் முதல் இடம் பெற்ற பெருமையை அடைந்தவர் புனித ஸ்தேவான். அவரது இறப்பு இயேசுவின் இறப்பைப் போலவே இறைவனின் மன்னிப்பை வேண்டுவதாக அமைந்திருக்கிறது. வாழ்வில் மட்டுமல்ல, சாவிலும் நாம் இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஸ்தேவான் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். கிறிஸ்து பிறப்பு விழாவின் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் நாம் நம்முடைய வாழ்வு எப்போதும் ஆண்டவருக்கு சான்று பகர்வதாக அமையவேண்டும் என்பதை நினைவுகொள்வோம். எல்லாச் சூழ்நிலைகளிலும், எல்லா வேளைகளிலும் நமது வாழ்வு இறைவார்த்தையின்படி, இறைத்திருவுளத்தின்படி அமைந்தால், அதுவே நமது சாட்சிய வாழ்வு. கிறிஸ்துமஸ் விழாவின் மகிழ்ச்சியிலும், கொண்டாட்டத்திலும்கூட நாம் இயேசுவுக்கு சாட்சிகளாய் வாழ வேண்டும். நமது சொற்களும், கொண்டாட்டங்களும் இறைவனுக்குப் பிரியமானதாக அமையட்டும். மன்றாடுவோம்: அன்பே உருவான ஆண்டவரே, இந்தக் கிறிஸ்துமஸ் விழாவின் மகிழ்ச்சி;க்காகவும், புனித ஸ்தேவானின் மறைசாட்சியத்திற்காகவும் உம்மைப் போற்றுகிறோம். நன்றி கூறுகிறோம். எல்லாச் சூழலிலும்,...