Category: இன்றைய சிந்தனை

தேடுதலும் தங்குதலும் !

இயேசு தம்மைப் பின் தொடர்ந்த இரு சீடர்களிடம் “என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் மறுமொழியாக “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டனர். தேடுதலுக்கும், தங்குதலுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிச் சிந்திக்க இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. சென்னையில் வேலை செய்யவிரும்பும் ஓர் இளைஞன் தனது சொந்த ஊரில் இருந்துகொண்டே வேலை தேடினால், கிடைப்பது அரிதுதான். ஆனால், அதே இளைஞன் சென்னை சென்று, அங்கேயே தங்கி, வேலை தேடும் படலத்தில் ஈடுபட்டால், ஏதாவது ஒரு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இறைவனைத் தேடுபவர்கள் இமயமலை போன்ற இடங்களுக்குச் சென்று தங்கி, இறையனுபவத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். பலரும் சாலக்குடி போன்ற தியான இல்லங்களுக்கோ, வேளாங்கன்னி போன்ற திருத்தலங்களுக்கோ சென்று தங்கியிருந்து இறையனுபவம் பெறுவதை நாம் அறிவோம். தங்கியிருத்தலில் நேரம் செலவழிப்பது முகாமையான ஒன்று. “நேரமில்லை”, “பிசியாக இருக்கிறோம்” என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால், இறைவனைச் சந்திக்க முடியாது. இறைவனுக்காக நேரம் செலவழிக்க, அவரோடு...

என்னைவிட முன்னிடம் பெற்றவர் !

“பிறர் உங்களைவிட மதிப்புக்குரியவர் என எண்ணுங்கள்” (உரோ 12: 10). திருமுழுக்கு யோவானிடமிருந்து இன்று நாம் கற்றுக்கொள்ளும் உளவியல் மற்றும் ஆன்மீகப் பாடம் இதுதான். பிறரை நம்மைவிட மேலானவராகவும், மதிப்புக்குரியவராகவும் உண்மையிலேயே எண்ணுதல், சொல்லுதல், செயல்படுதல். இந்தக் கடினமாக மதிப்பீட்டை திருமுழுக்கு யோவான் எளிதில் செயல்படுத்திக் காட்டினார். “இதோ, கடவுளின் செம்மறி. இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப் பின்வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்” எனச் சான்று பகர்ந்தார். நாம் எப்படி? நம்மோடு பணியாற்றபவர்கள், அல்லது நமக்குப் பின் நமது பணியைத் தொடர்பவர்கள் – இவர்கள் பற்றி நமது மனநிலை என்ன? நமது சொற்கள் என்ன? நமது சான்று என்ன? யோவானைப் போல நம்மாலும் பிறரைப் பாராட்டீ. சான்று பகர முடியுமா? இன்று இந்தப் பயிற்சியைச் செய்வோமா? இன்று நமது கண்ணில் காணும் அனைவரையும் “இவர் என்னைவிட மதிப்புக்குரியவர்” என மனதிற்குள் சொல்வோம். வாய்ப்பு கிடைத்தால், வாயாலும் அறிக்கையிடுவோம். மன்றாடுவோம்:...

கடவுளுக்கு நாம் செலுத்தும் நன்றி

தியானப் பாடல் சிந்தனை: திருப்பாடல் 98: 1. 2-3. 3-4 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார் இந்த திருப்பாடல் கடவுள் வாக்களித்த மெசியாவைப்பற்றியும், அவர் இந்த உலகத்தை எப்படி ஒன்றுசேர்க்கப்போகிறார் என்று எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னமே சொல்கிற இறைவாக்கு தொடர்பான திருப்பாடல். மெசியா கொண்டு வருகிற மீட்பும், மீட்பைப்பெற்றவர்களின் மகிழ்ச்சியும் இங்கே பாடலாகத் தரப்படுகிறது. கடவுள் நமக்கு செய்திருக்கக்கூடிய வல்ல செயல்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவரைப்போற்ற வேண்டும். புகழ வேண்டும். அந்த புகழ்ச்சி ஒவ்வொருமுறையும் புதுமையானதாக இருக்க வேண்டும். அது சிறந்த படைப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால், அந்த அளவுக்கு கடவுள் நமக்கு வல்லமையுள்ள, ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார். இந்த திருப்பாடல் கடவுளுக்கு நாம் செலுத்த வேண்டிய நன்றிகளையும் நமக்கு நினைவுபடுத்துவதாக இருக்கிறது. கடவுளுக்கு எப்போது நாம் நன்றிக்குரியவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால், நாம் பெற்றுக்கொண்ட கொடைகள் அளப்பரியவை. அந்த...

கடவுளின் இரக்கம்

மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! கடவுளுடைய அரசு பெரிதாக வேண்டும், உலகின் அனைத்து மக்களும் கடவுளைப் போற்றிப் புகழ வேண்டும் என்ற ஆசை இன்றைய திருப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றிலும் மிளிர்வதை நம்மால் உணர முடியும். பின்னால் நடக்க இருப்பவற்றை, முன்பே ஆய்ந்து உணர்ந்து சொல்கிற இறைவாக்கின் ஒரு பரிமாணமாக வெளிப்படுவதுதான் இந்த திருப்பாடல். உண்மையான மகிழ்ச்சி நமக்கு கடவுளின் இரக்கத்தில் தான் இருக்கிறது என்பதோடு, இந்த திருப்பாடல் தொடங்குகிறது. எனவே, பாவிகளாகிய இருக்கிற நம் அனைவருக்கும் கடவுளின் இரக்கம் வேண்டும். இதன் மூலம் உண்மையான மகிழ்ச்சியை நாம் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற தன்சிந்தனை தான் முதல் வார்த்தை. தனக்கானதோடு இந்த தேடல் நின்றுவிடாமல், இந்த உலகத்தில் இருக்கிற அனைவரும் இந்த மகிழ்ச்சியைப் பெற வேண்டும் என்கிற பரந்துபட்ட எண்ணம், நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. நான் மட்டும் தான் வாழ வேண்டும் என்று எண்ணுகிற உலகத்தில், நானும்...

மனிதத்தின் புனிதம்

மனிதர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் படைப்பின் உயர்ந்த சிகரம். இன்று மனிதர்களையும் சாதாரண படைப்பாக நாம் நினைத்துவிட முடியாது. காரணம், அவர்கள் கடவுளின் அன்பினின்று படைக்கப்பட்டவர்கள். அதற்கும் மேலாக, கடவுளே மனிதர்களில் ஒருவராக பிறந்து, இந்த மனிதத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார். இன்றைய வாசகம், மனிதத்தின் புனிதத்தன்மையை நமக்கு பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது. இன்றைக்கு வாழ்வை வாழக்கூடிய மனிதர்கள் ஏனோ தானோவென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த மானுட வாழ்வின் முக்கியத்துவம் தெரிவதாக இல்லை. எனவே தான், கொலை, தற்கொலை என்று, மனிதத்திற்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மனிதம் என்பது போற்றுதற்குரியது. மனிதம் என்பது உயர்ந்த மதிப்பீடுகளைக்கொண்டு வாழப்பட வேண்டியது. அத்தகைய மனித வாழ்வை நாம் வாழ்வதற்கு நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். மனிதத்தின் புனிதத்தன்மையை நாம் உணர்வதற்கு ஒவ்வொருநாளும் முயற்சி எடுக்க வேண்டும். கடவுள் இந்த மனித உருவத்தை எடுத்து, இதற்கு மகிமை சேர்த்திருக்கிறார். இதனுடைய புனிதத்தன்மையை வாழ்ந்துகாட்டியிருக்கிறார்....