இயேசு எதற்காக திருமுழுக்குப்பெற வேண்டும்?
இயேசு எதற்காக திருமுழுக்குப்பெற வேண்டும்? என்ற கேள்வி நம் ஒவ்வொருவரின் மனதில் எழுவது இயல்பு. மத்தேயு 3: 6 ல் வாசிக்கிறோம்: “மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழக்குப் பெற்றுவந்தார்கள்”. இயேசு பாவமே அறியாதவர், கடவுளின் திருமகன். அப்படிப்பட்டவர் பாவங்களிலிருந்து மனமாற்றம் பெற்றதன் அடையாளமாக திருமுழுக்கு யோவானால் கொடுக்கப்பட்ட திருமுழுக்கை ஏன் பெற வேண்டும்? பொதுவாக, யூத வரலாற்றிலே திருமுழுக்கு என்பது யூதர்களுக்கு கொடுக்கப்படவில்லை. மாறாக, வேற்று மதத்திலிருந்து யூத மதத்தைத் தழுவுகிறவர்களுக்குத்தான் கொடுக்கப்பட்டது. காரணம், யூதர்கள் தங்களை கடவுள் தேர்ந்தெடுத்த மக்களினம், தூய்மையான மக்களினம் என்று கருதியதால், தங்களைப் பாவிகள் என்று ஒருபோதும் கருதியதில்லை. யோவானுடைய போதனைக்குப்பிறகு தான், தாங்களும் கடவுள் முன்னிலையில் பாவிகளாகத்தான் இருக்கிறோம், நமது வாழ்வும் மாற்றம் பெற வேண்டும் என்ற தெளிவு அவர்களின் உள்ளத்தில் ஏற்படுகிறது. யூத வரலாற்றிலே இது ஒரு புதிய அத்தியாயம். இத்தகையச்சூழ்நிலையில்தான் இயேசு தானும் திருமுழுக்குப்பெற ஒப்புக்கொடுக்கிறார்....