Category: இன்றைய சிந்தனை

உதவிக்கரம் நீட்டுவோம்

இயேசு காதுகேளாதவருக்கு குணம் கொடுத்துவிட்டு கடவுளின் வார்த்தையைப் தெக்கப்போலி பகுதியில் போதித்துக்கொண்டிருக்கிறார். மக்கள் மூன்று நாட்களாக இயேசுவோடு தங்கியிருக்கிறார்கள். யார் இந்த மக்கள்? விவிலிய அறிஞர் ஒருவர் அழகான விளக்கம் ஒன்று தருகிறார். மாற்கு நற்செய்தி 5வது அதிகாரத்தில், இயேசு கெரசேனர் பகுதியில் பேய் பிடித்த மனிதர் ஒருவரை நலமாக்குகிறார். அந்த மனிதன் இயேசுவோடு கூட இருக்க வேண்டும் என்று விரும்பினான். இயேசுவோ அவரைப்பார்த்து, “உமது வீட்டிற்குப்போய் ஆண்டவர் உமக்குச்செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்போலி நாட்டில் அறிவித்து வந்தார், என்று பார்;க்கிறோம். இயேசுவோடு இப்போது இருக்கும் மக்கள், பேய்பிடித்திருந்த மனிதர் வழியாக இயேசுவைப்பற்றி அறிந்த மக்கள். அந்த மனிதர் சொன்னதை இப்போது நேரில் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இயேசு சீடர்களிடம் ஒரு ஆலோசனைக்கேட்கிறார். இது சீடர்களுக்கு ஒருவிதமான பயிற்சி. என்னதான் சீடர்கள் சொல்கிறார்கள் பார்ப்போம் என்று சொல்லி, அவர்களிடம் அப்போது இருக்கிற சூழ்நிலையை விவரிக்கிறார்....

சமத்துவ இயேசு

யேசு புற இனத்து எல்லைப்பகுதியில் இருக்கிறார். ஏற்கெனவே தூய்மைச்சடங்கு மற்றும் சட்டங்களைப் பற்றிய தனது பார்வையைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். யார் என்ன நினைத்தாலும், எது உண்மையோ அதைத்துணிந்து போதித்திருக்கிறார். இப்போது புற இனத்தவர் மத்தியில் இயேசு இருக்கிறார். அடுத்து தனது பணி யாருக்கு இருக்கப்போகிறது என்பதை வெளிப்படுத்தும் அடையாளமாகக் கூட, இயேசுவின் தூய்மைச்சடங்குப்பற்றிய போதனை அமைந்திருக்கலாம். யூதர்கள் தீட்டான உணவு தங்கள் நாவில் படுவதையும், தீட்டான மக்களான புறவினத்தாரோடு உறவு கொண்டு வாழ்வதையும் வெறுப்பவர்கள். ஆனால், இயேசு அவர்கள் மத்தியில் இருக்கிறார். இயேசு வடக்குப்பகுதியில் புறவினத்து மக்கள் மத்தயில் இருப்பது, பாதுகாப்பு தேடிக்கூட இருக்கலாம் ஏனெனில், அவருக்கு எதிர்ப்பு வலுத்துக்கொண்டிருக்கிறது. தொடக்க முதலே பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும், இயேசுவை சட்டத்தை அழிக்க வந்தவராக குற்றம் சுமத்தினர். ஏரோது அரசன் தனது பதவிக்கு இயேசுவால் ஆபத்து வரப்போவதாக அறிந்து, அவர் மீது வெறியில் இருக்கிறான். அவருடைய சொந்த மக்களோ, அவர் மதிமயங்கிப்பேசுவதாக நினைத்தனர். இவர்களையெல்லாம்...

தூய எண்ணங்களை மனதில் விதைப்போம்

லேவியர் 11 ம் அதிகாரத்தில் தீட்டாகக்கருதப்படக்கூடிய விலங்குகளின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. யூதர்களுக்கு தூய்மை என்பது கண்ணும், கருத்துமாக கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. எனவே, எவற்றை சாப்பிட வேண்டும்? எவற்றை சாப்பிடக்கூடாது? என்ற வரைமுறைகளை வகுத்திருந்தனர். எந்த அளவுக்கு இதில் கவனமாக இருந்தார்கள் என்றால், தீட்டான உணவைச் சாப்பிடுவதை விட சாவதே மேல் என்று பலர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வை நாம் மக்கபேயர் நூலில் பார்க்கலாம். இரண்டாம் மக்கபேயர் புத்தகத்தில் பன்றி இறைச்சியைச்சாப்பிடக் கட்டாயப்படுத்தப்பட்ட சகோதரர்கள் ஏழுபேர், பன்றி இறைச்சியைச்சாப்பிட்டு தங்களை தீட்டுப்படுத்துவதை விட சாவதே மேல் என்று தங்கள் உடலைப்பல்வேறு சித்திரவதைகளுக்குக் கையளித்ததையும், அவர்களை அவர்களின் தாய் ஊக்கப்படுத்தியதையும் நாம் வாசிப்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால், இயேசு வெளியிலிருந்து சாப்பிடக்கூடிய உணவு அல்ல, மாறாக, மனித எண்ணத்திலிருந்து தோன்றும் தீய சிந்தனைகள் தான் மனிதனைத்தீட்டுப்படுத்துகின்றன என்று சொல்கிறார். எண்ணங்கள் தான் செயல்பாடுகளுக்கு அடிப்படை என்று சொல்வார்கள். நம் எண்ணங்கள்...

சுயநல சட்டங்கள்

“கொர்பான்“ என்கிற வார்த்தையின் பொருள் “பரிசு, கொடை, காணிக்கை“ என்பதாகும். அதாவது கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்பது இதன் பொருளாகும். அது கடவுளுடைய உடைமையாகக் கருதப்படுவதாகும். கடன் கொடுத்த மனிதர், வாங்குவதற்கு வேறு வழியில்லாமல், கடைசியாக, நான் உனக்குக் கொடுத்த கடன் “கொர்பான்” என்றால், கடன்பெற்றவர் அந்த கடனை, கடவுளுக்கு திருப்பிக்கொடுக்க வேண்டிய மிகப்பெரிய நெருக்கடி நிலைக்கு உள்ளாகிறார். இயேசு வாழ்ந்தகாலத்தில், இது தவறாகப்பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக, ஒரு பெற்றோர் தனது பிள்ளையிடத்தில், மிகவும் கஸ்டமாயிருக்கிறது என்று உதவிகேட்கிறபோது, அந்த பிள்ளை, எனது உடைமைகளை, நான் “கொர்பான்“ என்று கடவுளுக்கு கொடுத்துவிட்டேன். என்னிடம் உள்ளது எல்லாம், கடவுளுடையது. எனவே என்னால், எதுவும் செய்ய முடியாது, என்று பதில் சொல்கிற நிலை பரவலாகக் காணப்பட்டது. ஆனால், பெற்றோரைப் பேணிக்காப்பது, மோசே கொடுத்த பத்து கட்டளைகளுள் ஒன்று என்பதை, அவர்கள் மறந்துவிட்டார்கள். ஆக, கடவுளின் பெயரால், கடவுளின் சட்டங்கள் உடைக்கப்பட்டன. இப்படிப்பட்ட இரட்டை வேடதாரிகளை இயேசு கடுமையாகச்...

உதவி

இயேசு சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அவரைப்பின்தொடர்கிறது. தங்களுக்குத் தேவையானது இயேசுவிடத்தில் இருக்கிறது, அதை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று, இயேசுவைப்பின்தொடர்ந்து கூட்டம் சென்று கொண்டிருக்கிறது. தன்னைத் தேடிவந்த அனைவருக்கும் இயேசு உதவி செய்கிறார். நற்செய்தியாளர்கள் இயேசுவைப்பற்றி சொல்கிறபோது, அவர் சென்ற இடங்களில் எல்லாம், நன்மைகளைச் செய்தார் என்பதை வாசிக்கிறோம். இயேசு மக்களுக்கு உதவியாக இருக்கிறார். உதவி என்பது உறுதுணையாக இருப்பது, தேவையறிந்து செய்வது, பயனுள்ளதாக இருப்பது என நாம் பொருள் கூறலாம். எது உண்மையான உதவி? இயல்பாகச் செய்வது, தேவையறிந்து செய்வது, பரிவுணர்வுடன் மகிழ்ச்சியாகச் செய்வது மற்றும் எல்லாச் சூழ்நிலைகளிலும் செய்வது. இதுதான் உண்மையான உதவி. இயேசுவின் உதவி இயல்பாக இருக்கிறது. யோசித்து, தியானித்து இதில் எனக்கு ஆதாயம் இருக்கிறதா? இதில் எனக்கு இடஞ்சல் ஏதாவது இருக்கிறதா? என்று எண்ணி செய்வதல்ல உதவி. செய்ய வேண்டுமென்பதற்காக செய்வதல்ல, தேவையறிந்து செய்வதுதான் உதவி. அது வெறுப்புணர்வோடு செய்யப்படுவதாக இருக்கக்கூடாது. பரிவு...