குவித்து வைப்பது பாவம்
லூக்கா 21:1-4 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நற்செய்தி வாசகத்தில் ஏழைக் கைம்பெண் போட்ட காணிக்கையை ஆண்டவர் இயேசு கிறிஸ்து மிகவும் பாராட்டுகிறார். ஏன்? அவர் தனக்கு பற்றாக்குறை இருந்தும் அனைத்தையும் போட்டார். அடுத்து என்ன செய்வது என்பது தெரியாதிருந்தும் காணிக்கையளித்தார். மற்றவர்கள் தங்களுக்கென்று நிறைய சேமித்து வைத்து மிகவும் கொஞ்சமாக காணிக்கை போட்டனர். ஆனால் இவரோ தனக்கென்று எதையும் சேமிக்காமல் இருந்த அனைத்தையும் போட்டுவிட்டார். ஆகவே இயேசுவின் சிறப்பு ஆசீரைப் பெறுகின்றார். அன்புமிக்கவர்களே! நாம் நமக்கென்று குவித்து சேர்த்து வைப்பது பாவம். நமக்கு தேவையானது, நமக்கு குடும்பத்திற்கு தேவையானது போக மீதமிருப்பதை கடவுளுக்கு கொடுக்க வேண்டும், மற்றவரோடு பகிர வேண்டும். இரண்டு வழிகளில் அதை செய்யலாம்....