Category: இன்றைய சிந்தனை

இனி எப்போதும் சந்தோசமே!

லூக்கா 19:1-10 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். “சந்தோசம் சாத்தியம்” என்ற அறிவிப்போடு அழகாய் வருகிறது இன்றைய நாள் வாசகம். எந்த பொருளும், எந்த நபரும் தர முடியாத நிலையான, நிரந்தரமான சந்தோசத்தை சக்கேயு என்பவர் இயேசுவிடமிருந்து பெற்றுக்கொண்டதை இன்றைய நற்செய்தி வாசகம் விவரமாக விவரிக்கிறது. நம்மையும் அவரிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள கனிவோடு அழைக்கின்றது. கொஞ்ச நேர சந்தோசத்தை நாம் வைத்திருக்கும் பொருள், நம்மோடிருக்கும் நபர் தர முடியும். பின் அந்த சந்தோசம் கானல் நீராய் மறைந்து போகும். ஆனால் மறையாத, மங்காத, நிலையான சந்தோசத்தை நம் ஆண்டவர் இயேசு மட்டுமே தர முடியும். அதை சக்கேயு அடைய அவர் எடுத்த இரண்டு முயற்சிகள் மிகவும் இன்றியமையாதது....

சரியானவரை சரியாக கண்டுபிடி!

லூக்கா 18:35-43 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் நம்முடைய வாழ்வின் பயணத்தில் பலவற்றை கண்டுபிடிக்கிறோம். புத்தகங்கள் வாசித்து அறிவை அங்கே கண்டுபிடிக்கிறோம். நண்பர்களோடு பழகி, உறவாடி நட்பை கண்டுபிடிக்கிறோம். அறிவை பயன்படுத்தி பலவிதமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கிறோம். இந்த கண்டுபிடிப்புகளில் எல்லாம் மேலானதும் மிகவும் உயர்வானதும் எது தெரியுமா? இயேசுவை கண்டுபிடிப்பது தான். இன்றைய நற்செய்தி வாசகத்தில் வருகின்ற பார்வையற்றவர் அதை சரியாகச் செய்தார். பார்வையில்லாமலிருந்தும் சரியான நபரை கண்டுபிடித்தார். பார்வையற்றவர் வாழ்க்கை நமக்கு இரண்டு விதத்தில் பாடமாக அமைகிறது. 1. எண்ணமெல்லாம் இயேசு பார்வையற்றவருக்கு எண்ணம் முழுவதும் இயேசுதான். இயேசு என்ற எண்ணம் மட்டுமே ஓடிக்கொண்டிருந்ததால் சரியாக அவர் கடந்து போவதை கண்டுபிடித்தார். இயேசுவைக் காண்பதற்கு...

வாங்க வரவேற்போம்!

மாற்கு 13:24-32 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 33ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். 1850 ஆம் அண்டு இத்தாலியில் உள்ள சான்ட் அஞ்சேலோ லொடிகியானோ என்ற இடத்தில் பிறந்தவர்தான் தூய பிரான்சிஸ் சேவியர் காப்ரினி. தொடக்கத்தில் இவர் ஓர் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். அப்போது இவருக்கு துறவியாகப் போகவேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. அதன்படி இவர் ஒரு துறவுமடத்திற்குச் சென்று, தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அங்கிருந்தவர்கள் இவருடைய உடல்நிலையைக் காரணம் காட்டி, இவரை துறவுமடத்திற்குள் எடுக்க மறுத்துவிட்டார்கள். மேலும் ஒருசில துறவுமடங்களுக்குச் சென்றுபோதும் காப்ரினிக்கு அதுதான் நடந்தது. அப்படியிருந்தாலும் அவர் மனந்தரளாமல் ஒவ்வொரு துறவுமடத்திற்காகப் போய்க்கொண்டே இருந்தார். இந்நிலையில்தான் 1874 ஆம் அண்டு, பேரருட்தந்தை சேராட்டி என்பவர், காப்ரினியை கோடோக்னோ என்ற இடத்தில்...

நச்சரிப்பு நல்லவராக்கட்டும்!

லூக்கா 18:1-8 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். தீயவர்கள் தீமையில் வாழ்வது நல்லதல்ல. அத்தீயவரை திருத்தி நல்வழிக்கு கொண்டு வர வேண்டியது அருகிலிருக்கும் ஒரு நல்லவரின் பொறுப்பு. இன்றைய நற்செய்தி வாசகம் நேர்மையற்றவராக இருந்த நடுவரை நல்லவராக மாற்றிய கைம்பெண்ணைப் பற்றிக் கூறுகிறது. நம்மையும் இந்த சிறப்பு பணியைச் செய்ய அழைக்கிறது. இந்த பணிக்கு அவசியமானது இரண்டு. 1. கவனித்தல் ஒருவர் தீமை செய்யும் போது அவரை திருத்தும் நல்லெண்ணம் கொண்ட ஒருவர் தீமை செய்பவரை நன்கு கூா்ந்து கவனிக்க வேண்டும். எந்த இடத்தில் அவரின் பலவீனம் இருக்கிறது என்பதை கவனமாகக் கண்டறிய வேண்டும். அவரின் வாழ்வில் உதவி செய்ய வேண்டும் என்ற பெருந்தன்மை இதற்கு மிகவும்...

உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்

லூக்கா 17:26-37 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் வாழும் நாட்களில் நம்முடைய தண்டனைத்தீர்ப்பை பெரும்பாலும் மனதில் கொள்வதில்லை. கடைசியில் என்ன நிகழும் என்பதை தெளிவாக தெரிந்தவர்கள் வாழ்க்கையை விழிப்பாக நகர்த்திச் செல்வார்கள். இன்றைய நற்செய்தி வாசகம் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள அழைப்புக் கொடுக்கிறது. எதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டும். தண்டனைத் தீர்ப்பிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கான இரண்டு முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். 1. நம்பிக்கை காலம் செல்ல செல்ல கடவுள் மீது நம்பிக்கை வைப்பவர்கள் எண்ணிக்கை குறைகிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எந்த செயலையும் திருப்தியாக செய்வதில்லை. வாழ்க்கையில் ஒரு பிடிப்பு, உற்சாகம் இல்லாமல் அவர்கள் அலைவது உண்டு. நம்பிக்கை இருப்பவர்கள் இறைவனை இறுக்கமாக பற்றிக்கொண்டு அவருக்கு...