Category: இன்றைய சிந்தனை

இன்றைக்கு இயேசுவைப் போற்றினீர்களா?

லூக்கா 17:11-19 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்புமிக்கவர்களே! காலையில் முதலில் கண்விழிக்கும் போது நாம் கடவுள் திருமுன்னிலையில் கண்விழிக்க வேண்டும். அப்படி செய்வது அந்த நாளை சக்திமிக்கதாக மாற்றுகிறது. எழுந்ததும் கடவுளே உமக்கு நன்றி என்று சொல்வது மிகச் சிறந்தது. அதன்பிறகு தொடா்ந்து நம் செயல்களில் அவரைப் போற்ற வேண்டும், புகழ வேண்டும் என இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு சொல்லித் தருகிறது. ஒவ்வொரு நாளும் இரண்டு செயல்பாடுகளை செய்து அவரைப் போற்ற வேண்டும். அந்த இரண்டு செயல்பாடுகளை இன்றிலிருந்து செய்வது மிகவும் நல்லது. 1. திருப்பாடல்கள் இசைத்து காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் நாம் திருப்பாடல்களை இசைத்து ஆண்டவரைப் போற்ற...

நம்பிக்கை வைப்போம்

நமது நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும்? எது ஆழமான நம்பிக்கை? எது உண்மையான நம்பிக்கை? நாம் நம்பிக்கையாளர்களாக இருந்தால் எப்படி வாழ்வோம்? என்பதை, நமக்கு கண்கூடாக காட்டுவது தான், இன்றைய நற்செய்தி. நம்பிக்கையாளர்களாக வாழ்வதற்கு, நமக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவை நல்ல முறையில் அறிந்து வைத்திருக்க வேண்டும். அந்த உறவைப் பற்றிய தெளிவான புரிதல் நமக்கு இருக்க வேண்டும். அந்த புரிதல் நமக்குள்ளாக இருக்கிறபோது, அந்த நம்பிக்கையைச் சிறப்பான விதத்தில் நாம் வாழ்ந்து காட்ட முடியும். கடவுளுக்கும், நமக்குமான உறவு என்ன? என்பதில் தான், அடிப்படைச்சிக்கல் இருக்கிறது. இந்த சிக்கல் முழுமையாக, சரியான புரிதலோடு தீர்க்கப்பட்டால், அது எளிதானதாக மாறிவிடும். இன்றைய நற்செய்தி, கடவுளுக்கும் மனிதருக்குமான உறவை, தலைவர், பணியாளர் எடுத்துக்காட்டுக்களை வைத்து நமக்கு விளக்குகிறது. இங்கே, பணியாளர் என்பவர், கேள்வி கேட்பவராக இல்லை. பணியாளர் தலைவரை முழுமையாகப் பற்றிப்பிடிப்பவராக, அவருக்கு பணிவிடை செய்கிறவராக சித்தரிக்கப்படுகிறார். எவ்வளவு பணிப்பளு இருந்தாலும், பணியாளருடைய...

எச்சரிக்கை: யாரையும் பாவத்தில் தள்ள வேண்டாம்

லூக்கா 17:1-6 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் இருக்கும் இடங்களில் குற்றங்கள், வன்முறைகள், பாவங்கள் பெருகிக்கொண்டு வருகின்றன. எங்குப் பார்த்தாலும் பாவம் செய்யும் கும்பல் குவிந்துக்கொண்டு இருக்கின்றது. யார் காரணம் இதற்கு? அவர்களே கற்றுக்கொண்டார்களா? இல்லை. பிறர் கற்றுக்கொடுத்தார்கள். நண்பர்களிடமிருந்து, பணிசெய்யுமிடங்களிலிருந்து, உறவினர்களிடமிருந்து கற்றுக்கொண்டதுதான் அது. இப்படி பிறருக்கு தவறான பண்புகளை கற்றுக்கொடுப்போரை இன்றைய நற்செய்தி வாசகம் எச்சரிக்கிறது. பிறரை பாவத்தில் தள்ளி விடுவோரை வன்மையாக கண்டிக்கிறது. நம்மால் யாரும் கெட்டுப்போகாத வாழ்க்கையை நாம் நடத்த வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? இரண்டு காரியங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 1. பாவச்சோதனை கொடுக்க கூடாது பலர் தங்களோடு இருக்கும் நண்பர்களுக்கு பாவச்சோதனையை வழங்குகிறார்கள....

காணிக்கை கொடுங்கள்! நல்லா இருப்பீர்கள்!

மாற்கு 12:38-44 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 32ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஒரு ஊரில் ஜோசப் என்னும் மனிதர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளிடத்தில் ஆழமான பக்திகொண்டிருந்தார். அதற்கேற்றார்போல் கடவுளுடைய கட்டளைகளை தவறாது கடைப்பிடித்து வந்தார், தன்னிடம் இருப்பதை முடிந்தவரை ஏழைகளுக்கும் இறைபணிக்கும் கொடுத்துவந்தார். இந்த ஜோசப்பின் வீட்டுக்குப் பக்கத்தில் பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவர் யாருக்கும் ஒரு பைசாகூட கொடுக்காதவர். இப்படிப்பட்டவருடைய வீட்டுக்கு வந்த ஓர் இறையடியார் அவரிடத்தில், “நீ சேர்த்து வைத்த செல்வம் யாவும் உன் அண்டை வீட்டானாகிய ஜோசப்பைத் தான் போய் சேரும்” என்று சொல்லிவிட்டுக் கடந்து போய்விட்டார். இது அந்த பணக்காரருக்கு ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியது. இத்தனை ஆண்டுகளும் நாம் சேர்த்துவைத்த செல்வம், யாரோ ஒருவருக்குப்...

உங்களை நம்ப முடியுமா?

லூக்கா 16:9-15 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதர்கள் பல விதங்களில் தங்களுடைய உண்மை நிலையை இழந்து வருகின்றனர். பல விதங்களில் பல வேடங்களை அணிகின்றனர். யாரையும் நம்ப முடியவில்லை என்பதுதான் பலரின் கூற்று. இது கிறிஸ்தவர்களுக்கு அழகல்ல. உண்மையை எடுத்துரைப்பதே என் பணி என்ற நமது ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம் உண்மையுள்ளவர்களாக வாழ வேண்டும், நம்பிக்கைக்குரியவர்களாக சாட்சியம் பகர வேண்டும் என்பதே இன்றைய வாசகத்தின் அழைப்பு. நம்பிக்கைக்குரியவர்களாக மாற இரண்டு ஆசைகளை தவிர்க்க வேண்டும். 1. பணம் பணத்தின் மீது ஆசை கொண்டவர்கள் பெரும்பாலும் உண்மையுள்ளவர்களாக, நம்பக்கூடியவர்களாக இருப்பதில்லை. பணம் அவர்களை நடிக்க சொல்கிறது. பொய் சொல்ல வைக்கிறது. அவர்களின் பேச்சில் சுத்தம் இருப்பதில்லை. ஆளுக்கு...