Category: இன்றைய சிந்தனை

முதல் தேதியில் முக்கிய அறிவிப்பு

லூக்கா 21:34-36 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஆண்டின் கடைசிமாதம் டிசம்பர். இந்த மாதம் நல்ல குளுகுளு மாதம். மானிடமகன் வரும் நாளில் எப்படியெல்லாம் இருக்க கூடாது என்பதே இம்மாதத்தின் முக்கிய அறிவிப்பு. மிகச் சிறந்த தயாரிப்பு செய்ய வேண்டும் என்பதே இன்றைய நற்செய்தியின் மையமாகும். இரண்டு விதங்களில் நாம் இருக்க கூடாது. 1. குடிவெறி தமிழ்நாடு குடியினால் தள்ளாடுகிறது. எல்லா ஊர்களிலும் மது கடைகளை அரசு திறந்து வைத்திருக்கிறது. குடிப்போரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. மிகவும் மோசமாக படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குடியினால் ஏற்பட்டிருக்கிற தீமைகள் அதிகம். குடிநோயாளிகள் மனநோளிகளாக நடமாடுகின்றனர். இது சமூக சீர்கேட்டிற்கு காரணமாக அமைகின்றது. அன்புமிக்கவர்களே! குடிவெறியிலிருந்து வெளியே வர...

திருத்தூதரான தூய அந்திரேயா பெருவிழா

அந்திரேயா – ஆண்டவர் பக்கமே! மத்தேயு 4:18-22 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருத்தூதரான தூய அந்திரேயா பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அந்திரேயா பெத்சாய்தாவைக் சார்ந்தவர்; பேதுருவின் சகோதரர். மீன்பிடித் தொழிலை செய்துகொண்டிருந்தவர். விவிலிய அறிஞர்களின் கூற்றுப்படி அந்திரேயா தொடக்கத்தில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தவர். ஒருநாள் ஆண்டவர் இயேசு வழியோரமாக சென்றுகொண்டிருக்கும்போது திருமுழுக்கு யோவான் தன்னுடைய சீடர்களிடம் (அந்திரேயா அங்கு இருந்தார்), “இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி” என்று இயேசுவை சுட்டிக்காட்டினார். உடனே அந்திரேயா இயேசுவிடம், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்க, அவர் “வந்து பாரும்” என்று சொன்னார். அந்திரேயா ஆண்டவர் இயேசுவோடு தங்கி இறையனுபவம் பெற்றார். அந்த அனுபவத்தை தன்னுடைய சகோதரரான பேதுருவிடம் எடுத்துச் சொல்லி...

ஆவலோடு எதிர்பார்த்தது இதோ விரைவில்…

லூக்கா 21:20-28 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் ஆவலோடு எதிர்பார்த்திருந்தது கிடைக்கும் போது நமக்கு பெருமகிழ்ச்சி கிட்டுகிறது. நாம் எதிர்பார்த்திருந்தன் நோக்கமும் நிறைவு பெறுகிறது. நமது மனதின் ஏக்கமும் முடிவுக்கு வருகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவார் என எதிர்பார்த்திருக்கும் நமக்கு மிக உடனடியாக அவரது இரண்டாம் வருகை இருக்கும், நம் ஏக்கம் நிறைவேற போகிறது என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசுவின் இரண்டாம் வருகை நமக்கு இரண்டு ஆசீரைத் தருகிறது. 1. மீட்பு இயேசுவின் இரண்டாம் வருகையை நம்பியிருக்கும் எல்லோருக்கும் இயேசுவின் வருகை மீட்பு அளிக்கும். அந்த மீட்பிற்கான நாள் வெகுதொலையில் இல்லை. மாறாக மிகவும் அருகில் உள்ளது. நாம் அனைவரும் மெசியாவைப் பார்க்க...

நன்மைக்கு அமோக வெற்றி!

லூக்கா 21:12-19 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். உலகில் வாழும் காலத்திலிருந்து கடைசி வரை நன்மைக்கும் தீமைக்கும் இடையே போட்டி நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அந்த போட்டிகள் ஏதோ குறிப்பிட்ட காலத்தில் மட்டும் நடைபெறுவதல்ல. மாறாக தினம் தினம் நடைபெறுகின்றன. நாள்தோறும் நடைபெறும் இப்போட்டியில் நன்மை வெற்றி பெற்றால் நாம் சாதித்திருக்கிறறோம் என்று அர்த்தம். தீமை வெற்றி பெற்றால் நாம் சரிந்திருக்கிறோம் என்று அர்த்தம். பரிசோதித்துப் பார்க்க இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை பரிவோடும் பாசத்தோடும் அழைக்கின்றது. கிறிஸ்தவர்கள் நாம் நன்மையை வெற்றி பெற செய்ய வேண்டும். நம் வாக்குகள் அனைத்தையும் நன்மைக்கு அளிக்க வேண்டும். நன்மையை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்....

இறைவன் விடுக்கும் எச்சரிக்கை

திருவெளிப்பாடு 14: 14 – 20 ”உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும். ஏனெனில், அறுவடைக் காலம் வந்துவிட்டது. மண்ணுலகம் என்னும் பயிர் முற்றிவிட்டது” என்று, வானதூதர் கோவிலிலிருந்து வெளியே வந்து, மேகத்தின் மீது வீற்றிருந்தவரை நோக்கிக் கூறுகிறார். இந்த காட்சி, உலக முடிவைப் பற்றி எடுத்துரைக்கிறது. திருவழிபாட்டின் கடைசி வாரத்தில் இருக்கிற நமக்கு, வாழ்வைப் பற்றிய பயத்தை அல்ல, மாறாக, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை வரவேற்பதற்கான ஆயத்தமாக, இந்த வாசகம் நமக்கு தரப்படுகிறது. விவிலியத்தில், இயேசு எப்போதும் கடவுளை இரக்கமுள்ளவராக அறிமுகப்படுத்துகிறார். கடவுள் நல்லவர், இரக்கமுள்ளவர் என்கிற செய்தி, விவிலியம் முழுமைக்குமாக ஆங்காங்கே காணப்படுகிறது. இன்றைக்கு பல் வியாபாரத்திற்காக கடவுளை, கொடுமையானவராக சித்தரிக்கிறார்கள். மக்களை பயமுறுத்தி, அதன் மூலமாக இலாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். குற்றம் செய்கிறபோது, பயம் நிச்சயமாக இருக்க வேண்டும். அதேவேளையில், கடவுளின் இரக்கத்தின் மீதும் ஒருவருக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். யூதாசைப் போல கடவுளின் இரக்கத்தில்...