Category: தேவ செய்தி

யோவானின் விசுவாசம்

இயேசு அன்பு செய்த சீடர்களில் மூவருள் ஒருவர் யோவான். யோவான் மீது இயேசு தனி அன்பு கொண்டிருந்தார். ஒரு நற்செய்தியையும், திருமுகத்தையும், திருவெளிப்பாட்டு நூலையும் எழுதியிருந்தாலும், யோவானைப்பற்றி அதிகமாக நற்செய்தி நூல்களில் நாம் காண முடியாது. ஆனால், யோவானுடைய விசுவாசம் அளப்பரியது. அதற்கு எடுத்துக்காட்டு இன்றைய நற்செய்தி. ”யோவான் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக்கண்டார். ஆனால், உள்ளே நுழையவில்லை”. இந்த இறைவசனம் யோவானுடைய இறைநம்பிக்கையைப் பறைசாற்றுவதாக இருக்கிறது. அவருக்குப்பின்னால் சீமோன் பேதுரு வருகிறார். அவரும் குனிந்து பார்க்கிறார். ஆனாலும், அவர் உள்ளே செல்கிறார். இயேசுவின் துணிகள் கிடப்பதை யோவான் பார்த்ததும், அவருக்குள்ளாக பலவிதமான எண்ணங்கள் ஓட ஆரம்பிக்கிறது. துணிகள் கலைந்து காணப்படவில்லை. அப்படியே இருக்கிறது. அதைப்பார்த்தவுடன் அப்படியே உயிர்ப்பை நம்புகிறார். அதாவது, நடக்கிற நிகழ்வுகளை விசுவாசக்கண்கொண்டு யோவான் பார்க்கிறதனால், அவரால் நம்ப முடிகிறது. நமது வாழ்வில் நடக்கும் அதிசயங்களையும், அற்புதங்களையும் பார்ப்பதற்கு நமக்கு விசுவாசம் வேண்டும். விசுவாசம் இருந்தால் மட்டுமே நம்மால்,...

கிறிஸ்துமஸ் மகிழ்விலும் சான்று பகர்வோம் !

முதல் மறைசாட்சியான புனித ஸ்தேவானின் விழாவை இன்று கொண்டாடுகிறோம். இயேசுவுக்காக தன் உயிரையும் கையளித்து, மறைசாட்சிகளின் வரலாற்றில் முதல் இடம் பெற்ற பெருமையை அடைந்தவர் புனித ஸ்தேவான். அவரது இறப்பு இயேசுவின் இறப்பைப் போலவே இறைவனின் மன்னிப்பை வேண்டுவதாக அமைந்திருக்கிறது. வாழ்வில் மட்டுமல்ல, சாவிலும் நாம் இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஸ்தேவான் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். கிறிஸ்து பிறப்பு விழாவின் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் நாம் நம்முடைய வாழ்வு எப்போதும் ஆண்டவருக்கு சான்று பகர்வதாக அமையவேண்டும் என்பதை நினைவுகொள்வோம். எல்லாச் சூழ்நிலைகளிலும், எல்லா வேளைகளிலும் நமது வாழ்வு இறைவார்த்தையின்படி, இறைத்திருவுளத்தின்படி அமைந்தால், அதுவே நமது சாட்சிய வாழ்வு. கிறிஸ்துமஸ் விழாவின் மகிழ்ச்சியிலும், கொண்டாட்டத்திலும்கூட நாம் இயேசுவுக்கு சாட்சிகளாய் வாழ வேண்டும். நமது சொற்களும், கொண்டாட்டங்களும் இறைவனுக்குப் பிரியமானதாக அமையட்டும். மன்றாடுவோம்: அன்பே உருவான ஆண்டவரே, இந்தக் கிறிஸ்துமஸ் விழாவின் மகிழ்ச்சி;க்காகவும், புனித ஸ்தேவானின் மறைசாட்சியத்திற்காகவும் உம்மைப் போற்றுகிறோம். நன்றி கூறுகிறோம். எல்லாச் சூழலிலும்,...

கிறிஸ்துமஸ் பிறப்பு விழா

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்துக்கள் !!!! கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தங்கி உங்களை நிறைவாழ்வை நோக்கி வழிநடத்துவாராக! கிறிஸ்துமஸ் பிறப்பு விழா ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பு விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றோம். இந்த கொண்டாட்டங்கள் நமக்கு தேவையா? அதற்காக நாம் செலவழிக்கக்கூடிய பணம் வீணாக விரயமாகிறதா? இந்த கொண்டாட்டங்களும் வெறும் சடங்கு தானா? கிறிஸ்து பிறப்பு விழா நம்மில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது? இது போன்ற கேள்விகளை எழுப்பி, கிறிஸ்து பிறப்பு விழாவைப்பற்றிய செய்தியை, சிந்திக்கலாம் என்று நினைக்கிறேன். கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி, ஏராளமான பணத்தை நாம் தேவையில்லாமல் வாரி இறைத்தாலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தோடு பல நல்ல செயல்பாடுகளும் நல்ல உள்ளங்களால் முன்னெடுக்கப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. குறிப்பாக, ஆதரவற்ற இல்லங்களுக்கு பல நல்ல மக்கள் சிறப்பான உதவிகளைச் செய்து, இந்த திருவிழாக்களின் நோக்கத்தை இன்னும் உரக்க, இந்த உலகத்திற்கு...

கடவுளின் திருவுளம் அறிவோம்

தனது மகனைப்பற்றி செக்கரியா வைத்திருந்த எண்ண ஓட்டங்களை இங்கே இந்தப்பாடலின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். தனது மகனை சரியாகப்புரிந்து வைத்திருந்தார் என்பதைக்காட்டிலும், கடவுளின் திருவுளத்தை செக்கரியா நன்றாக அறிந்து வைத்திருந்தார். அதன் வெளிப்பாடு தான் அவருடைய இந்த விசுவாச மொழிகள். தனது மகனை இறைவாக்கினராகவும், வரப்போகிற மெசியாவின் முன்னோடியாகவும் செக்கரியா வெளிப்படுத்துகிறார். யூதர்கள் அனைவருமே வாக்களிக்கப்பட்ட மெசியாவிற்காகக் காத்திருந்தனர். பெரும்பாலான மக்கள், வாக்களிக்கப்பட்ட மெசியா வருவதற்கு முன்னதாக, எலியா வந்து, அவருடைய வழியைத்தயாரிப்பார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தனர். மலாக்கி 3: 1 ”இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார். அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்”. மலாக்கி 4: 5 – 6 ”இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்....

நன்றியுணர்வு

நன்றி மறப்பது நல்லதன்று என்று வள்ளுவர் கூறுகிறார். நமது வாழ்வில் நாம் பல மனிதர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆனால், நன்றியுணர்வு என்கிற வார்த்தையும், அதற்கான பொருளும் இன்றைய சமூகத்தில் ஒரு பொருட்டாக நினைக்கப்படுவதில்லை. செய்த நன்றியை மறப்பது, நாம் தற்கொலை செய்துகொள்வதற்கு சமம். நன்றி என்ற வார்த்தைக்கு, இன்றைய நற்செய்தி வாசகத்தல் எடுத்துக்காட்டுக்களாக செக்கரியாவும், எலிசபெத்தும் சித்தரிக்கப்படுகிறார்கள். எலிசபெத்தம்மாளுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லை. குழந்தை பெறக்கூடிய வயதையும் கடந்துவிட்டாள். அந்த தருணத்தில் கடவுளின் அருள் அவளுக்கு கிடைக்கிறது. குழந்தை பாக்கியத்தைப் பெற்றுக்கொள்கிறாள். தான் பெற்றெடுக்கப்போகும் குழந்தைக்கு, யோவான் என்று பெயரிட பணிக்கப்படுகிறார்கள். பொதுவாக, குழந்தைக்கான பெயரை தாயோ, தந்தையோ தேர்ந்தெடுப்பார்கள். அந்த பெயர்களில் தங்களின் நெருக்கமான உறவுகளின் பெயரையோ அல்லது தந்தை, தாயின் பெயரையோ வைப்பது இன்றைக்கும் நம் மத்தியில் காணப்படுகிறது. அதேபோல செக்கரியாவின் உறவினர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், செக்கரியாவும், எலிசபெத்தம்மாளும் கடவுள் செய்த நன்மைகளுக்கு, நன்றியுணர்வோடு...