Category: தேவ செய்தி

பலன் தரும் வாழ்வு

வாழ்வின் வெற்றிக்கு எது சரியான வழி? என்பதற்கான உதாரணம் தான் இன்றைய நற்செய்தி வாசகம். விதைப்பவர் நிலத்தில் அறுபது மடங்கு மற்றும் நூறு மடங்கு பலன் கொடுக்கும் நிலத்தைப் பார்ப்போம். அங்கே விழுந்த விதைகளை, அந்த நிலமானது தனக்குள்ளாக ஏற்றுக்கொள்கிறது. தனது முழு ஆற்றலையும், சக்தியையும், அந்த விதை வளர்வதற்கு கொடுக்கிறது. எப்படியும் அந்த விதை, அதற்கான பலனைக் கொடுக்க வேண்டும் என்று தன்னையே அந்த நிலம் தியாகமாகக் கொடுக்கிறது. விதை விதைத்து பலன் தருகிறபோது, அந்த நிலத்தை யாரும் கண்டுகொள்வதில்லை. அறுவடையிலும், அதன் மகிழ்ச்சியிலும் தான், முழுமையான கவனம் கொண்டிருப்பார்கள். ஆனால், அதனைப்பற்றி அந்த விதை கவலைப்படாமல், தாழ்ச்சியோடு இருக்கிறது. நமது உள்ளம் அப்படிப்பட்ட அந்த நிலமாக இருக்க வேண்டும். பல நல்ல சிந்தனைகள் நமக்குள்ளாக விதைக்கப்படுகிறது. அது எங்கிருந்து வந்தாலும், திறந்த உள்ளத்தோடு நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி திறந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்கிறபோது, அது நமக்குள்ளாக ஆழமாக வேரூன்ற...

எளிய உள்ளம்

இந்த உலகத்திலே பலர் தங்களை ஞானிகளாகக் காட்டிக்கொள்கிறார்கள். தங்களுக்கு அறிவிருப்பதால், தங்களது அறிவாற்றலைக்கொண்டு பலவற்றை அறிந்திருப்பதால், எல்லாம் தஙக்ளுக்குத் தெரியும் என்கிற எண்ணம் அவர்களுக்குள்ளாக மேலோங்கியிருக்கிறது. ஆனால், இவர்களை நாம் ஞானிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியென்றால், உண்மையான ஞானி யார்? என்ற கேள்வி நமக்குள்ளாக எழும். இந்த உலகத்தில், யாரெல்லாம் கடவுளைப்பற்றிக் கொண்டு, தங்களது வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் தான் ஞானிகள். தங்களது அறிவுச்செருக்கினால், தங்களின் எண்ணத்தை, சிந்தனையை முன்னிறுத்தி வாழ்கிறவர்கள், ஞானிகளாக இருக்க முடியாது. இயேசு வாழ்ந்த காலத்தில், பரிசேயர், மறைநூல் அறிஞர், சதுசேயர் தங்களின் அறிவாற்றலைக்கொண்டு எல்லாம் சாதித்து விட முடியும் என்று நினைத்தார்கள். தாங்கள் சொல்வதுதான் சரி என்றும் அவர்கள் எண்ணினார்கள். கடவுளை அவர்கள் உயர்த்திப்பிடித்தாலும், தாங்கள் கடவுளையும் மிஞ்சியர்வர்கள் என்னும் எண்ணம், அவர்களது சிந்தனையில் ஊறிப்போயிருந்தது. இத்தகைய எண்ணத்தோடு வாழ்ந்தவர்களைத்தான், இயேசு கண்டிக்கிறார். கடவுள் இல்லாமல், தங்களது அறிவினால் அனைத்தையும் சாதித்து விடலாம் என்று எண்ணுகிறவர்களின்...

கடவுளின் பிரசன்னம்

யோனா இறைவாக்கினர் நினிவே நகருக்கு ஆண்டவருடைய வார்த்தையை அறிவிக்கச் சென்றார். அவருடைய வார்த்தையை அறிவிக்கவும் செய்தார். இன்னும் நாற்பது நாளில் நினிவே அறிவிக்கப்படும் என்றார். மக்கள் மனம்மாறினர். கடவுளும் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார். அவர்களை அழிக்காது விட்டார். இது யோனாவுக்கு பெருத்த வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே, கடவுளிடம் கோபித்துக்கொண்டு, அவர் தன் வழியே செல்கிறார். யோனாவின் வருத்தத்திற்கான காரணம் என்ன? அவர் ஓர் அருங்குறி, அதாவது அழிவு வரும் என்று எச்சரிக்கிறார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, கடவுள் மீது கோபம் கொள்கிறார். ஆனால், யோனா ஒன்றை மறந்துவிடுகிறார். அவர் தான் நினிவே மக்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாளமேயன்றி, அவர் சொன்ன வார்த்தைகள் அல்ல. மக்கள் யோனாவை நம்பியதால் தான், அவருடைய வார்த்தைகளை நம்புகிறார்கள். எனவே, யோனாவே ஓர் அடையாளம். இந்த உன்னதமான கடவுளின் கொடையை, யோனா இறைவாக்கினர் புரிந்துகொள்ள தவறி விடுகிறார். இந்த உதாரணத்தைப் போலத்தான், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள்,...

இயல்புகளுக்கேற்ப வாழ்வை முன்னெடுப்போம்

செபம் என்றால் “இதுதான்“ என்பதை நாம் அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால், இதுதான் இன்றைக்கு திருச்சபையில் நாம் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையாகவும் இருக்கிறது. திருச்சபை என்பது பலதரப்பட்ட எண்ணங்களையும், சிந்தனைகளையும், இயல்புகளையும் கொண்ட மிகப்பெரிய அமைப்பு. ஒரு சிலர் இயல்பாகவே துடிப்பாக இருப்பர். சிலர் அமைதியான இயல்பைக் கொண்டவர்களாக இருப்பர். திருச்சபையின் வழிபாட்டு முறை அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்படி நடக்கிறபோதுதான், அனைவருமே ஈடுபாட்டோடு பங்கு பெறுவதற்கு வசதியாக இருக்கும். ஒரு சிலர் ஆடிப்பாடி இறைவனைப் போற்ற விரும்பலாம். ஒரு சிலர் அமைதியாக இறைவனை மனதிற்குள் நினைத்து போற்றலாம். அவரவர் இயல்பிற்கேற்ப வழிபடுவதற்கு, அனைவருமே உதவியாக இருக்க வேண்டும். இதுதான் சிறந்தது, வழிபாடு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நமது எண்ணங்களைப் புகுத்துகிறபோது, அங்கே இயல்பாக பிரச்சனை எழுகிறது. இன்றைய நற்செய்தியிலும் அதைத்தான் பார்க்கிறோம். மார்த்தாவின் உபசரிப்பு, விருந்தோம்பல் பற்றிய எண்ணம் வேறு. மரியாவின் உபசரிப்பு, விருந்தோம்பல் பற்றிய எண்ணம் வேறு. இரண்டுமே...

இயேசுவின் மறைப்பணி உத்தி !

“பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்” என இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகிறது. “கூக்குரலிட மாட்டார். தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நீதியை வெற்றிபெறச் செய்யும்வரை நெரிந்த நாணலை முறியார்” என்னும் எசாயா இறைவாக்கினரின் வாக்கு நிறைவேறியதாக வாசகம் முடிகிறது. ஒரு பக்கம் இயேசு பரிசேயரின் சூழ்ச்சியை அறிந்தவராய், அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்கிறார். தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேசவேண்டாம் என்று தாம் குணமாக்கியவர்களிடம் கண்டிப்பாகச் சொன்னார். ஆனால், அதே வேளையில் தமது குணமாக்கும், நற்செய்தி அறிவிக்கும் பணியையும் சென்றவிடமெல்லாம் தொடர்ந்து ஆற்றினார். இதையே நாம் அவரது மறைப்பணி உத்தி என்று அழைக்கலாம். பரிசேயர்களுக்கு அஞ்சி, தமது பணியை இயேசு கைவிட்டுவிடவில்லை. ஆனால், இயன்றவரையில் அவர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் தம்மைக் காத்துக்கொண்டார். தமது “நேரம் வரும்வரையில்” தாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும், வீணாகச் சிக்கிக்கொண்டு, பணி செய்யும்...