Category: தேவ செய்தி

ஆண்டவரே என் ஆற்றல்

ஒவ்வொருநாளும் நாம் உணவு உண்கிறோம். அந்த உணவு தான் நாம் இயங்குவதற்கு, செயல்களைச் செய்வதற்கு ஆற்றலைத்தருகிறது. ஒரு வாகனம் இயங்க வேண்டுமென்றால், அதில் இருக்கிற எரிபொருள் எரிக்கப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் ஆற்றலால் வாகனம் இயங்குகிறது. ஆக, ஆற்றல் என்பது நம்மை இயக்குவதாக அமைகிறது. அது உணவாக இருக்கலாம், எரிபொருளாக இருக்கலாம். எல்லாமே இயக்கத்திற்கான அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இங்கே, ஆண்டவர் ஆசிரியரின் ஆற்றலாக இருக்கிறார் என்பதையும், ஆண்டவர் நம் ஆற்றலாக இருக்க வேண்டும் என்கிற செய்தியும் சொல்லப்படுகிறது. ஆண்டவர் எப்படி ஒருவரின் ஆற்றலாக இருக்க முடியும்? இந்த உலகத்தில் அநீதி ஏராளமாக நடக்கிறது. அந்த அநீதியை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டு, சமரசம் செய்யக்கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் அதனை எதிர்க்கிறார்கள். தங்களால் இயன்ற மட்டும் எதிர்க்கிறார்கள். அதனால் பலவிதமான எதிர்ப்பையும் நம்பாதிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் சோர்ந்து போய் விடுகிறார்கள். எதற்காக நாம் மட்டும் இப்படி வாழ வேண்டும்? என்கிற...

சிலுவையிலே தான் மீட்பு உண்டு

இயேசுவைப் பொறுத்தவரையில் அவருக்கு வாழ்வின் உச்சகட்டம் சிலுவை. சிலுவையில் தான் மீட்பு, சிலுவை தான் முடிவில்லாத வாழ்வைப்பெற்றுத்தரப்போகிறது என்பதை அவர் முழுமையாக நம்பினார். யோவான் 12: 23 ல் வாசிக்கிற, “மானிடமகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்கிற இறைவார்த்தை இதை வலியுறுத்துவதாக அமைகிறது. சிலுவைக்கும், மீட்புக்கும் உள்ள தொடர்பைப்பற்றி இயேசு தொடர்ச்சியாக பல இடங்களில் பேச வேண்டிய அவசியம் என்ன? அதனுடைய அர்த்தம் என்ன? வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோம் என்றால், வரலாற்றிலே இடம் பிடித்திருக்கிற சரித்திர நாயகர்களுக்கு இறப்புதான் இந்த அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. சரித்திரத்தில் இடம்பெற்ற மனிதர்களில் பலர் உயிர் வாழ்ந்தபோது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவும் இல்லை. புகழ் பெறவும் இல்லை. ஆனால், அவர்கள் தழுவிய மரணம் தான் அவர்களின் பெயர்களை சரித்திரத்தில் இடம்பெறச்செய்து, அவர்களுக்கு வரலாற்றில் தனி இடத்தைப்பெற்று தந்திருக்கிறது. இயேசு இறந்தபோது கூட நூற்றுவர் தலைவன் ஒருவர் ‘உண்மையிலே இவர் இறைமகன் தான்’ என்று சொன்னதும் இதை...

இயேசுவின் மதிப்பீடுகள்

இயேசு தனது பணிவாழ்வில், சீடர்களை பயிற்றுவிப்பதில் சிறந்த ஆசானாக செயல்படுகிறார் என்பதை, இன்றைய நற்செய்தி நமக்கு சொல்கிறது. எப்படி? இயேசு தனது பயிற்சியை பல தளங்களாக செயல்படுத்துகிறார். அந்த வகையில், முதலில் தன்னுடைய சீடர்களுக்கு விசுவாசத்தின் அவசியத்தை விளக்குகிறார். அவர்களது விசுவாசத்தை அதிகப்படுத்த முயற்சி எடுக்கிறார். புதுமைகள் செய்கிறபோதும், மக்களிடம் போதிக்கிறபோதும், சீடர்கள் தன்னுடன் இருந்து, விசுவாசத்தை அதிகப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறார். சீடர்கள் கற்றுக்கொள்ள கடினப்பட்டபோதிலும், இன்றைய நற்செய்தியில் அவர்கள் விசுவாசத்தைக் கற்றுக்கொண்டது தெளிவாகிறது. முதல் இலக்கில், தளத்தில் இயேசு வெற்றிபெறுகிறார். ஆனால், இது அடைய வேண்டிய இறுதி இலக்கு அல்ல. இன்னும் முன்னேற இலக்கு இருக்கிறது. அதை நோக்கி முன்னேற இயேசு முனைகிறார். சீடர்கள் விசுவாசத்தைக் கற்றுக்கொண்டவுடன், இயேசு அடுத்த தளத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கிறார். விசுவாசத்தோடு இருக்க வேண்டியவர்கள், எதிர்கொள்ள வேண்டிய சவால்களை அவர் முன்னெடுக்கிறார். விசுவாசத்தில் வாழ்கிறவர்களின் வாழ்க்கை எளிதானது அல்ல, அது ஒரு சவாலான பணி....

எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்

ஆண்டவரின் பிரசன்னம் என்றும் நம்மோடு இருக்கிறது என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் (+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 16-20)தெளிவாக எடுத்துரைக்கிறது. “இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்கிறார். பொதுவாக மற்ற சமயங்களில் கடவுள் என்கிறவர் எங்கோ இருந்துகொண்டு மக்களைப்பார்த்துக் கொண்டு இருக்கிறவர் போல சித்தரிக்கப்படுகிறார். ஆனால், கிறிஸ்தவ சமயத்தில் கடவுள் மக்களோடு இருக்கிறவராக தன்னை வெளிப்படுத்துகிறார். அவருடைய பிறப்பான ‘இம்மானுவேல்’ என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பதே சிறந்த செய்தி. விவிலியம் முழுவதும் கடவுள் மக்களோடு, குறிப்பாக ஏழை, எளிய மக்களோடு, துன்பப்படுகிற, துயரத்தால் வாடுகிற மக்களோடு தன்னையே இணைத்துக்கொள்கிறார் என்பது திட்டவட்டமாகச் சொல்லப்படுகிறது. அவர் அவர்களோடு பயணித்திருக்கிறார். அவர்களோடு தங்கியிருக்கிறார். அவர்களை வழிநடத்தியிருக்கிறார். எகிப்திலே அடிமைத்தனத்தில் வீழ்ந்திருந்த இஸ்ரயேல் மக்களை, அவர்களோடு தங்கியிருந்து வழிநடத்தி அவர்களை பாலும் தேனும் பொழியும் கானான் தேசத்திற்கு வழிநடத்தினார். துன்பங்களைக்கண்டு...

உவமை வாயிலாகப்பேசும் இயேசு

இயேசு இதுவரை மக்களிடம் பேசுகிறபோது உவமைகள் வாயிலாக, உருவகங்கள் வாயிலாகப் பேசுகிறார். உவமை என்பது புதிர் போன்றது. விடைக்கான செய்தி தரப்படுகிறது. அதை கேட்கிறவர் தனது அறிவைப்பயன்படுத்தி கண்டுபிடிக்க வேண்டும். சற்று ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்தால், நிச்சயம் அவர்களால், உவமை வாயிலாக இறையாட்சித்தத்துவத்தை அறிந்து கொள்ள முடியும். அதுதான் உவமை. அதைத்தான் இயேசு தனது போதனையில் மக்களுக்கு அறிவிக்கிறார். மக்களாகவே உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்று, அவர் உவமை வாயிலாகப் பேசுகிறார். இயேசு இவ்வளவுகாலம் மறைமுகமாக, உவமை வாயிலாகப்பேசியவர், தனது கருத்துக்களை மறைமுகமாகப் பேசியவர் இன்றைய நற்செய்தியில், இதுநாள் வரை தான், மறைமுகமாக சொல்லி வந்த கருத்துக்களை நேரடியாக, வெளிப்படையாகச்சொல்கிறார். ”தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன்” என்பதுதான் அந்த செய்தி. இந்த செய்தியைத்தான், போதனைகள் வாயிலாக, தனது வாழ்வு மூலமாக மக்களுக்கு மறைமுகமாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தது, தந்தையின் அன்பை எடுத்துரைப்பதற்காக. தந்தையின் இரக்கக்குணத்தை வெளிப்படுத்துவதற்காக. தந்தையைப்பற்றி அனைவரும் அறிந்துகொள்ள...