Category: தேவ செய்தி

சிக்க வைக்கும் புகழ்ச்சி!

பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்க வைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர். அவர்கள் அவரிடம் வந்து, “போதகரே, நீர் உண்மையுள்ளவர். ஆள் பார்த்து செயல்படாதவர். எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று சொல்லி, வரி செலுத்துவது முறையா, இல்லையா என்று கேட்டனர். இந்த நிகழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் எளிய பாடங்கள்: 1. புகழ்ச்சியிலும் சிக்கல் இருக்கிறது. பாராட்டுவதற்குப் புகழ்கிறவர்களும் இருக்கிறார்கள், சிக்க வைப்பதற்காகப் புகழ்கிறவர்களும் இருக்கிறார்கள். 2. போலியான புகழ்ச்சியில் மயங்கிவிடக்கூடாது. இயேசு பொய்யான புகழ்ச்சியைப் புரிந்துகொண்டார். “அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்துகொண்டு” என்று எழுதியுள்ளார் மாற்கு. எனவேதான், “ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். 3. உள்நோக்கமின்றிப் பிறரைப் புகழவேண்டும். நமது பாராட்டுகள் நேர்மையானதாக அமையட்டும். மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் பாராட்டுரைகள் உறவை வளர்ககும் வகையில் அமைய அருள்தாரும், ஆமென். ~ அருள்பணி. குமார்ராஜா

கடவுளின் நீதி

வாழ்க்கையில் நமது நினைப்பின்படி நிகழ்வுகள் நடக்கிறபோது, நமக்குள்ளாக கர்வம் குடிகொள்ள ஆரம்பித்துவிடுகிறது. அதன் விளைவாக, ஆணவமும், தலைக்கனமும் சேர்ந்து, கடவுளுக்கு நிகர் நான், என்கிற மனநிலை நமக்குள் குடிகொள்ள ஆரம்பித்து விடுகிறது. அந்த நினைப்பு வருகிறபோது, நாம் அழிய ஆரம்பித்து விடுகிறோம். இன்றைய வாழ்வில் பெரும்பாலான பணமுதலைகளின் வாழ்வு, இப்படிப்பட்ட வாழ்வாகத்தான் இருக்கிறது என்பதை, இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. தோட்டத்தொழிலாளர்கள் அந்த தோட்டத்தின் பலனை ருசிகண்டு விட்டார்கள். “ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா?” என்கிற சொல்லாடலுக்கு ஏற்ப, அனைத்துமே தாங்கள் நினைத்தது போலத்தான் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, இனியும் தாங்கள் நினைப்பது போலத்தான் நடக்கும், என்ற ஆணவமும், தலைக்கனமும் அந்த தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. இதுதான் அழிவின் தொடக்கம். கடவுள் நாம் தவறு செய்கிறபோது, நம்மை தண்டிப்பதற்கு காலம் தாழ்த்துகிறார் என்றால், அது அவருடைய இரக்கத்தின் உன்னத்தை, ஆழத்தை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. அதனை நாம் நமக்கு சாதகமாகப்...

தூய ஆவி

இன்றைய நற்செய்தியில் (+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-23) இயேசு தன் சீடர்களுக்கு தூய ஆவியைக்கொடுக்கிறார். யோவான் நற்செய்தியாளர் தூய ஆவியைப்பற்றி எழுதும்போது நிச்சயமாக தொடக்கத்தில் தூய ஆவியின் பங்களிப்பை நினைவுகூர்ந்து எழுதியிருக்க வேண்டும். தொடக்கநூல் 2: 7 ல் பார்க்கிறோம்: “அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர்மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்”. எசேக்கியேல் 37: 9 சொல்கிறது: “மானிடா! இறைவாக்குரைத்து உயிர்மூச்சிடம் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான்கு காற்றுகளிலிருந்தும் உயிர்மூச்சே வா, நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள் புகு. அப்பொழுது இவர்கள் உயிர் பெறுவர்”. இங்கே உயிர்தருகிறவராக தூய ஆவியானவர் சித்தரிக்கப்படுகிறார். சோர்ந்து போயிருக்கிற உள்ளங்களுக்கும், வாழ்க்கைப்புயலில் அடித்துச்செல்லப்பட்டு கரைகாண முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் உடைந்தவர்களுக்கு உறுதிதரும் பணியைச்செய்கிறவர் தூய ஆவியானவர். பயந்து நடுங்கிக்கொண்டு, தங்களது உடைமைளையும், உரிமைகளையும் காப்பாற்றிக்கொள்ள பயந்து ஓடிய சீடர்களுக்குத் துணிவைத்தந்தவர் தூய...

நேர்மையாளரையும், பொல்லாரையும் ஆண்டவர் சோதித்தறிகிறார்

ஒருவரை நல்லவரா? கெட்டவரா? என்று அறிவதற்கு, சோதனை செய்து பார்ப்பது மனிதர்களின் குணம். மிகப்பெரிய பொறுப்பை ஒருவரிடம் கொடுக்க விரும்பும் தலைவர், யாரிடத்தில் அதனைக் கொடுக்க விரும்புகிறாரோ, அவரை பலமுறை சோதித்திருப்பார். அந்த சோதனையில் எல்லாம், அவர் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே, அவரால் மிகப்பெரிய பொறுப்பை அவரிடம் கொடுக்கலாம் என்கிற எண்ணம் வருவதாக இருக்கும். இது மனிதர்களுக்குப் பொருந்தும் ஆனால், கடவுள் ஒருவரைச் சோதித்துப்பார்த்துதான் அறிந்து கொள்ள முடியுமா? அல்லது சோதித்து தான் அறிந்து கொள்ள வேண்டுமா? கடவுள் நேர்மையாளர்களையும், பொல்லாரையும் சோதித்து அறிகிறார் என்று திருப்பாடல் (திருப்பாடல் 11: 4, 5, 7) ஆசிரியர் சொல்கிறார். கடவுளுக்கு ஒருவரை யாரென்று தெரிய, சோதித்து அறிய வேண்டியதில்லை. அப்படியென்றால், எதற்காக கடவுள் சோதித்தறிகிறார்? என்று திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார்? கடவுள் அறிய வேண்டும் என்பதைவிட, மற்றவர்கள் ஒருவரை நேர்மையாளர் அல்லது பொல்லார் என்பதை அறிய வேண்டும் என்பதற்காக, கடவுள் அவர்களைச் சோதிக்கிறார்....

பிரிவினைகளை அகற்றுவோம்

இந்த நற்செய்திப்பகுதி(+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-26) நமக்கெல்லாம் மிக முக்கியமான பகுதி. காரணம், இயேசு நமக்காகச் செபிக்கிறார். இயேசுவின் செபம் என்ன? நாமெல்லாம் ஒன்றாய் இருக்க வேண்டும் என்பதுதான். எப்படி ஒன்றாய் இருக்க வேண்டும்? நாமெல்லாம் ஒன்றாய் இருப்பது சாத்தியமா? நமக்குள்ளே பல அடிப்படை வேறுபாடுகள் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். புரிதலில், வாழ்க்கைமுறையில், பண்பாட்டில், வழிபாட்டு முறையில் என பல வேறுபாடுகள் நம் மத்தியில் இருக்கிறது. இத்தகைய வேறுபாடுகள் நமக்குள்ளாக பல பிரிவினைகளையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. பிரிவினைகளாக இருப்பவை எப்படி நம்மை ஒன்றுபடுத்த முடியும்? இயேசு நம்மை அன்பால் ஒன்றுபட செபிக்கிறார். நமக்குள் இருக்கக்கூடிய வேறுபாடுகளை அவர் அறியாதவர் அல்ல. அந்த வேறுபாடுகள் ஒருவர் மற்றவர் மீதுள்ள அன்பை, மதிப்பைக் கூட்ட வேண்டுமே தவிர, குறைக்கக்கூடாது. கடவுளை நாம் அன்பு செய்தால், கடவுள் மீது நாம் நம்பிக்கை வைத்தால், கடவுளை நமது தந்தையாக ஏற்றுக்கொண்டால், ஒருபோதும் நமக்குள்ளாக இருக்கக்கூடிய...