Category: தேவ செய்தி

மதலேன் மரியா- அன்புக்கு ஓர் அடையாளம்

இன்று புனித மதலேன் மரியாவின் விழாவைக் கொண்டாடுகிறோம். புதிய ஏற்பாட்டில் நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்காத ஒரு புனிதை இவர். ஆனால், இவர்தான் இயேசுவோடு மிக நெருக்கமான அன்புறவு கொண்டிருந்தவர் என்பதற்கு நற்செய்தி நூல்கள் பல சான்றுகளை வழங்குகின்றன. குறிப்பாக, இயேசுவின் இறப்பின் வேளையில் அவரது ஆண் சீடர்கள் அனைவரும் ஓடிவிட, சிலுவையடியில் நின்றுகொண்டிருந்த துணிவு மிக்க பெண்களில் இவரும் ஒருவர். இயேசுவைக் கல்லறையில் வைத்தபிறகும்கூட, ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் இருள்நீங்கும் முன்பே மரியா இயேசுவின் கல்லறைக்குச் சென்றார் என்று நாம் வாசிக்கும்போது நாம் வியப்படைகிறோம். ஆம், “அன்பில் அச்சமில்லைâ€? என்று புனித யோவான் தம் திருமடலில் எழுதினாரே (1 யோவா 4:18), அந்த அன்புக்கு இலக்கணம் மதலேன் மரியா. “அன்புக்கு என்றும் முடிவிராதுâ€? (1 கொரி 13:10) என்று பவுலடியார் மொழிந்தாரே, அந்த அன்புக்கு அடையாளம் மகதலேன் மரியா. இறந்தபின்னும் அன்பு வாழும் என்பதை எண்பித்தவர் மகதலா மரியா. இப்புனிதையிடமிருந்து இயேசுவை...

நீதிக்காக குரல் கொடுக்கும் இயேசு

இயேசு தன்னுடைய சீடர்களின் சார்பாக வாதாடுகிறார். இயேசுவின் சீடர்கள் ஓய்வுநாளில் கதிர்களை பறிக்கிறார்கள். குற்றம் கண்டுபிடிப்பதற்காகவே காத்திருக்கிற ஒரு கூட்டத்தினர், இயேசுவின் சீடர்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஏன் இயேசுவின் சீடர்கள் மீது அவர்கள் குற்றம் சுமத்த வேண்டும்? எவ்வளவோ குற்றங்களை இயேசுவின் மீது சுமத்தியாயிற்று. ஆனால், இயேசு தனது அறிவாற்றலால் வெகுஎளிதாக அதிலிருந்து மீண்டு வந்து விடுகிறார். எனவே, இயேசுவுக்குப் பதிலாக, அவருடைய சீடர்களை இப்போது தாக்க ஆரம்பிக்கிறார்கள். சீடர்களை குற்றவாளிகளாக மாற்ற, அவர்கள் இந்த குற்றச்சாட்டுக்களைச் சொன்னாலும், அவர்களின் இலக்கு என்னவோ இயேசுதான். ஆனால், அதையும் இயேசு தவிடுபொடியாக உடைத்து எறிகிறார். இயேசு தன்னுடைய சீடர்கள் தவறு செய்ததாக நினைக்கவில்லை. அவர்கள் தவறு செய்யவில்லை என்பதுதான் யதார்த்தம். அவர்கள் வேண்டுமென்றோ, சட்டத்தை மீற வேண்டுமென்றோ, கதிர்களைப் பறித்து தின்னவில்லை. அந்த கதிர்களை திருடி விற்று, இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணமும் அவர்களுக்கு இல்லை. பசிக்காக, தங்களின் பசியை...

தாயன்பு

ஒரு தாய் தன் குழந்தையின் மீது ஒவ்வொரு மணித்துளியும் நினைவு வைத்திருப்பாள். அந்த குழந்தையின் தேவையை, அவளாகவே அறிந்து, அதனை நிறைவேற்றுகிறவள் தான் தாய். எந்த ஒரு தாயும் தன் குழந்தை வேதனைப்படுவதையோ, துன்பப்படுவதையோ விரும்பமாட்டாள். இந்த தாயன்பு தான், கடவுளின் அன்பாகச் சொல்லப்படுகிறது. இந்த தாயன்பை விட பல மடங்கு மேலானது கடவுளின் அன்பு. தாயன்பையே நாம் வியந்து பார்க்கிறோம். அப்படியென்றால், கடவுளின் அன்பு எந்த அளவிற்கு மகத்துவமானது என்பதை, இங்கே நாம் அறிந்து கொள்ளலாம். சுமைகளால் சோர்ந்திருப்பவர்களை இயேசு அழைக்கிறார். வழக்கமாக, நண்பர்களின் மகிழ்ச்சியில் நாம் அதிகமாகப் பங்கெடுப்போம். அவர்களோடு மகிழ்ந்திருப்போம். ஆனால், அவர்களின் துயரத்தில் பங்கெடுக்க வேண்டுமென்றால், ”என்னுடைய நிலையே எந்த அளவுக்கு மோசமானதாக இருக்கிறது” என்று, அதிலிருந்து ஒதுங்கிவிடுவோம். துன்பத்திலும், துயரத்திலும் பங்கெடுக்கிறவர்கள் வெகு குறைவுதான். ஆனால், இங்கே இயேசுவே முன்வருகிறார். அவராகவே முன்வந்து, நமது துன்பத்தில் பங்கெடுக்கிறார். நம்மை மீட்பதற்கு துணையாக இருக்கிறார். கடவுளின்...

எளிய உள்ளம்

இந்த உலகத்திலே பலர் தங்களை ஞானிகளாகக் காட்டிக்கொள்கிறார்கள். தங்களுக்கு அறிவிருப்பதால், தங்களது அறிவாற்றலைக்கொண்டு பலவற்றை அறிந்திருப்பதால், எல்லாம் தஙக்ளுக்குத் தெரியும் என்கிற எண்ணம் அவர்களுக்குள்ளாக மேலோங்கியிருக்கிறது. ஆனால், இவர்களை நாம் ஞானிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியென்றால், உண்மையான ஞானி யார்? என்ற கேள்வி நமக்குள்ளாக எழும். இந்த உலகத்தில், யாரெல்லாம் கடவுளைப்பற்றிக் கொண்டு, தங்களது வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் தான் ஞானிகள். தங்களது அறிவுச்செருக்கினால், தங்களின் எண்ணத்தை, சிந்தனையை முன்னிறுத்தி வாழ்கிறவர்கள், ஞானிகளாக இருக்க முடியாது. இயேசு வாழ்ந்த காலத்தில், பரிசேயர், மறைநூல் அறிஞர், சதுசேயர் தங்களின் அறிவாற்றலைக்கொண்டு எல்லாம் சாதித்து விட முடியும் என்று நினைத்தார்கள். தாங்கள் சொல்வதுதான் சரி என்றும் அவர்கள் எண்ணினார்கள். கடவுளை அவர்கள் உயர்த்திப்பிடித்தாலும், தாங்கள் கடவுளையும் மிஞ்சியர்வர்கள் என்னும் எண்ணம், அவர்களது சிந்தனையில் ஊறிப்போயிருந்தது. இத்தகைய எண்ணத்தோடு வாழ்ந்தவர்களைத்தான், இயேசு கண்டிக்கிறார். கடவுள் இல்லாமல், தங்களது அறிவினால் அனைத்தையும் சாதித்து விடலாம் என்று எண்ணுகிறவர்களின்...

நன்மை செய்ய சூளுரைப்போம்

தீயது செய்வது மட்டும் தவறல்ல, நல்லதைச் செய்யாமலிருப்பதும் தவறு தான். இன்றைய நற்செய்தியில் இயேசு, திருந்த மறுத்த நகரங்களைப்பார்த்து, மனமுடைந்து அவர்களின் அழிவை நினைத்து வேதனை கொள்கிறார். கடவுள் நம் அழிவில் மகிழ்ச்சி கொள்பவரல்ல. வேதனையுறுகிறவர். இஸ்ரயேல் மக்கள் செய்த தவறுக்குத்தான், அவர்கள் பலவேளைகளில் தண்டிக்கப்பட்டார்கள். ஆனாலும், அவர்கள் தண்டிக்கப்பட்டபோது, அவர்களை விட, அவர்களுக்காக வருந்தியவர், கடவுளைத்தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. அவர்கள் பல தவறுகளைச் செய்தார்கள். அதிலே ஒன்று, நன்மை செய்யாமலிந்தது. அதுவும் தவறுதான். நாம் தீயது செய்தால் தான், தவறு என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். நான் ஒன்றும் செய்யவில்லை. என்று, நன்மை செய்யாமலிருக்கும் ஒருவர் தப்பித்துக்கொள்ள முடியாது. அதுவும் தவறுதான். கடவுளின் தண்டனையைப் பெற்றுத்தரக்கூடிய அளவுக்கு, அந்த தவறு மிகப்பெரியது. எனவேதான், இயேசுவின் வாழ்வில் நாம் பார்க்கிறபோது, இயேசு சென்ற இடங்களில் எல்லாம், நன்மைகளைச் செய்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு, இயேசு நன்மை செய்வதை, ஒரு அளவுகோலாக...