Category: தேவ செய்தி

வேறுபாடுகள் நம்மை வளப்படுத்தட்டும்

ஒரு மிகச்சிறந்த தலைவர் என்பவர் மக்களை வழிநடத்துவதற்கு முன்னால், தனக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து தன்னோடு கூட வைத்திருக்க வேண்டும். போதனைகள் தலைவரோடு முடிந்து விடக்கூடாது. தொடரப்பட வேண்டும். இயேசு தனக்குப்பிறகும் தனது பணி தொடர வேண்டும் என நினைக்கிறார். அது வெறும் பெயரை நிலைநாட்டுவதற்கானது அல்ல. மாறாக, மக்கள் மீட்பு பெற வேண்டும் என்பதற்காக. மீட்புப்பணி தொடர்ந்தாற்றப்பட வேண்டும் என விரும்புகிறார். எனவே தனக்கான சீடர்களைத் தேர்ந்தெடுக்கிறார். இயேசு தனது சீடர்களாகத் தேர்ந்தெடுத்தது சாதாரணமானவர்களையும், வேறுபட்ட எண்ணம் உள்ளவர்களையும் என்கிற உண்மை பலரையும் வியக்க வைக்கலாம். இந்த சாதாரணமானவர்களால் கருத்து வேறுபாடு உள்ளவர்களால் என்ன செய்து விட முடியும், என்ற எண்ணமும் உள்ளத்தில் எழும். இயேசுவின் சீடர்கள் ஒவ்வொருவருமே, வித்தியாசமான குணம்கொண்டவர்கள். ஒருவரின் இயல்பு மற்றவரின் இயல்புக்கு எதிரான பண்பு கொண்டதாக இருந்தது. உதாரணமாக, மத்தேயு வரிதண்டுபவர். நாட்டை உரோமையர்களுக்கு விற்றுவிட்டு, சுயநலத்திற்காக அவர்களோடு உறவாடுகிறவர்கள் என்று யூத சமுதாயத்தினால் முத்திரைக்குத்தப்பட்டவர். அதேபோல்,...

நேர்மையில் நிலைத்திருந்து ஆண்டவரின் முகம் காண்பேன்

தன்னுடைய எதிரிகளின் சூழ்ச்சிகளாலும், தொடர் தேடுதல் வேட்டையினாலும் பெருத்த மன உளைச்சலுக்கும், விரக்திக்கும் ஆளாகியிருக்கிறார் தாவீது மன்னர். எங்கே தப்பிச்சென்றாலும், நிழல் போல தன்னுடைய எதிரிகள் தன்னை பின்தொடர்வதைக் கண்டு, மனம் வெதும்புகிறார். வேதனையின் உச்சத்திற்கே செல்கிறார். சாதாரண மனிதனாக, தன்னால் வாழ முடியவில்லையே என்று வேதனைப்படுகிறார். விரக்தியின் விளிம்பில் அவர் கடவுளை நோக்கி கூக்குரலிடுகிறார். இறைவனுடைய பாதுகாப்பிற்காகவும், புகலிடத்திற்காகவும் வேண்டப்படுகின்ற பாடலாக (திருப்பாடல் 17: 1, 2 – 3, 6 – 7, 8, 15) இது அமைந்திருக்கிறது. கடவுளிடம் தன்னுடை விண்ணப்பத்தை எடுத்துரைக்கிறபோது, தன்னுடைய நேர்மைத்தனத்தை அவர் விவரிக்கிறார். இவ்வளவு சூழ்ச்சிகள், வேதனை, நெருக்கடி, துன்பங்களுக்கு நடுவிலும், தான் கொண்டிருக்கிற நேர்மைத்தனத்தில் நிலைத்திருக்கும்படியாக ஆண்டவரிடத்தில் மன்றாடுகிறார். நேர்மையாக வாழ்ந்ததற்கு பரிசு கிடைக்கவில்லையே என்று தாவீது மனம் வெதும்பவில்லை. அழுது புலம்பவில்லை. இறைவனிடத்தில் முறையிடவில்லை. மாறாக, தன்னுடை நேர்தை்தனத்தில் தொடர்ந்து வளர, உறுதியாக இருக்க வேண்டுகிறார். தன்னுடைய எதிரிகளிடமிருந்து...

தம் சிறகுகளால் நம்மை அரவணைப்பார்

இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறவர்களுக்கு இறைவன் எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருப்பார் என்பதை, இந்த திருப்பாடல் (திருப்பாடல் 91: 1 – 2, 3 – 4, 14 – 15) நமக்கு எடுத்துக் கூறுகிறது. இங்கே இறைவனே பேசுவதாக, திருப்பாடல் ஆசிரியர் எழுதியிருக்கிறார். இறைவன் என்ன பேசுகிறார்? தன்னை அன்பு செய்கிறவர்களுக்கு தான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்பதுதான், இறைவனுடைய கூற்றாக இருக்கிறது. இறைவன் தன்னை முழுமையாக நம்புகிறவர்களுக்கும், தன்னை நோக்கி மன்றாடுகிறவர்களுக்கும் எப்படியெல்லாம் உதவி செய்யப்போகிறார் என்பதை, இந்த திருப்பாடல் நமக்கு விளக்கமாகக் கூறுகிறது. அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகமும் (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-26) நமக்கு அறிவிக்கிறது. இயேசு தொழுகைக்கூடத்தலைவரின் மகளையும், பல ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் அவதியுற்ற பெண்ணையும், அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையின் மிகுதியினால் காப்பாற்றினார் என்பது, இங்கே நமக்கு தெளிவாக விளக்கப்படுகிறது. ஆக, கடவுளை நம்பினோர் எப்போதுமே கைவிடப்பட மாட்டார்கள் என்பது, இங்கே தெளிவாகிறது....

துணிவும், நம்பிக்கையும்

எங்கே நம்பிக்கை இருக்கிறதோ, அங்கே துணிவு இருக்கிறது. நம்பிக்கை இருக்கிற இடத்தில் துணிவு இருக்கிறது. நம்முடைய அன்றாட வாழ்க்கையிலே, நாம் சந்திக்கின்ற சவால்களும், இன்னல்களும் ஏராளம். இத்தகைய தருணங்களில், அவற்றை நம்பிக்கையின் துணை கொண்டு துணிவோடு சந்திக்க நாம் அறிவுறுத்தப்படுகிறோம். அதாவது கடவுள் மட்டில் முழுமையாக நம்பிக்கை வைத்து, நம்முடைய பாரங்களை, துன்பங்களை அவர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையோடு வாழ அழைக்கப்படுகிறோம். ஒரு குழந்தை, தன்னுடைய தாயிடமோ, தந்தையிடமோ இருக்கின்றபோது, தன்னை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்கிற துணிச்சலோடு இருப்பதாக உளவியல் அறிஞர்கள் கூறுவார்கள். இதற்கு காரணம், தன்னுடைய பெற்றோரிடம் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கை. என்ன நடந்தாலும், என்னை, என் பெற்றோர் பார்த்துக்கொள்வார்கள் என்கிற, ஆணித்தரமான பிடிப்பு. அந்த குழந்தை கொண்டிருக்கக்கூடிய நம்பிக்கையை, ஆழமான எண்ணத்தை நமதாக்க அழைக்கப்படுகிறோம். நம்முடைய விண்ணகத்தந்தையின் மீது, நாம் உண்மையிலே நம்பிக்கை கொண்டிருந்தால், நம்முடைய வாழ்விலே ஏற்படுகின்ற எத்தகைய துன்பத்தையும் கண்டு அஞ்ச...

இயேசுவோடு இருக்கிற மகிழ்ச்சி

யூதர்களுக்கு தர்மம், செபம் மற்றும் நோன்பு ஆகிய மூன்றும் முக்கியமானவை. இயேசுவிடத்தில் யோவானின் சீடர்கள் நோன்பு பற்றி கேட்கும்போது, இயேசுவும் அவருடைய சீடர்களும் நோன்பிருக்கவில்லை. இயேசு நோன்பை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை என்பதல்ல இங்கே சுட்டிக்காட்டப்படு;ம் பொருள். மாறாக, இயேசுவின் பிரசன்னத்தை, இருப்பை வலியுறுத்துவதாக அமைவதுதான் இந்த நற்செய்திப்பகுதியின் மையம். இயேசு நம்மோடு இருக்கின்றபோது நாம் அதை மகிழ்வோடு கொண்டாட வேண்டும். இயேசு நம்மோடு இருப்பது நமக்கு மிகப்பெரிய ஆனந்தம் தருவதாக அமைகிறது. இயேசுவின் இருப்பு போற்றி மகிழ்வோடு இருக்கக்கூடிய நிகழ்வு. நாம் நோன்பு இருப்பது இயேசுவின் வருகைக்காகத்தான். கடவுளின் அருளைப்பெற்றுக்கொள்ளத்தான். அப்படியிருக்கின்றபோது, இயேசுவே நம்மோடு இருக்கின்றபோது நாம் ஏன் நோன்பு இருக்க வேண்டும்? என்பது இயேசுவின் கேள்வி. ஒவ்வொருநாளும் நற்கருணையில் இயேசு எழுந்தருளி வருகிறார். அவர் நம்மோடு இருக்கின்றபோது நமக்கு கவலைகள் இருக்கக்கூடாது. இயேசு நம்மோடு இருப்பது நமக்கு மகிழ்வைத்தர வேண்டும். அந்த மகிழ்ச்சி நிலைத்திருக்க இறைவனை மன்றாடுவோம். ~...