Category: தேவ செய்தி

இறைவனுக்கு பிரமாணிக்கமாய் இருப்போம்

திருச்சட்டத்தை கடவுள் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்தார். மோசே இஸ்ரயேல் மக்களால் பெரிதும் மதிக்கக்கூடியவர். எனவே தான் மத்தேயு நற்செய்தியாளர், இயேசுவை புதிய மோசேயாக ஒப்பிட்டு, தனது நற்செய்தியை எழுதுகிறார். அதேபோல், பழைய ஏற்பாட்டை நிறைவேற்ற வந்தவராகவும் சித்தரிக்கிறார். இஸ்ரயேல் மக்கள் மதிக்கக்கூடிய மற்றுமொரு மிகப்பெரிய மனிதர் எலியா. இறைவரக்கினர்களுள் மிகச்சிறந்த இறைவாக்கினராக, இஸ்ராயேல் மக்களால் கருதப்படுகிறவர். இவர்கள் இருவரும் இயேசு தனது சாவை முதல்முறையாக முன்னறிவித்தவுடன், இயேசுவோடு உரையாடுகிறார்கள். இந்த இரண்டு பெரிய இறைவாக்கினர்களோடு தந்தையாம கடவுளும் பூரிப்படைகிறார். இந்த இரண்டுபேரும் இங்கே தோன்றுவது ஒரு சிறந்த பொருளை நமக்குத்தருகிறது. அதாவது, திருச்சட்டத்தையும், இறைவாக்கினர்கள் முன்னறிவித்ததையும் இயேசு நிறைவேற்றுகிறவராக விளங்குகிறார் என்பதுதான் அது, மோசே திருச்சட்டத்தையும், எலியா இறைவாக்கினரையும் இங்கே பிரதிபலிக்கிறார்கள். கடவுள் வெறுமனே வார்த்தைகளைச்சொல்கிறவர் அலல, மாறாக, தன்னுடைய வாக்குறுதிகளுக்கு பிரமாணிக்கமாய் இருக்கிறவர் என்பதையே இது காட்டுகிறது. நமது கடவுள் வாக்குறுதி மாறாதவர், சொன்னதைச் செய்து முடிப்பவர்....

நன்மை செய்வதே வாழ்க்கை

”ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா? இல்லையா?” – என்பது கடினமான கேள்வி. பதில் சொல்ல முடியாத கேள்வியல்ல. ஆனால், பதில் சொல்ல தயங்கக்கூடிய கேள்வி. அப்படிப்பட்ட கேள்வியை இயேசு கேட்கிறார். நிச்சயம், பரிசேயர்களின் உள்ளத்தில், அதற்கான பதில் உடனே வந்திருக்கும். ”முறையல்ல” என்பதாகத்தான், அவர்களுடைய பதில் இருந்திருக்கும். ஆனாலும், சொல்லத் தயங்குகிறார்கள். ஏன்? அவர்களைப் பொறுத்தவரையில் அது சரியான பதிலாக இருந்தாலும், அவர்களின் பதில் மக்கள் மத்தியில் வெறுப்பைக் கொடுக்கும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். எனவே தான், அமைதியாக இருந்தனர். சாதாரண மக்களுக்கு தெரிந்த மனிதநேயம் கூட பரிசேயர்களுக்கு தெரியாதது வேதனையிலும் வேதனை. அவர்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசினார்கள். சாதாரண பாமர மக்கள், மனிதநேயத்தைக் காப்பாற்றுவதுதான், சிறந்த ஒன்றாக இருக்கும் என எண்ணுகிறபோது, படித்த, அறிவாற்றலோடு விளங்குகிற பரிசேயர்கள், அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் இருப்பது, நிச்சயம் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதிகாரத்தில் இருக்கிறவர்களும், ஆணவத்தில் இருக்கிறவர்களும் இத்தகைய மனநிலையோடு தான் இருக்கிறார்கள்....

தடைகளைத்தகர்த்தெறிவோம், இறையரசுக்கு தகுதிபெறுவோம்

இயேசுவின் காலத்தில் தொழுகைக்கூடங்களில் குறிப்பிட்ட நபர்தான் போதிக்க வேண்டும் என்ற ஒழுங்கு ஒன்றுமில்லை. அந்த தொழுகைக்கூடத்தின் தலைவர் வந்திருக்கிறவர்களில் நன்றாக போதிக்கக்கூடியவர் யாருக்கும் அந்த வாய்ப்பைத்தரலாம். இயேசுவுக்கு அங்கே போதிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததில் வியப்பேதுமில்லை. ஏனெனில், இயேசுவை மக்கள் சிறந்த போதகரென ஏற்றுக்கொண்டிருந்தார்கள். இயேசுவின் போதனையைக்கேட்டு அவருடைய சொந்த ஊர் மக்களும் வியந்துபார்த்தனர். ஆனாலும் அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். காரணம் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு பல தடைகள் இருந்தது. இயேசுவின் குடும்பப்பிண்ணனி, இயேசுவின் கல்வியறிவு பற்றிய சந்தேகம், இயேசு அவர்களில் ஒருவராக இருந்ததால், அவரைப்பற்றிய குறைவான மதிப்பீடு போன்றவை இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு தடையாக இருந்தவைகளாகும். நல்லது என்று தெரிந்திருந்தும், நம் கண்முன்னே இதுபோன்று இருக்கக்கூடிய தடைகள் அதை ஏற்றுக்கொள்வதற்கு தடையாக இருந்தது. இதனால் இழப்பு என்னவோ நமக்குத்தான். அதை உணர்ந்து, நன்மையின் பக்கம் நாம் துணைநிற்போம். நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்வோம். எனது வாழ்வில் நன்மையின் பக்கம் நிற்காமல் இருப்பதற்கு எவை எவை...

ஆண்டவரே! உம் உறைவிடம் எத்துணை அருமையானது

திருப்பாடல் 84: 2, 3, 4 – 5, 7 & 10 இறைவன் வசிக்கக்கூடிய ஆலயம் எத்துணை மகிமையானது என்பதை இந்த திருப்பாடல் விளக்குவதாக இருக்கிறது. ”அருமையானது” என்கிற பொருள், ஆலயத்தின் உயர்ந்த மண்டபங்களையும், சுரூப வேலைப்பாடுகளையும் குறிக்கக்கூடிய வார்த்தையல்ல. ஆலயத்தின் சிறப்புத்தோற்றத்தையும் குறிப்பதல்ல. இங்கே நாம் கவனிக்கக்கூடிய முக்கியமான ஒன்று, திருப்பாடல் ஆசிரியர் எருசலேம் தேவாலயத்தை மையமாக வைத்து இந்த பாடலை எழுதுகிறார். எருசலேம் தேவாலயம் பார்ப்பதற்கு அழகானது. பரவசம் தரக்கூடியது. அப்படியானால், ஆசிரியர் ஆலயத்தைப்பார்த்து, “அருமையானது“ என்று சொல்லக்கூடிய பிண்ணனி என்ன? என்பதை இப்போது பார்ப்போம். ஆலயம் என்பது ஆண்டவர் வாழக்கூடிய இல்லம். ஆண்டவரின் ஆலயத்தில் இருக்கிறபோது, நமக்கு எந்த கவலையும் எழுவது கிடையாது. ஒரு தாயின் மடி எப்படி நம்முடைய கவலைகளுக்கெல்லாம் சிறந்த மருந்தாக இருக்கிறதோ, அதேபோல இறைவனின் இல்லம் நம் அனைவருக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது. நம்முடைய கவலைகளைப் போக்கக்கூடிய இடமாகவும், கண்ணீரைத்துடைக்கக் கூடிய...

கடின உழைப்பின் பலன்

யூத ராபிக்களின் போதனைப்படி, ஒரு மனிதர் புதையலைக் கண்டுபிடித்தால் அது அவருக்கு சொந்தமானதாகும். அதற்கு அவர் மட்டும் தான் உரிமை கொண்டாட முடியும். போர்கள் வருகிறபோது, மக்கள் தங்களது நிலபுலன்களை விட்டுவிட்டு அடிக்கடி வேறு இடங்களுக்குச் சென்று விடுவதால், அவர்கள் சேர்த்து வைத்திருந்த பணம், புதையலாக பல இடங்களில் புதைக்கப்பட்டிருந்தது. எனவே, அடிக்கடி இந்த புதையல்களை மக்கள் கண்டுபிடிப்பது வழக்கமாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு புதையலைத்தான், அந்த மனிதர் கண்டுபிடிக்கிறார். புதையலைக் கண்டுபிடிக்கிற மனிதர் சோம்பேறி அல்ல. புதையலுக்காக அலைகிறவர் அல்ல. அவர் உழைக்கிறார். புதையலுக்காக உழைக்கவில்லை. வழக்கமாக அவர் உழைப்பது போல உழைக்கிறார். அவரது மனதில் புதையலைப்பற்றிய எண்ணமில்லை. தனது கடமையைச் செய்கிறார். அந்த கடமையின் இடையில், இந்த புதையலைக் கண்டுபிடிக்கிறார். நமது வாழக்கையில் சோம்பேறித்தனத்திற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. நாம் உழைக்க வேண்டும். நமது கடமையை நிறைவாகச் செய்ய வேண்டும். அதற்கான பலனையும், அதனைவிட பலவற்றையும், கடவுள் நமக்குத்...