கிறிஸ்தவ ஒற்றுமை
இன்றைய நற்செய்தியில் (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16) நாம் பார்க்கிற வேலையாட்கள், வேலைக்காகக் காத்துக்கொண்டிருந்தவர்கள், சோம்பேறிகள் அல்ல. காலையிலிருந்து அவர்கள் யாராவது தங்களை வேலைக்கு அழைத்துச்செல்வார்களா? என்று காத்திருக்கிறார்கள். இவர்கள் அன்றாடக்கூலிகள். சமுதாயத்தின் அடிவிளிம்பில் இருக்கக்கூடிய மக்கள். அடிமைகளைவிட இவர்களின் நிலைமை மிக மோசமாக இருந்தது. அடிமைகளின் நிலைமை அவர்கள் இருக்கும் வீட்டின் நிலைமையைப்பொறுத்து மாறுபடும். உணவுக்கு அவர்களுக்கு கஷ்டம் இருக்காது. என்னதான் அடிமை வேலை செய்ய வேண்டியிருந்தாலும், பட்டினி நிலைமை இருக்காது. ஆனால், இங்கே சொல்லப்படுகிற அன்றாடக்கூலிகளின் நிலைமை அப்படி அல்ல. உழைத்தால் தான் உண்ண முடியும் என்ற நிலைமை. கடுமையாக நாள் முழுவதும் உழைத்தாலும், அரைவயிற்று உணவு தான் அவர்களுக்கு கிடைக்கும். ஒருநாள் வேலையில்லை என்றாலும், அவர்களின் குடும்பமே பட்டினி கிடக்க வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட தொழிலாளர்களைத்தான் இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கிறோம். சீடர்கள் இயேசுவோடு தொடக்கமுதலே இருப்பதால் அவர்களுக்குத்தான் முதல் உரிமை என்பதல்ல. கிறிஸ்துவை, கிறிஸ்துவின்...