கடவுளுக்கு உரியவர்கள்
ஒரு யூத ஆண்குழந்தை பிறந்த பிறகு மூன்று சடங்குகளை பெற்றோர் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். 1. விருத்தசேதனம். குழந்தை பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதன சடங்கு நிறைவேற்றப்பட்டது. இந்த ஒரு புனிதமான சடங்காக கருதப்பட்டது. எந்த அளவுக்கு என்றால், ஒருவேளை எட்டாம் நாள், ஓய்வுநாளாக இருந்தால், இதனை நிறைவேற்றுவதற்கு எந்த தடையும் இல்லை. சாதாரண வேலையே செய்வதில் அதிக அக்கறை காட்டுகிற ஓய்வுநாளில், விருத்தசேதனம் செய்வதற்கு அனுமதி உண்டு என்பதில் இருந்து, இது எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிந்து கொள்ள முடியும். 2. தலைப்பேறு ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படுதல். எகிப்திலே இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக இருந்தபோது, அவர்களை விடுவிக்காமல் பார்வோன் மன்னன் இறுகிய மனத்தோடு இருந்தான். அந்த சமயத்தில், ஆண்டவர் எகிப்தில் இருந்த கால்நடைகள் முதல் மனிதர்கள் வரையிலான தலைப்பேறுகளை சாகடித்தார். ஆனால், இஸ்ரயேல் மக்களின் தலைப்பேறுகள் காப்பாற்றப்பட்டன. அதை நினைவுகூறும் வகையில், தலைப்பேறுகள் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டன. இதனை மீட்பதுதான்...