Category: தேவ செய்தி

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்

இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களும் கடவுளை ஆர்ப்பரித்து வாழ்த்த வேண்டும் என்று இந்த திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது. கடவுளை வாழ்த்துவதற்கு என்ன காரணங்களை ஆசிரியர் கூறுகிறார்? மூன்று பண்புகளை நாம் கடவுளை வாழ்த்துவதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. அதுதான் ஐந்தாம் இறைவார்த்தையில் நாம் பார்க்கிறோம்: ”ஆண்டவர் நல்லவர், என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு, அவர் தலைமுறைதோறும் நம்பத்தக்கவர்”. இந்த மூன்று பண்புகளை இன்றைய நாளில் நாம் சிந்திப்போம். கடவுள் நன்மைகளைச் செய்யக்கூடியவராக இருக்கிறார். மக்கள் எவ்வளவுதான் நன்றியுணர்வு இல்லாமல் வாழ்ந்தாலும், கடவுள் அதனை ஒரு பொருட்டாக நினைத்து, மக்களுக்கு தீமை செய்ய முற்படுவதில்லை. நன்மை செய்வது ஒன்றையே அவர் இலக்காக வைத்திருக்கிறார். 2. கடவுளின் அன்பு எந்நாளும் மக்களுக்கு இருக்கிறது. கடவுளின் அன்புக்கு மக்கள் தகுதியற்ற நிலையில் இருந்தாலும், கடவுள் மக்களை தொடர்ந்து அன்பு செய்கிறவராக இருக்கிறார். அவரது அன்பு தாயன்பிற்கு ஒப்பிடப்பட்டு சொல்லப்படுகிறது. ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளை எல்லா நிலைகளிலும்...

ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்

ஆண்டவர் முன்னிலையில் நாம் மகிழ்ந்து பாட இந்த திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது. நாம் ஏன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்? நமது மகிழ்ச்சிக்கு எது காரணம்? ஆண்டவர் வர இருக்கின்றார் என்கிற செய்திக்காக நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். எதற்காக ஆண்டவர் வர இருக்கின்றார்? இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு மெசியாவின் வருகை. அடிமைப்பட்டுக்கிடந்த இஸ்ரயேலுக்கு விடுதலையை வழங்கவும், அநீதியால் மலிந்து போயிருந்த உலகத்தை, நீதியோடு ஆட்சி செய்யவும் இஸ்ரயேல் மக்கள் மெசியாவை எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறும் காலம் வருகிறது, எனவே, அனைவரும் இதனை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள் என்று ஆசிரியர் நமக்கு அழைப்புவிடுக்கிறார். இஸ்ரயேல் மக்கள் எதிர்பார்த்திருந்த மெசியாவை தாங்கள் பார்த்ததாக யோவானின் சீடர்கள் சான்று பகர்வதை இன்றைய நற்செய்தியும் நமக்கு எடுத்துக்கூறுகிறது. இது இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கை வீண்போகவில்லை என்பதையும், கடவுள் தன்னுடைய வார்த்தைக்கு உண்மையுள்ளவராய் இருக்கிறார் என்பதையும், இது மகிழ வேண்டிய நேரம் என்பதையும் நமக்கு அறிவிக்கக்கூடிய...

மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்

திருப்பாடல் 98: 1- 6 ஆண்டவரை வாழ்த்த வேண்டும், போற்ற வேண்டும், புகழ வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் அழைப்பவிடுக்கிறார். எதற்காக கடவுளைப் போற்ற வேண்டும்? ஏனென்றால், அவர் இந்த உலகம் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த விடுதலையை நமக்குத்தந்திருக்கிறார். இங்கே விடுதலை என்று சொல்லப்படுவது என்ன? எந்த விடுதலையை ஆசிரியர் இங்கே கோடிட்டுக்காட்டுகிறார்? தொடக்கநூலில் (1: 31) நாம் பார்க்கிறோம்: ”கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாக இருந்தன”. தொடக்கத்தில் இருந்த இந்த ஆரோக்யமான நிலை தொடரவில்லை. அது மனிதனின் கீழ்ப்படியாமையால் இழந்துபோனதாக மாறியது. மனிதனின் தவறால் தீமை இந்த உலகத்திற்குள் நுழைந்தது. தான் படைத்த மனிதனே இப்படி தீமை நுழைவதற்கு காரணமாகிவிட்டானே என்று, கடவுள் கோபம் கொண்டு மானுட சமுதாயத்தை புறந்தள்ளி விடவில்லை. இழந்து போனதை மீட்டெடுக்க வாக்குறுதி கொடுக்கிறார். அந்த எதிர்கால விடுதலையை இறைவாக்கினர் வாயிலாக முன்னறிவிக்கிறார். அந்த விடுதலையைத்தான் இந்த திருப்பாடலில் நாம்...

வாழ்வின் சோதனைகள்

1யோவான் 2: 18 – 21 வாழ்வின் சோதனைகள் சோதனை என்பது வாழ்வின் எல்லாருக்கும் வரக்கூடியது. ஒரு சிலர் சோதனைகளைத் தாங்க முடியாமல், அந்த சோதனைகளுக்கு பலியாகி விடுகின்றனர். ஒரு சிலர் அதனை எதிர்த்து நிற்கின்றனர். மற்றும் சிலர், சோதிக்கிறவர்களோடு சேர்ந்து கொள்கிறார்கள். இன்றைய வாசகம், இப்படிப்பட்டவர்கள் மட்டில், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகிறது. நாம் கிறிஸ்துவோடு இருக்கிறபோது, நமக்கு பல்வேறு சோதனைகள் வரும். கிறிஸ்துவுக்கு எதிராக இருக்கிறவர்கள் இந்த சோதனைகளை நமக்கு ஏற்படுத்துவார்கள். நம்மை கிறிஸ்துவிடமிருந்து பிரிக்க முயற்சி எடுப்பார்கள். நாம் அவர்களின் சோதனைகளுக்கு பலியாகி விடக்கூடாது என்பது தான், யோவான் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிடுகிறார். ஏனென்றால், எதற்காக நாம் இதுவரை காத்திருந்தோமோ, அந்த காலம் வந்து விட்டது. கிறிஸ்துவுக்காக காத்திருந்த காலம் கனிந்து விட்டது. இந்த காலத்திற்காகத்தான் இவ்வளவு நாட்கள் நம்மையே நாம் தயாரித்துக் கொண்டு இருந்தோம். இவ்வளவு நாட்கள் பொறுமையாக இருந்த நாம், இந்த...

இயேசு, மரி, சூசை – திருக்குடும்பம் பெருவிழா

1சாமுவேல் 1: 20 – 22, 24 – 28 அன்னாவின் அர்ப்பணம் விவிலியத்தில் யார் தனியொருவராக அதிகமாக துன்பங்களைச் சந்தித்தவர் என்று பார்க்கிறபோது, நிச்சயம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு அதில் முதல் இடமுண்டு. ஏனென்றால், அவர் கடவுளின் மகனாக இருந்தபோதும், மனித வடிவெடுத்தார். வல்லமை இருந்தாலும் கத்தாத செம்மறியாக இருந்தார். தவறே செய்யவில்லை என்றாலும், அவமானச்சிலுவையை ஏற்றுக்கொண்டார். நமக்காக உயிர்துறந்தார். இதற்கு அடுத்து, நிச்சயம் யோபு என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அதன் பின் இறைவாக்கினர்கள், குறிப்பாக எரேமியா, எலியா என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. விவிலியத்தில், அன்னை மரியாளைத் தவிர, பெண்களில் அதிக துன்பப்பட்டவர்கள் என்கிற பட்டியலைப் பார்க்கிறபோது, அவ்வளவாக நமக்கு யாருடைய பெயரும் தென்படுவதில்லை. அவர்களுடைய அதிகபட்ச துன்பமாக நமக்குத் தரப்படுவது, குழந்தையின்மை. நிச்சயம் அது பெண்களுக்கு மிகப்பெரிய துன்பம் தான். ஆண்வர்க்க சமுதாயத்தில், அத்தகைய கொடுமை நிச்சயம் பெண்களுக்கு அதிகமானது தான்....