Category: தேவ செய்தி

தூய்மையான உள்ளம்

யாக்கோபு தன்னுடைய திருமுகத்தை உலகம் முழுவதிலும் சிதறுண்டு கிடக்கிற, யூதக்கிறிஸ்தவர்களுக்கு எழுதுகிறார். ஆயினும், இது எல்லாருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. கிறிஸ்தவ வாழ்வு என்பது எளிதானது அல்ல. கிறிஸ்தவனாக வாழ்வது என்றால் என்ன? அதற்கான விழுமியங்கள் என்னென்ன? என்பதை, இந்த திருமுகம் முழுவதிலும் எழுதியிருக்கிறார். அதில் முக்கியமான விழுமியமாக பார்க்கப்படுவது, ஒருவரது தூய்மையான வாழ்க்கை. ஒருவருடைய பணிவு தான், தூய்மையான உள்ளத்தோடு அவரை இறைவனிடம் அழைத்துச்செல்லும் என்பது, அவருடைய அறிவுரையாக இருக்கிறது. யார் பெரியவர்? என்று தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்ட அந்த நிகழ்வு, நிச்சயம் யாக்கோபிற்கு தங்களைப் பற்றி, சிரிப்பை வரவழைத்திருக்கும். இப்படியெல்லாம் இருந்திருக்கிறோமே என்ற நினைவை அவருக்கு தந்திருக்க கூடும். மனிதர்கள் கூடிவாழ்கிறபோது, தங்களுக்குள் யார் பெரியவர்? என்கிற போட்டி எழுவது இயல்பு. அறிவுள்ளவர்கள் தங்கள் அறிவைக்கொண்டு மற்றவர்களை அடக்கி ஆள நினைக்கிறார்கள். தங்களின் அறிவுத்திறமையைக் கொண்டு, தங்களை பெரியவர்களாக காட்டிக்கொள்ள முனைகிறார்கள். வலிமையுள்ளவர்கள் தங்கள் உடல் பலத்தைக்காட்டி வறியவர்களை அடக்குமுறைப்படுத்துகிறார்கள்....

ஆண்டவர் இரக்கமும், அருளும் கொண்டவர்

திருப்பாடல் 103: 1 – 2, 3 – 4, 8, 10, 12 – 13 விவிலியம் முழுவதும் நாம் பார்த்தோமென்றால், இந்த இரண்டு பண்புகளையும் நாம் கடவுளின் பண்புகளாகச் சுட்டிக்காட்ட முடியும். இரக்கம் என்பது மனம் இளகுதல், மனம் இரங்குதல் என்று பொருள்படுத்தலாம். கடவுள் மனம் இரங்குகிறவராக, இளகுகிறவராக இருக்கிறார். இஸ்ரயேல் மக்கள் பல தவறுகளைச் செய்தார்கள். அந்த தவறுகளை அவர்கள் அறியாமல் செய்யவில்லை. தெரிந்தே செய்தார்கள். தாங்கள் செய்வது தவறு என்பது தெரிந்தும், அது கடவுளுடைய கோபத்தைக்கிளறும் என்பதை அறிந்தும் தவறு செய்கிறார்கள். ஆனாலும், இறைவன் அவர்களுக்கு இரக்கம் காட்டுகிறார். இறைவன் இரக்கம் காட்டி, மன்னிப்பு மட்டும் வழங்கவில்லை. அவர்களுக்கு தன்னுடைய அருளையும் அதிகமாகத்தருகிறார். பொதுவாக, நமக்கு எதிராக தவறு செய்கிறவர்களை மன்னிப்பதற்குக் கூட நமக்கு மனமிருக்காது. ஒருவேளை மற்றவர்களின் தொந்தரவின் பொருட்டு, அவர்களை நாம் மன்னிக்கலாம். ஆனால், அவர்களுக்கு உதவி செய்வதோ, அவர்கள் நன்றாக இருக்க...

வேர்களைத்தேடி…

மத்தேயு 16 : 13- 20 அதிகாரம் என்பது ஆட்டுவித்து ஒடுக்குவதற்கல்ல! அன்போடு வழிநடத்துவதற்கு! அதிகாரம் என்பது வாட்டி வதைப்பதற்கல்ல! வாஞ்சையோடு இருப்பதற்கு! அதிகாரம் என்பது திட்டித் தீர்ப்பதற்கல்ல! தீர்க்கமான திட்டமிடுவதற்கு! இன்றைய நாள் நம் தாய்த் திருஅவையின் முதல் திருத்தந்தை பேதுருவின் தலைமைப்பீடத்தினை நினைவு கூர்ந்து பெருமையோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந் நாளினை நாம் உண்மையிலேயே கொண்டாட வேண்டுமா என்ற கேள்வி பலரின் எண்ணத்தில் உதிப்பது இயற்கையே. ஆனால் இன்று, இக்கட்டான காலகட்டத்தில் இன்னும் சிறப்பாக கொண்டாடக் கடமைப்பட்டிருக்கிறோம். காரணம், வெளியிலிருந்து வரும் பிரச்சனையைக் காட்டிலும் கிறிஸ்தவர்களுக்குள் இருக்கின்ற சவால்கள் மிக அதிகம். இன்று நம் வேர்களை மறந்து வாழும் கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் சிலர் நம் வேர்களை திட்டமிட்டு மூடி மறைக்கிறார்கள். வெட்டி அழிக்கிறார்கள். நம் வேர்களைத் தேடி இன்றைய கிறிஸ்தவர்களை அழைத்துச் சென்றாலே பல பிரிவினை சபையைச் சார்ந்தவர்களுக்கு உண்மை எது? என புலப்பட்டுவிடும். அவர்களின் சாயம் வெளுத்து...

என்னைக் குறித்தும், என் வார்த்தைகளைக் குறித்தும்

“பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள், என்னைக் குறித்தும், என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப்படுவார்” என்னும் இயேசுவின் சொற்களை இன்று தியானிப்போம். கொஞ்சம் கடினமான சொற்கள், கடினமான தொனியும்கூட. ஏன் இந்தக் கடுமை? தன்னைக் குறித்தும், தமது வார்த்தைகளைக் குறித்தும் பலர் வெட்கப்படுவர் என்று இயேசு அறிந்திருந்தார். எனவே, அவர்களைப் பாவத்தில் உழலும் விபசாரத் தலைமுறை என அழைக்கிறார். பாவத்தில் வாழ்பவர்கள் இயேசுவை விட்டுப் பிரிந்து நிற்கிறார்கள் என்பதே வேதனை. ஆனால், இயேசுவைக் குறித்தும், அவரது வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படுவார்கள் என்றும் இயேசு கூறுகிறார். பாவத்தைப் பற்றிய வெட்க உணர்வு குறைவது ஒரு தவறான அடையாளம். இயேசுவின் காலத்தைப் போலவே, நாம் வாழும் இந்நாள்களிலும் பாவத்தைப் பற்றிய வெட்க உணர்வு குறைந்து வருகிறது. லஞ்சம், ஊழல், ஒழுக்கவியல் தவறுகள்… இவற்றைச் செய்வோர் அதைப் பற்றிய எந்த வெட்க...

எல்லோர்க்கும் எல்லாமுமான இயேசு

இயேசுகிறிஸ்துவை எதற்காக திருமுழுக்கு யோவான், எலியா அல்லது இறைவாக்கினருள் ஒருவர் என்று மக்கள் சொல்ல வேண்டும்? திருமுழுக்கு யோவான் ஏரோதால் கொல்லப்பட்டார். ஆனாலும், மக்கள் நடுவில் திருமுழுக்கு யோவானுக்கு மிகப்பெரிய அளவில் செல்வாக்கு இருந்தது. அவர் தான் உயிரோடு வந்திருக்கிறார் என்று மக்கள் நம்பினர். யூத மக்கள் மெசியாவின் வருகைக்கு முன்னால் எலியா வருவார் என்று நம்பினர். மலாக்கி 4: 5 கூறுகிறது, “இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்”. எனவேதான் இன்றளவும், யூதர்கள் பாஸ்கா திருவிழாவைக் கொண்டாடும்போதும் எலியாவிற்காக ஒரு இருக்கையை காலியாக வைத்திருப்பர். எலியா மீண்டும் வருவார் என்று காத்திருந்தார்கள். இயேசு ஒரு முழுமையின் வடிவம். எல்லார்க்கும் எல்லாமுமாக இருந்தவர், இருக்கிறவர் இயேசு. எனவேதான் இயேசுவை மக்கள் பலவிதமாக பார்த்தார்கள். இயேசுவின் தனித்தன்மையும் இதுதான். இயேசு நமது மகிழ்ச்சியில் பங்குகொண்டு நமது மகிழ்ச்சியில் இன்பம் கொள்கிற நல்ல நண்பராக...