Category: தேவ செய்தி

நெருக்கமாகப் பின்பற்ற (லூக்கா 5 : 27-32)

இயேசு லேவியைத் தன்னைப் பின்செல்லுமாறு அழைத்தது இன்றைய நற்செய்தியில் இடம்பெறுகின்றது. இயேசு பாவிகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார், காணாமல் போன ஆட்டினைத் தேடி வருகிறார் என்பதை மட்டுமன்று, பாவியெனக் கருதப்பட்ட லேவி எவ்வாறு இயேசுவைப் பின்பற்றினார் என்பதே இத்தவக்காலத் தொடக்கத்திலிருக்கும் நமக்கான பாடம். முதல் சீடர்களை அழைத்த போதும் லேவியைப் போன்று, “அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தார்கள்” என்பதை அறிந்து கொள்ள முடியும். லேவி இஸ்ரயேல் மக்களிடமிருந்து அநியாயமாக வரிவசூலித்து உரோமை அரசுக்கு அளித்ததால் பாவியெனக் கருதப்பட்டார். மொத்தத்தில் அனைவரும் அவரை ஒதுக்கி வைத்தனர். அவரை எதிரியாகக் கூட கருதக் கூடாது என்பதில் தெளிவாயிருந்து அவரைப் பாவி என்று முத்திரை குத்தினர். இன்றும் நம்மில் சிலரை ஆன்டி-இந்தியன்;, சமூக விரோதிகள் என்று முத்திரை குத்துவது யூதர்களின் மனநிலையே. இப்படி அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்படுபவரையே ஆண்டவர் அழைக்கின்றார். அவர்களுடைய வீட்டிற்குச் சென்று விருந்து உண்ணுகின்றார். இதன் காரணம் லேவி இயேசுவைப் பின்பற்ற தான் பற்றியிருந்த...

நோன்புடன் காத்திருப்போம்

மத்தேயு – 9 : 14-15 இத்தவக்காலம் நமக்குத் தரப்பட்டதன் நோக்கமே நாம் நம் பாவங்களிலிருந்து மனந்திரும்ப வேண்டும் என்பதற்காகவே. இயேசுவின் பாடுகளையும் அவரது இறப்பையும் நாம் நினைவிற்குக் கொண்டு வரவேண்டிய காலம். அவரின் பாடுகளோடு நம்மை ஐக்கியப்படுத்துகின்ற காலம். அவரோடு ஐக்கியமாக இன்னும் கூடுதல் ஆற்றல் தேவைப்படுகின்றது. இவ்வாற்றல் நோன்பிருத்தலில் கிடைக்கிறது. ஒருசந்தியும், நோன்பும் சமயச்சடங்குகளின் ஓர் அங்கமாகவே யூதர்களிடம் இருந்தது. அவர்களின் நோன்புகள் வெறும் வெளிச்சடங்குகளாயின. சிலர் பிறரிடம் புகழையும் பெயரையும் பெற வேண்டும் என்பதற்காகவே நோன்பிருந்தனர். இதனைச் சாடும் விதமாக இன்றைய நற்செய்தியில் ஆண்டவரின் வார்த்தைகள் அமைந்திருக்கின்றது. நோன்பிருக்க அடிப்படையில் ஒரு காரணமும், ஒரு காலமும் தேவைப்படுகிறது. இதனை இன்றைய வாசகத்தில் இயேசு இன்னும் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். இன்றைய நற்செய்தியில் அவர் இவ்வாறு கூறுவதன் மூலம் அவர் பழைய உடன்படிக்கைக்கு எதிராகச் செல்லவில்லை. மாறாக அதனை இன்னும் அர்த்தமுள்ளதாக்கி நிறைவு செய்கிறார். அவரே புதிய ஏற்பாடாகவும், புதிய...

இழப்பதில் பெறுகிறோம்

லூக்கா 9:22-25 நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்வு, நம்மை நாமே பாதுகாத்து வைத்துக் கொள்வதற்காக அல்ல. பிறருக்கும் கடவுளுக்கும் ஈந்தளிப்பதற்காகவே என்ற சிந்தனைக்காக இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது. பிறருக்காக வாழ்தல் மனித இனத்திற்கு மட்டுமே சற்று கடினமாக இருக்கிறது. ஆனால் இந்த உலகில் உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்தும் பிறருக்காகவே பிறக்கின்றன அல்லது தோன்றுகின்றன எனலாம். பிறர்க்காகப் பிறந்த நாம் மட்டுமே, அனைத்தையும் நமக்காக சேர்த்து வைக்கின்றோம் என்ற எண்ணத்தில் நிம்மதியின்றி அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றோம். இதற்கு மாறாக ஒரு நபர் தன் உயிரையும் உடமையையும் பொருட்படுத்தாமல் எதையும் சேகரிக்காமல் பிறர்க்காகவும், இந்த குமூகத்திற்காகவும் உழைத்தார் என்றால், அவர் உடல் காலமாகினாலும் அவரது உயிர் காலாவதியாகாமல்; மக்கள் மனதில் நின்று என்றும் வாழ்வார். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் அவர் இழப்பதை வேறு வாழ்வில் பெற்றுக் கொள்கிறார் எனலாம். இவ்வாறு பிறர் நலத்திற்காக நாம் உழைக்க முன்வரும் பொழுது நமது சுயபற்று ஐம்புலன்களின்...

ஆண்டவரே இரக்கமாயிரும்

திருப்பாடல் 51: 3 – 4, 5 – 6, 12 – 13, 14 & 17 கடவுளுடைய இரக்கத்திற்காக திருப்பாடல் ஆசிரியர் இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறார். இந்த திருப்பாடலின் பிண்ணனி அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பத்சேபாவுடனான தன்னுடைய தவறான செயல், இறைவாக்கினர் வழியாக உணர்த்தப்பட்டபோது, தாவீது உள்ளம் நொந்து வேதனையில், தன்னுடைய பாவக்கறைகளை மன்னிப்பதற்காக உருகிய பாடல் தான் இந்த திருப்பாடல். தன்னுடைய பலவீனத்திற்காக, தான் செய்த தவறுக்காக மன்னிப்பு வேண்டுகிறார். உண்மையான, உள்ளார்ந்த மனமாற்றத்தோடு இறைவனை நாடுகிறபோது, நிச்சயம் இறைவன் மனமிரங்குவார் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடிய திருப்பாடல் இந்த திருப்பாடல். இன்றைய நாளில் இந்த திருப்பாடலை நாம் சிந்திப்பது மிகவும் பொருத்தமான ஒன்று. ஏனென்றால், இன்று தவக்காலத்தை தொடங்குகிறோம். நமது வாழ்வை மாற்றுவதற்கான முயற்சியாக இந்த தவக்காலத்தைப் பயன்படுத்திக்கொள்ள அன்னையாம் திருச்சபை நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகமும் ஒட்டுமொத்த நமது வாழ்க்கை எப்படி அமைய...

எண்ணங்கள் தூய்மையானதாக இருக்கட்டும்

யாக்கோபு 4:1-10 இந்த உலகத்தில் நடக்கிற அநீதி, அக்கிரமங்களுக்கு ஒருவருடைய தீய எண்ணமே காரணமாய் இருக்கிறது என்று யாக்கோபு சொல்கிறார். உலக நாடுகளிடையே அமைதி இல்லை. குடும்பங்களில் சமாதானம் இல்லை. மனிதர்களுக்கு நிறைவு இல்லை. அடுத்தவரின் வளர்ச்சி கண்டு பொறாமை எண்ணம் குடிகொள்கிறது. இவற்றிற்கெல்லாம் காரணம், ஒருவருடைய உள்ளத்தில் இருக்கிற தீய எண்ணமே. இந்த தீய எண்ணம் ஒருவருக்குள்ளாக எப்படி வருகிறது? ஒரு மனிதர் எப்போது சிற்றின்ப ஆசைக்கு அடிமையாகுகிறாரோ, இந்த உலகத்தோடு இணைந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறாரோ, அப்போது அவருக்குள்ளாக தீய எண்ணம் வருகிறது. ஆக, ஆசைகளை விடுப்பதே நல்ல எண்ணத்தோடு வாழ்வதற்கான அடித்தளமாகும். ஆசையை எப்படி விடுப்பது? போதுமென்ற மனம் தான், ஆசையை துறப்பதற்கான திறவுகோல். நாம் நிறைவுள்ளவர்களாக இருக்க வேண்டும். இருப்பதில் நிறைவு காண வேண்டும். இன்றைய நவநாகரீக உலகத்தில், மனிதர்களுக்கு நிறைவு இல்லை. ஒரு கோடி சேர்த்து வைத்தவனுக்கும் நிறைவு இல்லை. மேலும், மேலும்...