இறையடியார்கள்
1அரசர்கள் 21: 17 – 29 கடவுள் முன்னிலையில் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர் அரசராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர் என்பதை அழுத்தம் திருத்தமாக இன்றைய வாசகம் நமக்கு எடுத்துக் கூறுகிறது. நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தின் மீது ஆசைப்பட்ட ஆகாபு அரசன், தன் மனைவியின் சதிச்செயலுக்கு உடன்பட்டு, அவனைக் கொலை செய்துவிடுகிறான். அந்த தோட்டத்தை அபகரிப்பதற்காகச் செல்கிறான். ஆனால், ஆண்டவர் இறைவாக்கினர் எலியாவை அனுப்புகிறார். தவறு செய்வனான ஆகாபு மட்டுமல்ல, அந்த தவறுக்கு உடந்தையாக இருந்த அவனுடைய மனைவி ஈசபேலும் இறைவனின் தண்டனைத்தீர்ப்புக்கு ஆளாகிறாள். இந்த பகுதியில், இறைவாக்கினரின் பணியை நாம் சற்று ஆழமாகப் பார்க்கலாம். வரலாற்றின் துணிவுள்ள சில மனிதர்களின் விழுமியங்களை இங்கே எலியாக படம்பிடித்துக் காட்டுகிறார். தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவருடைய தவறை அவருடைய நெஞ்சுக்கு நேரே நின்று எதிர்கொள்வது தான் அந்த விழுமியம். ஆகாபு அரசன் தீய, கொடூரமான, ஒழுக்கமில்லாதவனாக இருக்கிறான். அவனுக்கு எதிராக, அவனுடைய...