Category: தேவ செய்தி

இறைவனுக்கு கீழ்ப்படிவோம்

2அரசர்கள் 17: 5 – 8, 13 – 15, 18 வடக்கு மகாணத்தில் உள்ள, பத்து இனங்களும் வீழ்ந்து போகிற நிகழ்வுகளை இன்றைய வாசகம் நமக்கு எடுத்துக் கூறுகிறது. நெபாவின் மகனான் யெரோபாவின் தலைமையில் தொடங்கிய இந்த வடக்கு மகாண அரசு, 265 ஆண்டுகள் நீடித்தது. இந்த அதிகாரத்தின் முதல் ஆறு இறைவார்த்தைகள், இதன் அழிவைப்பற்றி நமக்கு விளக்குகிறது. அதற்கு பிறகான 25 வரை உள்ள வசனங்கள், அழிவுக்கான காரணத்தையும், கடவுள் அந்த அழிவைக் கொண்டு வந்ததை நியாயப்படுத்துவதையும், மற்றவர்களுக்கான எச்சரிக்கையாகவும் இது தருகிறது. அவர்களை அடக்கி ஆண்ட அரசுகளைப் பற்றி மற்ற இறைவார்த்தை நமக்கு எடுத்துச் சொல்கிறது. இந்த பகுதியில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம், இறைவனுடைய வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுக்கவில்லை என்றால், அழிவு நிச்சயம் என்பதுதான். இறைவன் இந்த மனித இனத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவராகவே இருந்திருக்கிறார். முதல் மனிதன் ஆதாமைப் படைத்தபோதும், வெள்ளத்திலிருந்து...

வாழ்வின் சவால்களில் இறைப்பராமரிப்பு

கடவுளின் அன்பும், பராமரிப்பும் எந்த அளவுக்கு நம்மோடு இருக்கிறது என்பதை, எடுத்துரைக்கக்கூடிய அற்புதமான பகுதி. கடவுளுடைய பணியை நாம் செய்கிறபோது, பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். நம்மோடு கூட இருந்து, நம்மைக்காட்டிக்கொடுக்கிறவர்கள், நம்மோடு நயவஞ்சகமாகப் பேசிக்கொண்டு, மறுதலிக்கிறவர்கள், நம்மை எப்போது சாய்க்கலாம் என்று தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறவர்கள், என்று பலவகையான மனிதர்களை நாம் பார்க்கிறோம். இந்த மனிதர்களுக்கு நடுவில் தான், நாம் வாழ வேண்டும். இவர்களோடு தான் நமது வாழ்வும் இணைந்து இருக்கிறது. நாம் விரும்புகிறோமோ, இல்லையோ, இவர்களும் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள் என்பதை, நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கை எப்போதும் நாம் நினைத்தது போல இருக்காது. நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், பல தடங்கல்களை சந்திக்கிறோம். பல மனிதர்களின் மோசமான முகங்களை பார்க்கிறோம். ஒருகட்டத்தில் நாம் சோர்ந்து போகிறோம். பேசாமல், ஊரோடு ஒருவராக வாழ்ந்து விடலாமே என்று நினைக்கிறோம். நாம் கொண்டிருக்கக்கூடிய மதிப்பீடுகளையும், விழுமியங்களையும் காற்றில் பறக்க விட்டுவிடுகிறோம். இப்படியான...

வாழ்க்கை கற்றுத்தரும் பாடம்

2குறிப்பேடு 24: 17 – 25 அரசர் யோவாஸ் அடிப்படையில் ஒரு பலவீனமான மனிதன். யாருடைய எடுப்பார் கைப்பிள்ளையாகவும் இருந்தான். சரியான வழிகாட்டிகள் இருந்தால், சரியான பாதையில் சென்றான். தவறான வழிகாட்டுதல் இருந்தபோது, கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்தான். யோயாதா இருக்கும்வரை, அரசன் ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும்படி பார்த்துக்கொண்டார். அரசரும் யோயாதா கூறியபடி, படைகளின் ஆண்டவராம் இறைவனுக்கு உண்மையாக இருந்தார். ஆனால், அவருக்குப்பின், தம்மைப் பணிந்து நின்ற இஸ்ரயேலின் தலைவர்களுக்கு இணங்கி, தங்கள் முன்னோர்களின் கடவுளான ஆண்டவரின் இல்லத்தைப் புறக்கணித்து, அசேராக் கம்பங்களையும், சிலைகளையும் வழிபட ஆரம்பித்தான். மக்களையும் வழிபட வைத்தான். இது வாக்குறுதிகளை மனிதன் எப்படி மேலோட்டமாக கடவுளுக்கு வழங்குகிறான் என்பதன் வெளிப்பாடாக இருக்கிறது. வாக்குறுதி என்பது ஒரு மனிதரின் அர்ப்பணத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். கொடுக்கிற வாக்குறுதிக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும். அது வாழ்வியல் மதிப்பீடாக, விழுமியமாக இருக்க வேண்டும். அப்போதுதான், அதை...

வாழ்க்கைக்கான ஞானம்

சீராக் 48: 1 – 15 சீராக்கின் புத்தகத்தில்காணப்படும் இந்த பாடல், ஒருவரை நினைத்து அவர் வாழ்ந்தபோது நடந்த மிகச்சிறந்த செயல்பாடுகளை நினைத்து புகழ்ச்சிமாலையாக பாடப்படும் பாடலாகக்காணப்படுகிறது. இது ஒரு புகழ்ச்சிப்பாடல். யாரை நினைத்து இந்த பாடல் பாடப்படுகிறது? இறைவாக்கினர் எலியா. கி.மு.869 ம் ஆண்டு, ஆகாபு அரசனுக்கு எதிராக அவர் இறைவாக்குரைத்தார். வடக்கு மகாணத்தின் மிகச்சிறந்த இறைவாக்கினராக அவர் பார்க்கப்படுகிறார். பாகால் தெய்வத்திற்கு எதிரான வழிபாட்டுமுறைகளை அழித்தொழித்தார். இறைவனால் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். அதனை நேரில் கண்டவராக இறைவாக்கினர் எலிசா சுட்டிக்காட்டப்படுகிறார். இறைவாக்கினர் எலியாவின் மிகச்சிறந்த செயல்பாடுகள் இந்த வாசகத்தில் இடம்பெறுகிறது. இறைவாக்கினா் எலியாவின் புகழ்ச்சிபாடல் எதற்கக சீராக்கின் புத்தகத்தில் இடம்பெறுகிறது? சீராக்கின் புத்தகம் பல அறிவுரைகளை வாழ்க்கைக்குத் தருகிற புத்தகமாக அமைகிறது. நம்முடைய வாழ்க்கை எப்படி அமைய வேண்டும்? நாம் நம்முடைய வாழ்க்கையில் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன? வாழ்க்கையில் நமக்கு இருக்கிற பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை நினைவூட்டுவதாக...

எலிசாவின் பிடிவாதம்

2அரசர்கள் 2: 1, 6 – 14 1அரசர்கள் புத்தகத்தில் 17 ம் அதிகாரத்தில் எலியாவை காண்கிறோம். குறிப்பாக ஆகாபு அரசருக்கு எதிராக கடவுளின் வார்த்தையை துணிவோடு அறிவித்ததைப் படித்தோம். இரண்டாம் அரசர்கள் புத்தகத்தில் எலியா விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்படுவது குறிப்பிடப்படுகிறது. எலியா, தான் இறைவனால் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்படப்போவதை அறிந்தவராக, எலிசாவை அவரைப் பின்தொடராமல் அங்கேயே தங்கியிருக்கச் சொல்கிறார். ஆனால், எலிசா அவரைப்பிரிவதற்கு மனமில்லாதவராக இருக்கிறார். எலிசாவின் பிடிவாதத்தைக் கண்டு, எலியாவும் அவரைப் பின்தொடர்வதற்கு அனுமதிக்கிறார். இங்கு எலிசா, பிடிவாதமாக இறைவாக்கினரைப் பற்றிக் கொள்வதைப் பார்க்கிறோம். இறைவாக்கினர் எலிசாவிடம் இருக்க வேண்டிய பண்பானது நம் ஒவ்வொருவரிடத்திலும் இருக்க வேண்டிய பண்பாக இருக்கிறது. இறைவனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த பண்பு. இறைவாக்கினர் எலியா, எலிசாவைப் பின்தொடர வேண்டாம் என்று சொன்னது, தனக்கு நடக்கப்போவதை அறிந்ததனால். ஏனென்றால், அவர் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட இருக்கிறார். தன்மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிற...