புனித தோமா – திருத்தூதர் விழா
எசாயா 52: 7 – 10 இறைவன் அருளும் மீட்பு இஸ்ரயேல் மக்கள் கடவுளின் கோபக்கனலை அனுபவித்திருக்கிறார்கள். ஒரு தலைமுறையாக அனுபவித்து வருகிறார்கள். பாபிலோனில் கைதிகளாக, தங்கள் நாட்டை இழந்து, ஆலயத்தை இழந்து, புனித எருசலேம் நகரை இழந்து, விழா கொண்டாட முடியாமல், துன்பங்களுக்கு மேல் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். செய்த பாவங்களுக்கு கடவுளின் பார்வையில் நிச்சயம் தண்டனை உண்டு என்பதை இப்போது அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். பாவங்களுக்கான தண்டனை பெற்றபின் வாழ்வு நிச்சயம் உண்டு என்பதையும் அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால், கடவுளிடம் பேசுவதற்கான தகுதியைக் கூட அவர்கள் இழந்துவிட்டதாகவே எண்ணினார்கள். கடவுளை வான் நோக்கி பார்க்கவும் துணிவு அற்றவர்களாக விளங்கினார்கள். அவர்கள் செய்த பாவங்கள் அப்படிப்பட்டவை. இப்படிப்பட்ட துன்பமயமான நேரத்தில், அவர்கள் எதிர்பார்க்காத வண்ணம், அவர்களுக்கு மீட்புச் செய்தியை இறைவாக்கினர் எசாயா அவர்களுக்கு வழங்குகிறார். சிறைப்பிடிக்கப்பட்ட மக்கள், கைதிகளாக அடிமைத்தனத்தை அனுபவித்த மக்கள், புதிய நாளுக்கு தயாராகும்படி, இறைவாக்கினர் அவர்களுக்கு அழைப்புவிடுக்கின்றார். தங்கள்...