Category: Daily Manna

நீங்கள் சுறுசுறுப்பானவரா? அல்லது தளர்வுற்றவரா?

மத்தேயு 11:28-30 நீங்கள் சுறுசுறுப்பானவரா? அல்லது தளர்வுற்றவரா? என்ற கேள்வியோடு நாம் கருத்துக்கணிப்பு நடத்தினால் வாழ்க்கையில் பல மனிதர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவதில்லை. மாறாக தளர்வுற்றவர்கள் தான் என்பது தெரிய வரும். வாடிய முகத்தோடு அவா்கள் நடப்பதைப் பார்க்கின்றபோது அவர்களிடத்தில் ஆற்றல் தீர்ந்துபோய் விட்டது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. உங்களிடத்திலே சுறுசுறுப்பாக செயல்படுவதற்கான ஆற்றல் தீர்ந்துவிட்டது என்றால் கவலை வேண்டாம். அந்த ஆற்றலைப் பற்றித்தான் இன்றைய நற்செய்தி வாசகம் பேசுகிறது. அந்த ஆற்றலை தருபவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பெருஞ்சுமைகளை இறக்கி வையுங்கள். கவலைகளை கொட்டுங்கள். சோகங்களை சொல்லுங்கள். உங்கள் துயரத்தின் புலம்பலை பற்றி பேசுங்கள். கவலை, சோகம், துயரம், பிரச்சினை, நோய் இவைகள் தானே உங்கள் ஆற்றலை உங்களிடமிருந்து பிடுங்கியது. அதனால்தானே நீங்கள் தளர்வுற்றுப் போனீர்கள்? அதைப்பற்றி கவலைப்படாதீர்ள். இப்போது எல்லாவற்றுக்கும் இளைப்பாறுதல் பெறுங்கள். அனைத்து ஆற்றலையும் அள்ளுங்கள். நிறைய அள்ளுங்கள். ஆண்டவரே அந்த ஆற்றல். மனதில் கேட்க… •...

உங்களிடத்தில் கடவுளைப் பார்க்கலாமா?

மத்தேயு 11:25-27 கடவுளின் சாயலிலும் உருவிலும் படைக்கப்பட்ட மனிதர்கள் கடவுள் போன்று செயல்படுவதில்லை. அவர்களுக்குள்ளே இருக்கும் கடவுளை வெளியே பிரதிபலிப்பதில்லை. மனிதர்கள் தங்களுக்குள்ளே கொண்டிருக்கும் அன்பில்லாமை, அடக்கமின்மை, அதிகாரமின்மை இவையனைத்தும் கடவுளின் பண்புகளை மறைக்கின்றன. ஆகவே மனிதன் கடவுளை வெளியே கொண்டு வர முடியவில்லை. கடவுளை வெளியே கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்பதற்கான நம்முடைய ஆர்வமான கேள்விக்கு விடை கொடுக்கிறது நற்செய்தி வாசகம். ஞானிகள் கடவுளை வெளியே கொண்டு வர முடியாது. அறிஞர்கள் கடவுளை வெளியே கொண்டு வர முடியாது. அவர்களுக்கு கடவுளுடைய வெளிப்படுத்துதல் இல்லை. காரணம் தடைக்கற்காளாக அவர்களுடைய ஆணவம், அதிகாரம், அகங்காரம் இருக்கின்றன. கடவுள் எளிய உள்ளம் கொண்டவர்கள் உள்ளத்தில் குடிகொள்கிறார். குழந்தை உள்ளம் கொண்டவர்களோடு தங்குகிறார். அவர்கள்தான் கடவுளை வெளியே கொண்டு வருகிறார்கள். காரணம் அவர்கள் அவசியமற்றவைகளிலே சிக்குவதில்லை. ஆகவே அவர்கள் அழகாக ஆண்டவரை வெளியே கொண்டு வருகிறார்கள். மனதில் கேட்க… • நான்...

தீமைக்கு விடைகொடு … கடவுளின் துயருக்கு பதில்கொடு

மத்தேயு 11:20-24 பழைய ஏற்பாட்டில் கடவுள் கவலையடைந்தார். மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது. இதை தொடக்கநூல் 6:5-6 வரையுள்ள இறைவார்த்தைகளில் வாசிக்கிறோம், “மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார். மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது”. புதிய ஏற்பாட்டில் குறிப்பாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கவலையடைகிறார். மனம் வருந்துகிறார். உள்ளம் உடைந்துப்போகிறார். கொராசின், பெத்சாய்தா மற்றும் கப்பர்நாகும் நகர்களில் தீமை பெருகியதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளில் நாள் முழுவதும் தீமை உருவானதையும் அவர் கண்ணாரக் கண்டதால் கலங்கி நிற்கிறார். அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள் என்பதற்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்து பல வல்ல செயல்களை அந்நகர்களில் செய்தார். அவையெல்லாம் பலனில்லாமல் போயிற்று. அவருடைய எதிர்பார்ப்பு எல்லாம் எரிந்து சாம்பலானது. நம் ஒவ்வொருவரையும் வரலாறு படைக்க வேண்டும் என்ற...

உங்கள் கட்டிடத்தை கட்டியது கடவுளா?

கார்மல் அன்னை திருவிழா அனைவருக்கும் கார்மல் அன்னை திருவிழா நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கார்மல் அன்னையின் பாதுகாப்பும் பரிந்துரையும் உங்களுக்கு என்றென்றும் கிடைப்பதாக! அன்னை மரியாள் என்ற கட்டிடத்தை கட்டியது கடவுள். அவர் ஒரு கட்டிடக் கலைஞர். அன்னை மரியாளின் கனவுகள், எதிர்காலம், தேவைகள், சாதனைகள் என அனைத்தையும் கட்டியது கடவுளே. அதற்கான முழு பொறுப்பையும் அன்னை மரியாள் கடவுளிடத்தில் கொடுத்துவிட்டார்கள். அதைத்தான் லூக் 1:38 ல் “நான் ஆண்டவரின் அடிமை உமது விருப்பப்படி எனக்கு நிகழட்டும்” என்கிறார் அன்னை மரியாள். ஆண்டவரே நான் உம்மிடம் என்னை தந்துவிட்டேன் நீர் என் உடலாகிய கட்டிடத்தை கட்டும் என்கிறார். அவர் கொடுத்ததால் கடவுள் மிகவும் எழில்மிக்கதாய் கட்டினார். எல்லோரும் போற்றும் வண்ணம் கட்டினார். நம்முடைய வாழ்வில் ஏன் முன்னேற்றம் இல்லை? காரணம் நாம் நம் உடலாகிய கட்டிடத்தை, கடவுளின் பொறுப்பில் ஒப்படைக்கவில்லை. நம் வாழ்க்கையின் பொறுப்பை கடவுளிடத்தில் கொடுக்கவில்லை. மாறாக நாமே எடுக்கிறோம்....

விலகிச்சென்றார்…

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 25-37 இன்றைய நற்செய்தியில் இயேசு அருமையான ஓர் உவமை வாயிலாக, வாழ்வின் முக்கியமான செய்தியைத்தருகிறார். நல்ல சமாரியன் உவமையில் வரக்கூடிய குருவும், லேவியரும் “விலகிச்சென்றார்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டுபேருமே மறுபக்கமாய் விலகிச்செல்கிறார்கள். எதற்காக விலகிச்சென்றார்கள்? ஒன்று தீட்டுப்பட்டுவிடும் என்பதற்காக. இரண்டாவது, தங்களுக்கு இருக்கக்கூடிய பணியைச் செய்ய வேண்டும் என்பதற்காக. இரண்டுமே தவறுதான். இரண்டு பேருமே, கடவுளின் இறையருளை நிறைவாக, உடனடியாகப் பெற்றுத்தரும் வாய்ப்பை இழந்து சென்று விட்டார்கள் என்பதுதான் உண்மை. விலகிச்செல்வது தவறல்ல. தீய நண்பர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும். தவறான பழக்கங்களிலிருந்து விலகியிருக்க வேண்டும். கெட்ட எண்ணங்களிலிருந்து, கெட்ட வார்த்தைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும். ஆனால், இவற்றிலிருந்து நாம் விலகியிருப்பதில்லை. எவற்றிலிருந்து நாம் விலகியிருக்க வேண்டுமோ, அவற்றிலிருந்து நாம் விலகியிருப்பதில்லை. நல்ல செயல்களைச் செய்வதிலிருந்து, நல்லவற்றைப் பார்ப்பதிலிருந்து, நல்லவற்றைக் கேட்பதிலிருந்து நாம் விலகியிருக்கக்கூடாது. அவற்றோடு இருக்க வேண்டும். ஆனால், அவற்றிலிருந்துதான் நாம் விலகியிருக்கிறோம். அவற்றிலிருந்து நாம்...