Category: Daily Manna

பகிர்வே உயிப்பின் நம்பிக்கை வெளிப்பாடு!

உயிர்த்த இயேசு பன்னிருவருக்கும் தோன்றி, அவர்களை உறுதிப்படுத்தியதையும், அவர்களுக்குப் பாவ மன்னிப்புக்கான அதிகாரத்தை வழங்குவதையும் இன்றைய நற்செய்தி வாசகம் விளக்குகிறது. இன்றைய முதல் வாசகம் நம்பிக்கை கொண்ட தொடக்க காலத் திருச்சபையினரின் வாழ்க்கை முறையைப் பற்றிப் பார்க்கிறோம். தொடக்க காலத் திருச்சபை மிகவும் ஆற்றலுடன் வளர்ச்சி அடைந்தது, பெருகிப் பலுகியது. அனைவரும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்றுகளாக விளங்கினர். சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்தார், தங்களோடு வாழ்கின்றார் என்பதனை அனைவரும் நம்பினர். அவ்வாறு நம்புவதற்கு சீடர்களின் வாழ்வு மிகப்பெரிய ஓர் ஆற்றலாக, ஆதாரமாக விளங்கியது. நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கை முறையைத் திருத்தூதர் பணிகள் நூல் இவ்வாறு சுருங்கத் தருகிறது: 1. அனைவரும் ஒரே உள்ளமும், ஒரே உயிருமாக இருந்தனர். (நம்பிக்கை) 2. அவர்களது உடமைகள் அனைத்தும் பொதுவாக இருந்தன. (பிறரன்பு) அனைவரும் ஒரே உள்ளமும், ஒரே உயிருமாக இருந்தது அவர்களின் இறைநம்பிக்கையைக் குறிக்கிறது. அவர்களிடத்தில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. எந்தவித...

ஆன்மாவின் குரலுக்குச் செவிகொடுப்போம்

உயிர்த்த இயேசுவை முதலில் பார்த்தவர் என்ற பெருமையை உடையவர் மகதலா மரியா. மரியா இயேசுவைக்கண்டாலும் அவரால் இயேசுவை அடையாளம் காணமுடியவில்லை. அதற்கு இரண்டு காரணங்களை நாம் சொல்லலாம். 1. இயேசுவைப்பிரிந்த துக்கம் அவருடைய கண்களை மறைத்தது. மரியா எந்த அளவுக்கு இயேசு மீது அன்பு வைத்திருந்தார் என்பதற்கு, இருள் நீங்கும் முன்பே தனி ஆளாக, பெண்ணாக இருந்தாலும் துணிவோடு கல்லறை வாயிலுக்கு இயேசுவைத்தேடிவந்ததைச்சொல்லலாம். அந்த அளவுக்கு இயேசு மீது அவர் அன்பு வைத்திருந்தார். அந்த அன்புதான் இயேசுவின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாத சோகத்தைக்கொடுத்தது. எனவே தான் இயேசு கண்ணெதிரே நின்றாலும் அவரால் இயேசுவை அடையாளம் காணமுடியவில்லை. வாழ்வில் நமக்கேற்படும் துன்பங்களும், கலக்கங்களும் கடவுளை அறிந்துகொள்வதற்கு தடைக்கற்களாக இருக்கிறது. 2. அவளுடைய பார்வை கல்லறையில் பதிந்திருந்ததால், உயிர்த்த இயேசுவைப்பார்க்க முடியவில்லை. அதாவது, கல்லறையைத்தாண்டி மரியாளால் சிந்திக்க முடியவில்லை. இயேசு இலாசரை உயிர்ப்பித்திருக்கிறார். நாற்றமடித்த உடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். அப்படி வல்லமை பொருந்திய இயேசுவால்,...

“அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய்”

நம்முடைய வாழ்க்கை பலவித உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் பல சமயங்களில் பலியாகிவிடுகிறது. அச்சமும் பெருமகிழ்ச்சி இரு வேறு துருவங்களாக இருந்து நம்மை ஆட்டிப்படைக்கின்றன. அதிலும் அச்சம் நம் வாழ்வின் பெரும் பகுதியைத் தன்னகத்தே ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. அச்சம் என்னும் இந்த அநியாய ஆக்கிரமிப்பு நம்மில் பலருடைய வாழ்வைச் சீரழிப்பதையும் பார்க்கிறோம். உயிர்த்த இயேசுவைக் கண்டவர்களும் விசுவசிப்பவர்களும் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. எல்லா எதிரிகளையும் எதிர்ப்புகளையும் வென்றவரில் அரவணைப்பில், ஆதரவில் வாழும் நாம், யாருக்கு எங்கே எதற்கு அஞ்சவேண்டும். “நற்செயல் செய்வோர் ஆள்வோருக்கு அஞ்ச வேண்டியதில்லை”( உரோ 13 :3) நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் வாழ வலியுறுத்துகிறார் பேதுரு.(1 பேதுரு 3 :6) “யாருக்கும் நீங்கள் அஞ்சி நடுங்கவோ மனங்கலங்கவோ வேண்டாம்”.(1 பேதுரு 3 :14) அடுக்கி வரும் துன்பத்தைக்கண்டு சிலருக்குப் பயம். “துன்பத்தைப்பற்றி அஞ்சாதே”.(திருவெளி 2 :10) உடலில் ஒரு நோய் வந்தால் ஒப்பாரி வைப்போரும் உண்டு. “உடலை மட்டும் கொல்பவர்களுக்கு...

கடவுளின் அருளை நம்புவோம்

பொறுமையோடு காத்திருத்தல் என்பது கிறிஸ்தவ வாழ்வின் முக்கிய விழுமியங்களில் ஒன்று. இந்த சிந்தனை நமது செப வாழ்வுக்கும் பொருந்தும். சீடர்கள் அதைத்தான் தங்களின் வாழ்வில் செய்கிறார்கள். இயேசு இறந்தபிறகு அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்கள் இயேசுவின் உடனடி இறப்பை எதிர்பார்க்கவும் இல்லை. இயேசு பல வேளைகளில் அதைச்சொல்லியிருந்தாலும், இவ்வளவு சீக்கிரம் இயேசு இறப்பார் என்பது அவர்கள் எதிர்பாராத ஒன்று. இயேசுவின் இறப்பிலிருந்து வெளிவருவதற்கு முன்னதாக அவர்களைப் பயம் ஆட்டிப்படைக்கிறது. இயேசுவிற்கு பிறகு தங்களின் வாழ்வு என்ன ஆகும்? என்கிற கேள்வி மனதை குடைகிறது. போக்கிடம் இல்லாமல் ஒரே .இடத்தில் அவர்கள் கூடியிருக்கிறார்கள். ஒரேநாளில் தங்களின் வாழ்வு இப்படியாகிவிடும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இயேசுவின் மீது அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனாலும், இனிமேல் நடந்தவைகளைப்பற்றி சிந்தித்து பயன் இல்லை. இனி நடப்பது நல்லவையாக இருக்க வேண்டும். அப்போதுதான் இயேசு அவர்களுக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக...

இறையனுபவத்தின் பகிர்வு

தூய பவுலடியார் தனது திருமுகத்தில் விசுவாசத்தைப் பற்றி கூறுகிறபோது, நாம் எப்படி மற்றவரின் விசுவாசம் தளர்ச்சியடைகிறபோது தாங்கிப்பிடிக்க வேண்டும்? என்பதை அருமையாகச் சொல்வார். விசுவாசத்தளர்ச்சி என்பது அனைவருக்குமே வரக்கூடிய ஒன்று. அதற்கு நமது பலவீனம் நிச்சயம் முதன்மையான காரணம். அந்த விசுவாசத்தளர்ச்சி வருகிறபோது, மற்றவர்கள் அவரைத் தாங்கிப்பிடிக்க வேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. இந்த எம்மாவு சீடர்களின் இந்த உயிர்ப்பு அனுபவமும் இதனையொற்றி வரக்கூடிய நிகழ்ச்சி தான். எம்மாவு சீடர்கள் உயிர்த்த இயேசுவின் அனுபவத்தைப் பெற்ற பிறகு, தங்களோடு அந்த அனுபவத்தை வைத்திருக்கவில்லை. மாறாக, அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள். ஒருவருடைய அனுபவப்பகிர்வு மற்றவர்களுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கிறது. தொடக்க கால கிறிஸ்தவர்கள் மத்தியில் இத்தகைய பகிர்வு தான் அவர்களின் விசுவாசத்தை வளர்க்கிற ஆணிவேராக இருந்து வந்தது. அனைவருமே உயிர்த்த இயேசுவைப் பார்த்ததில்லை. ஆனால், உயிர்ப்பு அனுபவத்தைப் பெற்றார்கள். எப்படி? உயிர்த்த இயேசுவை நேரடியாகப் பார்த்த சீடர்களிடமிருந்து. நமது விசுவாசமும்...