கடவுளுக்கு நாம் செவிமடுப்போம்
இயேசு மக்களுக்கு அப்பங்களைப் பகிர்ந்து கொடுக்கிறார். இயேசுவின் புதுமை செய்யும் ஆற்றலைப்பார்த்த மக்கள், ”உலகிற்கு வரவிருநத உண்மையான இறைவாக்கினர் இவரே” என்று இயேசுவைப் புகழ்கிறரர்கள். எதற்காக இயேசுவை மக்கள் இறைவாக்கினராகப் பார்க்கத் தொடங்கினார்கள் என்பதற்கு இணைச்சட்ட நூல் ஓர் ஆதாரத்தைத் தருகிறது. ”உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு”(18: 15). இந்த இறைவார்த்தை இயேசுவில் உண்மையாவதை மக்கள் பார்க்கத் தொடங்கினார்கள். அந்த நேரத்தில் அவர்கள் இயேசுவை தாங்கள் எதிர்பார்த்த மெசியாவாக ஏற்றுக்கொள்ளத்தொடங்கினார்கள். ஆனால், சிலநாட்களில், அதே மக்கள், ”அவனைச்சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்” என்று கத்தத்தொடங்கினார்கள். ஏன் மக்கள் மனதில் உடனடி மாற்றம்? அதற்கான காரணம் இதோ: இயேசு நோயுற்றவர்களைக் குணமாக்கியபோதும், முடவர்களை நடக்கச்செய்தபோதும், செவிடர்களைக் கேட்கச்செய்தபோதும், இயேசுவை மெசியாவாகத்தான் மக்கள் நினைத்தனர். ஆனால், தங்கள் விருப்பப்படிதான் இயேசு இருக்க வேண்டும் என்றும் , தங்களது எண்ணத்திற்கேற்ப இயேசு இருக்க...