Category: Daily Manna

இயேசு அருளும் நிறைவாழ்வு

“நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்” என்னும் இயேசுவின் மிகப் பிரபலமான இந்த சொற்களை இன்று நாம் சிந்திப்போம். நாம் அனைவரும் வாழவேண்டும் என்பதுதான் இறைவனின், இறைமகன் இயேசுவின் விருப்பம். நாம் துன்புறவேண்டும், மடியவேண்டும் என்பது இறைத் திருவுளமாக இருக்க முடியாது. இதனை நம் விசுவாசத்தின் அடிப்படைக் கோட்பாடாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, நாம் நிறைவாழ்வு பெறவேண்டும் என்பது இயேசுவின் விருப்பம். வாழ்வது ஒருமுறை, அந்த ஒரு வாழ்வும் நிறைவானதாக, முழுமை பெற்றதாக அமைய வேண்டும். மானிடர்களின் உளவியல் தேவைகள் பற்றி ஆய்வுசெய்த ஆபிரகாம் மாஸ்லோ என்னும் அறிஞர் “ஆளுமை நிறைவுத் தேவை” (Self Actualization) என்பதையே மானிட நிறைவுத் தேவையாகக் குறிப்பிட்டார். இயேசுவின் நிறைவாழ்வு என்பதுவும் அதுவே. எந்த நோக்கத்துக்காக இறைவன் நம்மைப் படைத்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறும்படி வாழ்வதுதான் நமது நிறைவாழ்வு. “தந்தை எனக்குக் கொடுத்த வேலையைச் செய்துமுடிப்பதே என் உணவு” (யோவா 4:...

தந்தையும், மகனும்

நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம், என்கிற இயேசுவின் வார்த்தைகள் நம்மை சிந்திப்பதற்கு அழைப்பு விடுக்கிறது. “ஒன்றாய்“ என்பதன் பொருள் என்ன? நமது அடிப்படை மறைக்கல்வி, கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கிறார் எனவும், ஆனால் ஒரே கடவுள் எனவும் கற்றுத்தந்திருக்கிறது. அதற்கான காரணத்தைப் பார்க்கிறபோது, மூன்று பேருக்கும் ஒரே ஆற்றல், ஒரே வல்லமை, ஒரே கடவுள் தன்மை இருப்பது என்று சொல்லப்படுகிறது. இதனை அடியொற்றி நாம் சிந்திக்கிறபோது, இயேசு தந்தையாகிய கடவுளின் இதயத்தோடு இணைந்தவராய் இருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்ளலாம். என்னைப் பார்க்கிறவர், தந்தையையே பார்க்கிறார் என்று இயேசு சொல்வதன் பிண்ணனியும் இதுதான். தந்தையாகிய கடவுளைப் பார்க்க விரும்புகிறவர் எவரும் இயேசுவைப் பார்த்தாலே போதும். ஏனெனில், இயேசு கடவுளின் பண்பை வெளிப்படுத்துகிறவராய் இருக்கிறார். இயேசு பாவிகளை பெருந்தன்மையோடு மன்னிக்கிறபோது, கடவுளின் மன்னிப்பை நாம் பார்க்கலாம். இயேசு நற்செய்தி அறிவிக்கிறபோது, கடவுளின் வார்த்தையை நாம் கேட்கலாம். இயேசு புதுமைகள் செய்கிறபோது, கடவுளின் வல்ல...

ஆவியின் செயல்பாடு

உடல் மற்றும் ஆன்மாவிற்கு இடையிலான போராட்டம் ஒரு மனிதனின் வாழ்வில் நீண்ட, நெடிய போராட்டமாக இருந்து வருகிறது. ஆன்மா, உடலில் சிறைவைக்கப்பட்டு, அங்கிருந்து போராடி வெளியே வருவதற்கான முயற்சியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டில் எது பெரியது, என்கிற கேள்வியை விட, எதற்கு அதிக முக்கியத்துவம் என்பதனை, இயேசு விளக்குகிறார். வாழ்வு தரக்கூடியது, முடிவில்லாதது ஆவி தான் என்கிறார். இது உடலின் புனிதத்தன்மையை குறைத்து மதிப்பிடுவது ஆகாது. ஆனால், அதே வேளையில், ஆவியின் இயல்புகளை, அதன் மதிப்பை இது அதிகப்படுத்திக் காட்டுகிறது. வெறும் உடல் ஆசைக்காக சாப்பிடுவது பெருந்தீனிக்கு சமமானது. ஆனால், நன்றாக உழைக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும் என்று அதற்காக சாப்பிடுவது, உடலின் இயக்கத்திற்கு, ஆவியின் தூண்டுதலுக்கும் பயன்படுவதாக அமைகிறது. ஆக, நமது எண்ணம், நமக்குள்ளாக இருக்கிற இந்த ஆவியை இயக்குவதாக அமைய வேண்டும். அந்த ஆவி தன்னெழுச்சி பெற வேண்டும். அது நம்மை இயக்கிக் கொண்டே...

இறைவனோடு இணைந்திருப்போம்

“எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக்குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்”. பொதுவாக, விலங்குகள் பலிபீடத்தில் காணிக்கையாக செலுத்தப்படும்போது, விலங்கு முழுவதையும் எரிபலியாக செலுத்துவதில்லை. மாறாக, எரிபலிக்கு அடையாளமாக, அந்த விலங்கின் சிறிய பகுதியை மட்டும் பயன்படுத்துவர். மீதி உள்ள இறைச்சியை பலிசெலுத்துகின்ற குருவும், பலியிட்ட குடும்பத்தாரும் பகிர்ந்து கொள்வர். ஒரு விலங்கு பலியிடப்படுகிறது என்றால், அதனுள் கடவுள் குடிகொண்டிருக்கிறார் என்பது பொருள். ஏனெனில் அது கடவுளுக்கு உரியது. கடவுளுடையது. அந்த விலங்கின் இறைச்சியை உண்ணும் மனிதருக்குள்ளும் கடவுள் குடிகொள்கிறார் என்பது அதனுடைய பொருள். இந்தப்பிண்ணனியில் இந்தப்பகுதியை நாம் பார்க்க வேண்டும். இது ஒருவேளை காட்டுமிராண்டித்தனமான செயலாகவோ, சிலைவழிபாடு போலவோ தெரியலாம். ஆனால், அதன் பிண்ணனியின் பொருள் தெரிந்தால், நம்மால் அதன் பொருளை நல்லமுறையில் புரிந்துகொள்ள முடியும். இங்கே சதை, இரத்தம் என்கிற வார்த்தையை நாம் இறைவார்த்தைக்கு ஒப்பிடலாம். ஆண்டவரின் வார்த்தையை நாம் தியானித்து அந்த வர்த்தையை உள்வாங்குகின்றபோது, இறைப்பிரசன்னம்...

இயேசு தரும் வாழ்வு

இயேசுதான் வாழ்வு தரும் உணவு. நமது வாழ்வுக்கு அடிப்படையும் இதுதான். இயேசு தரும் அழைப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால், நாம் இந்த உலகவாழ்வில் மட்டுமல்ல, வரக்கூடிய மறுஉலக வாழ்வையும் இழந்துவிடுவோம். இயேசு நமக்கு தரக்கூடிய வாழ்வை, இயேசு நமக்காக ஏற்பாடு செய்திருக்கிற வாழ்வை, நாம் பெறுவதற்கு, இன்றைய வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. யூதப்போதகர்கள் இதுபற்றி அடிக்கடி ஒரு சொல்லாடல் கையாள்வதுண்டு. ”பாலைநிலத்தில் தங்கியவர்களுக்கு வாக்களிப்பட்ட தேசத்தில் இடமில்லையென்று”. அதனுடைய பொருள் இதுதான்: எகிப்திலிருந்து மக்கள் வாக்களிப்பட்ட தேசத்திற்கு கால்நடையாக வந்தனர். அப்போது பாலைநிலத்தில் அவர்கள் தங்கினர். ஆனால், அது அவர்கள் அடைய வேண்டிய இலக்கு அல்ல. இன்னும் பயணம் செல்ல வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் அந்த பாலைவனத்திலே தங்கியிருப்பதை விரும்பினார்கள். வாக்களிப்பட்ட தேசத்திற்குச் செல்கிறபோது எதிர்கொள்ளும் தடைகளைத்தாங்குவதற்கு அவா்கள் விரும்பவில்லை. எனவே, அவர்களுக்கு வாக்களிப்பட்ட தேசத்தில் இடமில்லை. அதற்கான தகுதியை அவர்கள் இழந்துவிட்டார்கள். அதேபோலத்தான், இயேசுவின் அழைப்பு நிலையான வாழ்வுக்கு அழைப்பு. அந்த...