Category: Daily Manna

இயேசுவின் விண்ணேற்றம் !

இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழாவில் நமது சிந்தனைகள் என்ன? திருச்சபையின் தலையான இயேசு விண்ணகம் சென்றதால், அவரது உடலாகிய திருச்சபையும் விண்ணகத்தையே இலக்காகக் கொண்டு பயணம் செய்ய வேண்டும். “நமக்கோ விண்ணகமே தாய்நாடு” என்னும் பவுலடியாரின் சொற்களை நமதாக்கிக் கொள்ள வேண்டும். நமது எண்ணங்களும், சொற்களும், வாழ்வும் விண்ணகம் சார்ந்ததாக அமைய வேண்டும். மண்ணக ஆசைகள், ஏக்கங்கள், தேவைகளுக்கு நாம் முன்னுரிமை கொடுக்காமல், விண்ணகம் சார்ந்தவற்றுக்கே முதலிடம் வழங்கவேண்டும். #8220;முதலில் இறையாட்சியைத் தேடுங்கள், மற்ற அனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” என்னும் அருள்நாதரின் சொற்களை நினைவில் கொள்வோம். இறைப் பற்று, இறையச்சம், விண்ணகம், நரகம் (இறைவனைப் பிரிந்து வாழும் நிலை) என்னும் மதிப்பீடுகளில் நமது நம்பிக்கையை அதிகரித்துக்கொள்வோம். இறுதிக் காலம் பற்றிய நமது எண்ணங்கள் கூர்மைப்படுத்தப்பட வேண்டும். ‘விண்ணகம் என்ற ஒன்று உண்டு, அதற்கு நம்மைத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும்’ என்னும் சிந்தனையை இன்றைய இளைய தலைமுறையினரிடம் விதைப்போமாக! மன்றாடுவோம்: விண்ணகம் சென்று...

கடவுளின் அன்பு

இந்த உலகம் எதற்காக படைக்கப்பட்டது? இந்த உலகத்தில் நாம் எதற்காக வாழ்கிறோம்? இந்த உலகத்தில் நாம் வாழ்வதன் பயன் என்ன? இதுபோன்ற கேள்விகள் நிச்சயம், இந்த வாழ்வைப் பற்றி, நம்மைப்பற்றி சிந்திக்கிற அனைவருடைய மனதிலும் எழக்கூடிய சிந்தனைகளாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இந்த உலக முடிவில் நாம் எங்கு செல்கிறோம்? வாழ்க்கை இருக்கிறதா? ஆன்மா எங்கே செல்கிறது? போன்ற கேள்விகளுக்கு பல பதில்களை, மதங்கள் நமக்கு சொல்கிறது. இன்றைய நற்செய்தியில், நாம் எங்கிருந்து வருகிறோம்? எங்கு திரும்பிச்செல்கிறோம்? என்பதை, இயேசுவின் வார்த்தைகள் நமக்குக்கற்றுத்தருகிறது. நாம் அனைவருமே தந்தையிடமிருந்து வந்தவர்கள். எனவே, நாம் திரும்பி தந்தையிடத்தில் திரும்பிச்செல்ல வேண்டும் என்று இயேசு சொல்கிறார். இயேசு தந்தையிடமிருந்து வந்திருக்கிறார். அவர் இந்த உலகத்திற்கு வந்தது, கடவுளின் வெறுப்பை நமக்குச் சொல்வதற்கு அல்ல. மாறாக, கடவுள் நம்மை எந்த அளவுக்கு அன்பு செய்கிறார் என்பதை நமக்கு அறிவிப்பதற்கு. இயேசுவும் தந்தையின் அன்பை மக்களுக்கு காட்டுகிறார். அதன்பிறகு,...

இறைவனோடு நாம் கொண்டிருக்கும் உறவு

”என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் தருவார்” என்று இயேசு சொல்கிறார். முன்பின் தெரியாத ஒருவர் நமக்கு அறிமுகமாகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடனான நமது உறவு நமக்கு எப்படி இருக்கும்? அவரிடத்தில் ஒரு மரியாதை இருக்கும். அவருக்கும் நமக்கும் இடையே நமது உறவில் சிறிது மரியாதை இருக்கும். அதே நபரிடத்தில் நாம் நெருங்கி, நண்பர் என்ற நிலைக்கு வந்தபிறகு எப்படி இருப்போம்? அந்த இடைவெளி குறைந்திருக்கும். மரியாதையுடன் அன்பும், நட்பும் பிணைந்திருக்கும். எதையும் அவரிடத்தில் கேட்பதற்கோ, பேசுவதற்கோ நமக்கு கூச்சம் இருக்காது. கடவுளுடன், அப்படி ஒரு உறவுநிலைக்கு இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். கடவுளைப்பார்த்து நாம் பயப்படத்தேவையில்லை. கடவுளை தந்தையாக, உற்ற நண்பராக நாம் பார்க்க வேண்டும். அந்த அன்பை நாம் உணர வேண்டும். அப்படி உணர்கிறபோது, நாம் வெளிப்படையாக இருப்பதற்கு கற்றுக்கொள்கிறோம். அவரிடத்தில் நம்மை ஒரு திறந்த புத்தகமாக காட்டுகிறோம். நமக்குத் தேவையானவற்றை நாம் கேட்கிறோம். நமக்கு அது கிடைக்குமா? கிடைக்காதா?...

துயரம் மகிழ்ச்சியாக மாறும் !

ஆண்டவர் இயேசுவின் வாக்குறுதிகள் அனைத்திலும் நமக்கு மிகுந்த ஆறுதல் தருவது இதுதான்: உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்”. இயேசு தம் சீடர்களுக்குப் போலியான வாக்குறுதிகளைத் தரவில்லை. ‘உங்களுக்குத் துயரமே வராது’ என்று சொல்லவில்லை. ‘நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள், துயருறுவீர்கள்’ என்றுதான் சொன்னார். ஆம், இயேசுவின் சீடராய் வாழ்வதில் பல இடையூறுகள் எழத்தான் செய்யும். ஆனால், துயரமே வாழ்வாகிவிடாது. துயரம் மகிழ்ச்சியாக மாறும். அதுதான், இயேசுவின் சொந்த அனுபவம்கூட. அவரது பாடுகள், துன்பங்கள், இறுதியில் சிலுவைச் சாவு; அத்தோடு அவரது வாழ்வு தோல்வியாக முடிந்துவிடவில்லை. மாறாக, உயிர்ப்பில், வெற்றியில் நிறைவுபெற்றது. அதுபோலவே, நமது வாழ்விலும் இயேசுவின் மதிப்பீடுகளுக்காக நாம் துயரங்களைச் சந்திக்கும்போது, இறுதியில் அந்தத் துயரங்கள் நீங்கி, நமக்கு வெற்றியும், மகிழ்ச்சியும் நிச்சயம் கிட்டும். இந்த நம்பிக்கையோடு நாம் சீடராய் வாழ்வோம். மன்றாடுவோம்: வாக்கு மாறாத இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் வாக்களித்தவாறே எங்கள் துயரங்கள் நீங்கி, எங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்ற...

புதிய பார்வை

இன்றைய சமுதாயத்தில் முன்சார்பு எண்ணங்கள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. ஒருவரை நேரடியாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னதாகவே அவரைப்பற்றி நாம் கேள்விப்பட்ட செய்திகளை வைத்து, அவர் இப்படித்தான் என்று முடிவுகட்டி விடுகிறோம். அவரைப்பற்றி நாமே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். இது அடிப்படை உறவுச்சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது. ஆனால், இன்றைய நற்செய்தி நாம் திறந்த உள்ளத்தோடு மற்றவர்களுக்கு செவிமடுக்க அழைப்புவிடுக்கிறது. தொடக்கத்தில் இயேசு தன்னுடைய பணிவாழ்வை ஆரம்பித்தபோது, மக்களில் ஒருசிலர் தான் அவருடைய போதனையைக் கேட்டிருப்பார்கள். கேட்டதில் ஒவ்வொருவரும் அவரவர் அறிவுக்கேற்ப, இயேசுவைப்புரிந்திருப்பார்கள். சிலர் சரியாகப் புரிந்திருக்கலாம். சிலர் தவறாகப் புரிந்திருக்கலாம். அந்த கருத்து தான், மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கும். அவரைச் சந்தித்தவர்கள் அனைவருமே இந்த ஒரு கண்ணோட்டத்தோடு தான் அணுகியிருப்பார்கள். இந்த பார்வை நிச்சயம் சரியான பார்வையாக இருக்க முடியாது. நாம் ஒருவரை அணுகுகிறபோது, திறந்த உள்ளத்தோடு அணுக வேண்டும். அவர் எப்படி இருக்கிறார் என்பது நமக்கு முக்கியமல்ல. நாம் எப்படி இருக்கிறோம்? நமது பார்வை, சிந்தனை...