Category: Daily Manna

பின்பற்றுவேன், ஆனால்… !

இயேசுவிடம் வந்து அவரது சீடராய் வாழ விருப்பம் தெரிவித்த மூன்று மனிதர்களைப் பற்றி இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம். இவர்கள் மூவரும் நம்மையே பிரதிபலிக்கின்றார்கள் என்பதை உணர வேண்டும். நாமும் இயேசுவின் சிறந்த சீடர்களாய் வாழ விரும்புகிறோம். நமக்கும் நல்ல எண்ணங்கள், உயர்ந்த சிந்தனைகள் அவ்வப்போது எழுகின்றன. ஆனால், பல தடைகள் நம்மை ஈர்க்கின்றன. சீடராய் வாழவிடாமல் தடுக்கின்றன. எனவே, நாமும் அந்த மூன்று மனிதர்களைப் போல சாக்குபோக்குகளைக் கண்டுபிடிக்கிறோம். முதலில் என்னுடைய வீட்டுக் கடமைகள் முடியட்டும், அல்லது இந்தப் பணிகளை ஆற்றிவிட்டு அதன்பின் நான் முழு நேரமாக இறைபணியில் ஈடுபடுவேன் என்றெல்லாம் எண்ணுகின்ற நல்ல உள்ளங்கள் பல இருக்கின்றன. ஆனால், இயேசு ஒரு தெளிவைத் தருகின்றார்: அனைத்திற்கும் மேலாக ஆண்டவரைத் தேடுங்கள். அவருக்குப் பணி புரியுங்கள். மற்ற அனைத்தையும் அவரே பார்த்துக்கொள்வார். எனவே, பல்வேறு பணிகளுக்கு மத்தியில் இயேசுவின் சீடராய் வாழ விரும்புவோர் அனைத்திற்கும் மேலாக இயேசுவையே முதற் கடமையாகக்...

வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள்

திருமுழுக்கு யோவானின் பிறப்பு நிகழ்ச்சிகளையெல்லாலம் அனுபவித்திருந்த செக்கரியா, தனது மகனைப்பற்றிய நீண்டதொரு கனவை வைத்திருந்தார். கடவுள் பக்தியுள்ள ஒவ்வொரு பாரம்பரிய யூதரும் மெசியாவின் வருகைக்காகக் காத்திருந்தனர். கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்ட மெசியா வந்து, அவர்களை அடிமைத்தளையிலிருந்து மீட்பார் என்று அவர்கள் உறுதியாக நம்பினர். மெசியாவின் வருகைக்கு முன்னால், அவருடைய முன்னோடி வந்து, அவருக்கான வழியை ஆயத்தம் செய்வார் என்றும் உறுதியாக நம்பினர். செக்கரியா தனது மகனை மெசியாவின் முன்னோடியாக கனவு கண்டார். தான் அனுபவித்த நிகழ்ச்சிகள், கண்ட காட்சிகள் வழியாக, திருமுழுக்கு யோவான் தான், மெசியாவின் முன்னோடி என்பதை, அவர் ஆணித்தரமாக நம்பினார். நமது வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுமே ஏதோ ஒரு செய்தியை நமக்குத் தந்து கொண்டிருக்கிறது. தெளிவான பார்வையுடன், நமது அனுபவத்தையும் அத்தோடு இணைத்துப் பார்த்தால் நம்மால் அதை தெளிவாக உணர முடியும். அத்தகைய தெளிவைத்தான், செக்கரியா தனது வாழ்க்கையில் கண்டார். கடவுளின் செய்தியை நாம் அறிந்து கொள்ள,...

செயல்பாடுள்ள கிறிஸ்தவர்கள்

இயேசு வாழ்ந்த காலம் புதுமைகளுக்கு பெயர் போன காலம். பல போதகர்களால் புதுமைகளும் அற்புதங்களும் அரங்கேறின. புதுமைகள் பொதுவாக நடக்கக்கூடிய நிகழ்வுகளாக இருந்தன. பல நோய்கள் உளவியல் நோய்களாக இருந்தன. கடவுளின் பெயரைச்சொல்லி வேண்டுகிறபோது, கடவுள் மீது உள்ள நம்பிக்கை, பல பேருக்கு சுகத்தை கொடுத்தது. இந்த பிண்ணனியில் தான், நாம் இந்த நற்செய்தி வாசகத்தைப் புரிந்து கொள்ள முடியும். தொடக்ககால திருச்சபை தலைவர்கள், புதுமைகளை மறுக்கவில்லை. தொடக்ககால திருச்சபையில் இயேசுவை நம்பாத சிலரும், உதட்டளவில் இயேசுவின் பெயரைச் சொல்லி, பல பேய்களை ஓட்டினர். ஆனால், கடவுளை நம்பாதவர்கள், கடவுளின் பெயரைச் சொல்லி காரியம் சாதிக்கிறபோது, அதற்கான விளைவை, அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும் என்பது இயேசு கொடுக்கிற எச்சரிக்கை செய்தி. புதுமைகள் செய்வதனாலோ, கடவுளின் பெயரால் காரியங்கள் சாதிப்பதனாலோ, ஒருவர் கடவுளுக்கு உகந்தவர் ஆகிவிட முடியாது. கடவுளுக்கு ஒருவர் உகந்தவர் ஆக வேண்டுமென்றால், கிறிஸ்தவத்தை முழுமையாக வாழ முயற்சி எடுக்க...

உண்மை கிறிஸ்தவர்களாக வாழ…

ஒரு மரம் அதன் கனியால் அறியப்படுகிறது என்பது, யூதர்கள், கிரேக்கர்கள் மற்றும் உரோமையர்கள் ஏற்றுக்கொண்ட பொது சிந்தனை. மத்திய கிழக்குப்பகுதிகளில் “வேரைப்போல அதன் கனி” என்கிற பழமொழி மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. இன்றைய நற்செய்தியில் இயேசு ”முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையோ பறிக்க முடியுமா?” என்று கேட்கிறார். முட்செடிகளுக்கும் திராட்சைப்பழங்களுக்கும் என்ன தொடர்பு? முட்பூண்டுகளுக்கும், அத்திப்பழங்களுக்கும் என்ன ஒற்றுமை? பாலஸ்தீனப்பகுதியில் ஒரு சில முட்செடிகள், சிறிய பழங்களைக் கொண்டிருந்தது. அது திராட்சைப் பழங்களைப் போன்ற தோற்றம் உடையதாக இருந்தது. அதேபோல முட்பூண்டுகளில் இருக்கும் பழங்கள், அத்திப்பழங்களை நினைவுபடுத்துவது போன்று இருந்தது. எவ்வளவுதான் அவைகள் தோற்றத்தில், திராட்சைப் பழங்களையும், அத்திப்பழங்களையும் நினைவுபடுத்துவது போல இருந்தாலும், அவைகள் திராட்சைப்பழங்களாகவோ, அத்திப்பழங்களாகவோ மாறிவிட முடியாது. அதேபோலத்தான் போலி இறைவாக்கினர்களும். அவர்கள் இறைவாக்கினர்களைப் போல உடையில் காணப்பட்டாலும், அவர்கள் இறைவாக்கினர்கள் ஆகிவிட முடியாது. எனவே, அவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்க, இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார்....

இடுக்கமான வாயில் !

இயேசுவின் போதனைகள் எளிதானவை அல்ல. அவை நம்மை மலர்த் தோட்டத்திற்கு இட்டுச் செல்வதில்லை. மாறாக, சிலுவைப் பாதைக்கு அழைக்கின்றன. இறைவார்த்தையை இன்று ஒரு சிலர் அற்புதங்கள், அருங்குறிகள், குணமாக்குதல் நடத்தும் கருவியாக மட்டுமே பார்ப்பது வேதனையாக இருக்கிறது. இறைவார்த்தை நமக்கு நலமும், ஆறுதலும் தருவதுபோலவே, நம்மை அறைகூவலுக்கும், சவாலுக்கும் அழைக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இயேசுவின் போதனைகள் பலவும் கடினமானவை. எனவேதான், இடுக்கமான வாயில் வழியே நுழையப் பாடுபடுங்கள் என இன்றைய வாசகம் வழியாக நாம் நினைவூட்டப்படுகிறோம். ஆனால், இந்த இடுக்கமான வாயில் வழியே நமக்கு முன்னால், இயேசுவும் அவரைத் தொடர்ந்து ஏராளமான புனிதர்களும், மறைசாட்சிகளும் பயணம் செய்திருக்கிறார்கள் என்பது நமக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகிறது. எனவே, நாமும் அவர்களைப் பின் தொடர்ந்து, சவால்கள் நிறைந்த, இடுக்கமான இறைவார்த்தைப் பாதையில் பயணம் செய்வோம். மன்றாடுவோம்: ஒப்பற்ற செல்வமான இயேசுவே, உமக்கு நன்றி கூறுகிறோம். உம்முடைய போதனைகள் கடினமாக இருக்கின்றன என்று நாங்கள்...