Category: Daily Manna

மகனே, துணிவோடிரு, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன

இன்றைய நற்செய்தி வாசகம் (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-17)நோன்பைப் பற்றிப் பேசுகின்றது. இயேசு தன் சீடர்கள் நோன்பிருக்காததை நியாயப்படுத்திப் பேசுகிறார். அதே வேளையில், தேவையான நேரத்தில் அவர்களும் நோன்பிருப்பார்கள் என்று பதில் கூறி, அவர்களையும் தயாரிக்கின்றார். நோன்பு என்பது தேவை மற்றும் சூழலின் அடிப்படையில் செய்ய வேண்டிய ஒன்று என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார். இயேசுவே தன் வாழ்வில் அதை வாழ்ந்துகாட்டினார். தனது பணி வாழ்வின் தொடக்கத்தில் 40 நாள்கள் தொடர்ந்து நோன்பிருந்தார். தனது பணி வாழ்வின்போது உணவு உண்ணக்கூட நேரமில்லாத வேளைகள் வந்தபோது, அவர் நோன்பிருந்தார். அதே வேளையில் விருந்து உண்ண அழைப்புகள் வந்தபோது, அதை ஏற்று நன்கு உண்ணவும் செய்தார், உறவை வளர்த்தார். இயேசுவின் இந்த மனநிலையை புனித பவுலடியார் நன்கு விளக்குகிறார். எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும், வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப்...

அழைத்தலும், அறிவிப்பும் !

இன்று நற்செய்தியாளரும், திருத்தூதருமான புனித மத்தேயுவின் விழாவைக் கொண்டாடுகிறோம். அவருடைய அழைப்பையும், நற்செய்தி அறிவிப்பையும் இன்று நினைவுகூர்ந்து அவருக்காக இறைவனைப் போற்றுவோம். மத்தேயு சுங்கச் சாவடியில் வரி தண்டுபவராகப் பணியாற்றியவர். எனவே, பாவி என்று கருதப்பட்டவர். இருப்பினும், அவரையும் இயேசு தம் சீடருள் ஒருவராக அன்புடன் தேர்ந்துகொண்டார். நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் என்று அறிக்கையிட்டார். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட மத்தேயு, அழைப்பிற்குத் தகுதியுள்ளவராக வாழ்ந்தார். நற்செய்தியை வார்த்தையாலும், எழுத்தாலும் அறிவித்தார். இன்றும் அவர் எழுதிய நற்செய்தி நமக்கெல்லாம் ஊக்க மருந்தாகத் திகழ்கிறது. நமது அழைப்பும், அறிவிப்பும் பற்றிச் சிந்திப்போம். நாம் பாவிகளாய் இருந்தபோதே நம்மை அழைத்த இறைவனுக்கு நன்றி கூறுவோம். அழைப்பை ஏற்று நற்செய்தியாளர்களாய் வாழ்வோம். நமது வாழ்வே ஒரு நடமாடும் நற்செய்தி நூலாக அமையட்டும். நம்மையும், நமது பணியையும் பார்க்கிறவர்கள் இயேசுவின் மதிப்பீடுகளை நம்மிடமிருந்து கற்றுக்கொள்ளட்டும். இது நம்மேல் சுமத்தப்பட்ட கடமை என்று ஏற்றுக்கொள்வோமா? மன்றாடுவோம்: நற்செய்தியின்...

இறைவனின் மன்னிப்பு

எண்ணங்களுக்கும் நமது உடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உண்டு என்பது அனைவருமே ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை. நமது நினைவுகள் தான், நமது வாழ்வாக மாறுகிறது. இன்றைய நற்செய்தியில் வருகிற முடக்குவாதமுற்ற மனிதனின் வாழ்விலும், அவனுடைய குற்ற உணர்வு, அவனை இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது என்றால், அதுதான் உண்மை. யூதமக்களின் மனதில் பாவங்கள் தான், உடல் நோய்களுக்கு மூல காரணம் என்ற நம்பிக்கை இருந்தது. எனவே, உடல் நோயினால், குறிப்பாக, முடக்குவாத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைக்கு, பாவங்கள் தான் காரணம், என்று உறுதியாக நம்பினர். இன்றைய நற்செய்தியில் வரும், முடக்குவாதமுற்ற மனிதனுக்கு, தனது நிலைக்கு யார் காரணம்? என்பது தெரியாமல் இருந்திருக்காது. தனது பாவங்கள் தான், தன்னை இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது என்பதை நிச்சயம் அவன் உணர்ந்திருப்பான். ஆனாலும், அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. தான் செய்த பாவத்திற்கு கடவுள் தண்டனை தந்திருக்கிறார். இதற்கு முடிவு கிடையாது, அதனை தான் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும், என்று தனது வாழ்வையே...

கடவுளின் கொடை

திருச்சபை என்றால் என்ன? திருச்சபையில் பேதுருவின் பணி என்ன? பேதுருவின் முக்கியத்துவம் என்ன? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலாக வருவதுதான் இன்றைய நற்செய்தி. எபேசியர் 2: 20 ல் பார்க்கிறோம்: ”திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்”. இங்கே திருச்சபையின் மூலைக்கல்லாக இயேசு சுட்டிக்காட்டப்படுகிறார். அவரில்லையென்றால், திருச்சபை உறுதியாக நிற்க முடியாது, என்று நாம் பொருள்படுத்தலாம். 1பேதுரு 2: 5 ”நீங்கள் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக!” இங்கே ஒவ்வொரு கிறிஸ்தவர்களும், திருச்சபையின் கற்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் இல்லையென்றால், திருச்சபை இல்லை. எனவே தான், சவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியபோது, தானே துன்புறுத்தப்படுவதாக இயேசு அவரிடம் சொல்கிறார். 1கொரிந்தியர் 3: 11 ல் பார்க்கிறோம், ”ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது”. மேற்சொன்ன அனைத்துமே, இயேசுதான் திருச்சபையின் ஆணி வேர் என்பதை வலியுறுத்திக்கூறுகிறது. அதாவது,...

அர்ப்பண வாழ்வு

மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவைப்பார்த்து “போதகரே” என்று சொல்வது சற்று வியப்பாக இருக்கிறது. ஏனென்றால், போதகர் என்பது மதிப்பு மிகுந்த சொல். மறைநூல் அறிஞர்கள் இயேசுவைப் போதகராக ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியிருக்கின்ற சூழ்நிலையில், இயேசுவைப் போதகர் என்று அழைப்பது வியப்புக்குரியது. இயேசு தனது பணிவாழ்வின் யதார்த்தத்தை, உண்மை நிலையை எடுத்துரைப்பதாக இந்தப்பகுதி அமைகிறது. இயேசு தன்னுடைய சீடர்கள் உணர்வுப்பூர்வமாக உந்தப்பட்டு தன்னோடு இருக்க வேண்டும் என விரும்பவில்லை. உணர்வு என்பது உடனே தோன்றி உடனே மறையக்கூடியது. தான் என்ன செய்கிறோம்? அர்ப்பண வாழ்வு என்றால் உண்மையான அர்த்தம் என்ன? என்பதை தன்னுடைய சீடர்கள் உணர்ந்திருக்க வேண்டும் என இயேசு எதிர்பார்க்கிறார். அர்ப்பண வாழ்வு என்பது மற்றவருக்காக வாழ்வது, எந்த துன்பத்தையும் ஏற்றுக்கொள்வத, தங்களையே தியாகம் செய்வது, மற்றவருக்கான சிலுவையை நாம் சுமப்பது. இதை தன்னுடைய சீடர்கள் நன்றாகப்புரிந்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இயேசு இதைச்சொல்கிறார். கிறிஸ்தவ வாழ்வு என்பது ஏதோ ஞாயிறு திருப்பலிக்கு கலந்து...