மீண்டும் பிறப்போம்
யோவான் நற்செய்தியாளர் இயேசுவின் போதனைகளைப் போதிக்கும் விதத்தில் தனக்கென ஒரு பாணியை வைத்திருக்கிறார். முதலில் இயேசு முன் ஒரு கேள்வி வைக்கப்படுகிறது. இயேசு அதனைக்கேட்டவர் புரியாத வண்ணம் அதற்கு விளக்கம் கொடுக்கிறார். சில சமயங்களில் கேட்டவர், அதனைத்தவறாகவும் புரிந்து கொள்கிறார். மீண்டும் இயேசு அதற்கு விளக்கம் கொடுத்துப் புரிய வைக்கிறார். இந்தப்பாணி யோவான் நற்செய்தியில் பல பகுதிகளில் காணப்படுகிறது. நிக்கதேமுடனான உரையாடலிலும் இதே பாணியை இயேசு பின்பற்றுகிறார். மறுபிறப்பு என்கிற வார்த்தை நிக்கதேமுக்கு குழப்பத்தையும், தவறாப்புரிந்து கொள்ளவும் தூண்டுகிறது. இதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. ஏனென்றால், கிரேக்கத்தில் “born anew” என்கிற வார்த்தைக்கு மூன்று அர்த்தங்கள் சொல்லப்படுகிறது. 1. தொடக்கத்திலிருந்து…2. மீண்டும்….3. மேலிருந்து… மறுபிறப்பு என்று இயேசு பொருள்படுத்துவது, அடிப்படையில் ஏற்படும் மாற்றம். கடவுளின் அருளால் ஏற்படும் மாற்றம். It is a radical change in a person. It is a change in a Person’s Being....