Category: Daily Manna

இறை அன்பில் நாளும் வளர்வோம்

தொடக்க காலத்தில் மக்கள் குழுக்களாக வாழ்ந்தபோது, ஒரு குழுவில் உள்ளவர் வேறொரு குழுவில் உள்ளவரை தீங்கு செய்தால், அது பெரும் சண்டையாக மாறி, இரண்டு குழுக்களுக்கும் பெரும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. இதனைத்தவிர்க்க அவர்களுக்குள்ளாக புதிய ஒழுங்கைக்கொண்டு வருகிறார்கள். அதுதான் கண்ணுக்குக்கண், பல்லுக்குப்பல். இதன்படி ஒரு குழுவில் உள்ளவர் மற்ற குழுவில் உள்ளவரைத்தாக்கினால், பாதிக்கப்பட்டவருக்கும், அவரைத்தாக்கியவருக்கும் இடையே மட்டும் வழக்குத்தீர்க்கப்படும். ஒரு மனிதனுக்காக குழுக்கள் தங்களிடையே சண்டையிட்டுக்கொள்ளாது. பாதிக்கப்பட்டவருக்கு ஒரு கண் போயிருந்தால், அவரைத்தாக்கியவருக்கும் அதே தண்டனைக்கொடுக்கப்படும். இயேசு வாழ்ந்தபோது இதுதான் மக்களிடையே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. இயேசு இப்போது மற்றொரு தளத்திற்கு மக்களை அழைத்துச்செல்கிறார். இதன்படி, பகைவருக்கும் அன்பு என்ற பழைய ஏற்பாட்டின் கட்டளைக்கு புத்துயிர் கொடுக்கிறார். இது புதியது அல்ல: மாறாக, புதுமையானது. “திருச்சட்டத்தை அழிக்க அல்ல: அதை நிறைவேற்றவே வந்தேன்”, என்று சொல்கிற இயேசுவின் வார்த்தைகள் இங்கே கவனிக்கத்தக்கவை. கண்ணுக்குக்கண் என்று சொல்கிற பழைய ஏற்பாட்டில் ஏராளமான இடங்களில்...

நன்மை செய்யக் கற்றுக்கொள்வோம்

நமது வாழ்வில் எது கடவுளுக்கு பிரியமானது என்று நாம் நம்புகிறோமோ, அவற்றை நிறைவோடு, மகிழ்வோடு செய்ய வேண்டும் என்பதே, இயேசுவின் உருமாற்ற நிகழ்வு நமக்குக் கற்றுத்தரும் பாடம். ”என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள்” என்ற தந்தையின் வார்த்தைகள், இதைத்தான் நமக்கு வெளிப்படுத்துகிறது. இயேசு தனது மண்ணக வாழ்வை, கடவுளுக்காகவே வாழ்ந்தார். கடவுளின் திருவுளம் நிறைவேற வேண்டும் என்பதற்காகவே, தன்னை முழுமையாகக் கையளித்தார். தனது வாழ்வையே இந்த உலகத்திற்காக தியாகம் செய்தார். இந்த உலகத்தில் நாம் அனைவருமே, நல்லது எது? கெட்டது எது? என்று அறிந்தவர்களாக இருக்கிறோம். நாம் எதைச்செய்தால் நன்றாக இருக்கும்? என்று தெரிந்திருந்தும், பல வேளைகளில், நாம் செய்ய வேண்டியதைத் தவறிவிடுகிறோம். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். மற்றவர்கள் நம்மிடம் சொன்னால், நாம் செய்வோம் என்ற, மனநிலை கூட நம்மிடம் இருக்கலாம். ஒருவருக்கு நன்மை செய்யத் தெரிந்திருந்தும், அதற்கான வாய்ப்பிருந்தும், செய்யத் தவறினால், அதைப்போல வேறு கேடு...

என்னைக் குறித்தும், என் வார்த்தைகளைக் குறித்தும்!

“பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள், என்னைக் குறித்தும், என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப்படுவார்” என்னும் இயேசுவின் சொற்களை இன்று தியானிப்போம். கொஞ்சம் கடினமான சொற்கள், கடினமான தொனியும்கூட. ஏன் இந்தக் கடுமை? தன்னைக் குறித்தும், தமது வார்த்தைகளைக் குறித்தும் பலர் வெட்கப்படுவர் என்று இயேசு அறிந்திருந்தார். எனவே, அவர்களைப் பாவத்தில் உழலும் விபசாரத் தலைமுறை என அழைக்கிறார். பாவத்தில் வாழ்பவர்கள் இயேசுவை விட்டுப் பிரிந்து நிற்கிறார்கள் என்பதே வேதனை. ஆனால், இயேசுவைக் குறித்தும், அவரது வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படுவார்கள் என்றும் இயேசு கூறுகிறார். பாவத்தைப் பற்றிய வெட்க உணர்வு குறைவது ஒரு தவறான அடையாளம். இயேசுவின் காலத்தைப் போலவே, நாம் வாழும் இந்நாள்களிலும் பாவத்தைப் பற்றிய வெட்க உணர்வு குறைந்து வருகிறது. லஞ்சம், ஊழல், ஒழுக்கவியல் தவறுகள்… இவற்றைச் செய்வோர் அதைப் பற்றிய எந்த வெட்க...

”ஆண்டவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார்”

இஸ்ரயேல் மக்கள் உலகத்தை மூன்றாகப் பிரித்துப் பார்த்தார்கள். விண்ணகம், மண்ணகம், பாதாளம் என்று வகைப்படுத்தினார்கள். கடவுள் விண்ணகத்தில் இருப்பதாகவும், அங்கிருந்து அவர் மக்களை வழிநடத்துவதாகவும் நம்பினர். எப்போதெல்லாம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் கடவுள் அவர்களை விடுவிக்க அவர் எல்லாவித முயற்சிகளையும் எடுப்பார் என்கிற நம்பிக்கை, இஸ்ரயேல் மக்கள் மத்தியில் இருந்தது. அந்த நம்பிக்கையின் பிண்ணனியில் தான் இந்த திருப்பாடல் (திருப்பாடல் 102: 10 – 11, 12 – 13, 14 – 15 ) எழுதப்படுகிறது. இஸ்ரயேல் மக்கள் மட்டும் இந்த உலகத்தில் வாழவில்லை. அவர்களோடு இன்னும் பல நாட்டினரும், இந்த உலகத்தில் வாழ்ந்தார்கள். ஒருவர் மற்றவரை அடிமைப்படுத்த வேண்டும் என்னும் எண்ணம் அவர்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது. எனவே, ஒருவர் மற்றவருக்கெதிராக போர்தொடுத்தனர். பொருட்சேதங்களை வேற்றுநாட்டினர் ஏற்படுத்தினர். இஸ்ரயேல் மக்களின் நிலையோ மிகப்பரிதாபமானதாக இருந்தது. அவர்களுக்கு என்று எந்த ஆதரவும் இல்லை, கடவுள் ஒருவரைத்தவிர. எனவே தான்,...

”ஆண்டவரே! நான் உமக்கு நன்றிப்பலி செலுத்துவேன்”

நன்றி என்பது மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அந்த நன்றி என்ற சொல்லின் பொருள் அறியாது, நன்றி இல்லாத ஒரு தன்மை இந்த உலகத்தில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அதிலும் குறிப்பாக, நாம் வாழக்கூடிய இந்த உலகம், மற்றவர்களைப் பயன்படுத்த அதிக முயற்சி எடுக்கிறது. எந்த அளவுக்கு மற்றவர்களைப் பயன்படுத்தி இலாபம் அடைய முடியுமோ, அந்த அளவுக்கு மற்றவர்களைப் பயன்படுத்துவதில் அதிக மெனக்கெடுகிறது. பயன்படுத்திய பிறகு, அவர்களை தூர எறிந்துவிடுகிறது. இதுதான் நாம் வாழக்கூடிய உலகம். ஆனால், திருப்பாடல் ஆசிரியர் கடவுளை தன்னுடைய தேவைக்கு மட்டும் பயன்படுத்துகிறவராக இல்லை. அவர் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அனைத்து நலன்களுக்காகவும் நன்றி செலுத்துகிறார். அந்த நன்றியின் வெளிப்பாடு தான், இன்றைய திருப்பாடல் (திருப்பாடல் 116: 12 – 13, 14 – 15, 18 – 19). கடவுளிடத்தில் கேட்டதைப் பெற்றுவிட்டோம், இனி கடவுள் தேவையில்லை என்று, அவர் கடவுளை விட்டு விலகவில்லை....