Category: Daily Manna

ஆண்டவரே! உம் உறைவிடம் எத்துணை அருமையானது

திருப்பாடல் 84: 2, 3, 4 – 5, 7 & 10 இறைவன் வசிக்கக்கூடிய ஆலயம் எத்துணை மகிமையானது என்பதை இந்த திருப்பாடல் விளக்குவதாக இருக்கிறது. ”அருமையானது” என்கிற பொருள், ஆலயத்தின் உயர்ந்த மண்டபங்களையும், சுரூப வேலைப்பாடுகளையும் குறிக்கக்கூடிய வார்த்தையல்ல. ஆலயத்தின் சிறப்புத்தோற்றத்தையும் குறிப்பதல்ல. இங்கே நாம் கவனிக்கக்கூடிய முக்கியமான ஒன்று, திருப்பாடல் ஆசிரியர் எருசலேம் தேவாலயத்தை மையமாக வைத்து இந்த பாடலை எழுதுகிறார். எருசலேம் தேவாலயம் பார்ப்பதற்கு அழகானது. பரவசம் தரக்கூடியது. அப்படியானால், ஆசிரியர் ஆலயத்தைப்பார்த்து, “அருமையானது“ என்று சொல்லக்கூடிய பிண்ணனி என்ன? என்பதை இப்போது பார்ப்போம். ஆலயம் என்பது ஆண்டவர் வாழக்கூடிய இல்லம். ஆண்டவரின் ஆலயத்தில் இருக்கிறபோது, நமக்கு எந்த கவலையும் எழுவது கிடையாது. ஒரு தாயின் மடி எப்படி நம்முடைய கவலைகளுக்கெல்லாம் சிறந்த மருந்தாக இருக்கிறதோ, அதேபோல இறைவனின் இல்லம் நம் அனைவருக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது. நம்முடைய கவலைகளைப் போக்கக்கூடிய இடமாகவும், கண்ணீரைத்துடைக்கக் கூடிய...

கடின உழைப்பின் பலன்

யூத ராபிக்களின் போதனைப்படி, ஒரு மனிதர் புதையலைக் கண்டுபிடித்தால் அது அவருக்கு சொந்தமானதாகும். அதற்கு அவர் மட்டும் தான் உரிமை கொண்டாட முடியும். போர்கள் வருகிறபோது, மக்கள் தங்களது நிலபுலன்களை விட்டுவிட்டு அடிக்கடி வேறு இடங்களுக்குச் சென்று விடுவதால், அவர்கள் சேர்த்து வைத்திருந்த பணம், புதையலாக பல இடங்களில் புதைக்கப்பட்டிருந்தது. எனவே, அடிக்கடி இந்த புதையல்களை மக்கள் கண்டுபிடிப்பது வழக்கமாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு புதையலைத்தான், அந்த மனிதர் கண்டுபிடிக்கிறார். புதையலைக் கண்டுபிடிக்கிற மனிதர் சோம்பேறி அல்ல. புதையலுக்காக அலைகிறவர் அல்ல. அவர் உழைக்கிறார். புதையலுக்காக உழைக்கவில்லை. வழக்கமாக அவர் உழைப்பது போல உழைக்கிறார். அவரது மனதில் புதையலைப்பற்றிய எண்ணமில்லை. தனது கடமையைச் செய்கிறார். அந்த கடமையின் இடையில், இந்த புதையலைக் கண்டுபிடிக்கிறார். நமது வாழக்கையில் சோம்பேறித்தனத்திற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. நாம் உழைக்க வேண்டும். நமது கடமையை நிறைவாகச் செய்ய வேண்டும். அதற்கான பலனையும், அதனைவிட பலவற்றையும், கடவுள் நமக்குத்...

இறைவன் படைத்த உலகம்

ஒரு விவசாயி நெல்லை விதைக்கிறான். அதற்கான காரணம் என்ன? அவனுடைய நோக்கம் என்ன? நல்ல அறுவடையைப் பெற வேண்டும் என்பதுதான். நல்ல அறுவடையைப் பெறுவதற்காக அவன் அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறான். மரங்கள் செழித்து வளர்கிறது. அவைகளின் நோக்கம் என்ன? நல்ல பழங்களை மக்களுக்குக் கொடுக்கிறது. இவ்வாறு இந்த இயற்கையில் காணப்படும் அனைத்துமே, பலன் கொடுப்பதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறது. மனிதன் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டிருக்கிறான். படைப்பின் சிகரமாக படைக்கப்பட்டிருக்கிறான். இந்த உலகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கிறான். இந்த உலகத்திற்கே கடவுள் அவனை பொறுப்பாளனாக மாற்றியிருக்கிறார். அப்படியென்றால், நாம் எந்த அளவுக்கு பலன் தரக்கூடியவர்களாக இருக்க வேண்டும், என்பதை உணர்த்துகின்றது இன்றைய நற்செய்தி பகுதி. இந்த உலகத்தை அழகுபடுத்துவதற்கும், அதனைப் பயன்படுத்தி இன்னும் பல சாதனைகளைச் செய்வதற்கும் கடவுள் நமக்கு படைப்பாற்றலைக் கொடுத்திருக்கிறார். ஆனால், ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு இதனைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, நாம் அழிவுக்கு இட்டுச்செல்லக்கூடிய காரியங்களுக்கு இந்த உலகம் என்னும் பூமியை நாம் சிதைத்துக்கொண்டிருக்கிறோம். நமது...

உண்மையும், பிரமாணிக்கமும் உள்ளவர்களாக…….

இஸ்ரயேல் மக்கள் மத்தியில் மோசே மிகப்பெரிய இறைவாக்கினராகக் கருதப்பட்டார். அவருக்கு மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு இருந்தது. மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவைப் புதிய மோசேயாக அறிமுகப்படுத்துவதை அவருடைய நற்செய்தியில் நரம் பார்க்கலாம். மோசேயின் குழந்தைப்பருவ நிகழ்ச்சிகளை இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளோடு ஒப்பிடுவதிலும் சரி, பத்து கொள்ளை நோய்களுக்கு மாற்றாக, இயேசு செய்த அற்புதங்களும் சரி, இயேசு “புதிய மோசே“ என்ற சிந்தனையை, மத்தேயு நற்செய்தியாளர் ஆணித்தரமாகத் தருகிறார். இந்த வரிசையில் பழைய ஏற்பாட்டை முழுமையாக்கவும், நிறைவேற்ற வந்தவராகவும் இயேசுவை அவர் சித்தரிக்கிறார். எனவே தான் மத்தேயு நற்செய்தியில் “இவ்வாறு மறைநூல் வாக்கு நிறைவேறியது” என்ற சொல்லாடல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர்களால் முன்சொல்லப்பட்டதை இயேசு எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்ற பாணியில், மத்தேயு நற்செய்தியாளர் உண்மையில் அதிக சிரத்தை எடுத்து தனது நற்செய்தியை எழுதியிருக்கிறார். மத்தேயுவின் இந்த நற்செய்தி நமக்கு தரும் செய்தி, கடவுள் தனது வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற கடவுளாக...

இறையாட்சியைப் பற்றிக்கொள்வோம்

இயேசு வாழ்ந்த காலத்தில் பணத்தை சேமித்து வைப்பதற்கு வங்கிகள் இல்லாமல் இல்லை. ஆனால், சாதாரண மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றார்போல வங்கிகள் இல்லை. செல்வந்தர்கள் மட்டுமே இவற்றைப் பயன்படுத்த முடியும். சாதாரண மக்கள் நிலத்தில் தாங்கள் சேர்த்து வைத்ததைப் புதைத்து வைப்பது வழக்கமாக இருந்தது. இதில் அவர்களுக்கு வேறு ஒரு நன்மையும் இருந்தது. பாலஸ்தீனப்பகுதி அடிக்கடி போரினால் தாக்கப்படும் பகுதியாக இருந்தது. பகைநாட்டவர் வரும்போது தங்களின் நிலங்களை விட்டுவிட்டு மக்கள் ஓடினாலும், திரும்பிவந்து, தங்கள் நிலத்தில் புதைத்து வைத்திருக்கிற பணத்தை பாதுகாப்பாக எடுக்க முடியும். எனவே, சாதாரண எளிய மக்கள், நிலத்தில் பணத்தைப் புதைத்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இயேசு இந்த நற்செய்தியின் மூலம் நமக்குக் கற்றுத்தரும் செய்தி இறையாட்சிக்கு நம்மை தகுதிபடுத்திக்கொள்ள நம்மையே இழக்க முன்வர வேண்டும். இந்த உலகத்தில் நாம் அடைய வேண்டிய இலக்கு இறையாட்சி. அதுதான் நமது முதன்மையான நோக்கம். ஆனால் இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் எதை...