அன்பு என்னும் அருமருந்து
1பேதுரு 1: 3 – 9 அன்பு என்னும் அருமருந்து இயேசுவின் உயிர்ப்பிற்கு பிறகு ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு பேதுரு தன்னுடைய திருமுகத்தை எழுதுகிறார். வாழ்க்கையின் பலநிலைகளில் துன்பப்பட்டுக்கொண்டிருந்த ஆசியா மைனர் பகுதியைச் சார்ந்த கிறிஸ்தவர்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறார். முரட்டுக்குணம் படைத்த தலைவர்களிடம் பணிவிடை செய்தவர்கள் (2: 18), திருமணமான பெண்கள் (3: 1), அடுத்தவர்களின் பரிகசிப்பிற்கு உள்ளானவர்கள் (4:14) என, குறிப்பிட்ட பிரச்சனைகளைச் சந்திக்கிறவர்களுக்கு இதனை எழுதுகிறார். அவர்கள் வாழ்கிற சூழ்நிலை, கடுமையான, வெகு எளிதாக சோர்ந்து போகிற சூழ்நிலை. அந்த சூழ்நிலையில், அவர்களுக்கான மருந்து, எதுவாக இருக்க முடியும்? என்பதைச் சிந்தித்து, அந்த மருந்தை அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வாகக் கொடுக்கிறார். அன்பு தான் அவர் கொடுக்கிற அருமருந்து. ஒருவர் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், அன்பு அவருக்கு அருமருந்தாக அமையும் என்பது அவருடைய தீராத நம்பிக்கை. எதற்காக அன்பை அருமருந்தாகக் கொடுக்கிறார்? பொதுவாக, கடுமையான சூழ்நிலையில் நாம்...