Category: Daily Manna

நிறைவை அடையும் வாழ்வு

திருத்தூதர் பணி 1: 1 – 11 நிறைவை அடையும் வாழ்வு எந்த ஒரு புத்தகமோ, வரலாறோ, கடிதமோ எழுதினாலும், அதன் நோக்கம் தெளிவாக குறிப்பிடப்படும். திருத்தூதர் பணி நூலானது, தொடக்க கால கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி நாம் அறிந்து கொள்ள உதவும் வரலாற்றுக் கருவி என்று சொன்னால் அது மிகையாகாது. நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுவின் பிறப்பு பற்றிய முன்னறிவிப்பு, இயேசுவின் பிறப்பு, அவருடைய பணிவாழ்வு, புதுமைகள், பாடுகள், இறப்பு, உயிர்ப்பு மற்றும் விண்ணகம் ஆகியவற்றைப் பற்றி நமக்கு தெளிவாகக் குறித்துக் காட்டுகிறது. அதனுடைய தொடர்ச்சியாக திருத்தூதர் பணி நூலானது பார்க்கப்படுகிறது. திருத்தூதர் பணி நூலானது லூக்கா நற்செய்தியின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அந்த நூலின் தொடக்கத்திலும், “தெயோபில்“ என்கிற பெயருக்கு எழுதப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. இங்கும் அதே வார்த்தை குறிப்பிடப்படுகிறது. இரண்டு புத்தகங்களின் நடையும் ஒரே மனிதருக்குரியவையாக விவிலிய அறிஞர்களால் பார்க்கப்படுகிறது. திருத்தூதர் பணி எழுதப்படும் நோக்கம் பற்றி,...

நம்முடைய நற்செய்திப்பணி

திருத்தூதர் பணி 18: 23 – 28 நம்முடைய நற்செய்திப்பணி அப்போல்லா என்ற பெயருடைய யூதர் ஒருவரைப் பற்றிய செய்தி இன்றைய முதல் வாசகத்தில் நமக்குத் தரப்படுகிறது. அவர் சொல்வன்மை மிக்கவர் என்றும், மறைநூல்களில் புலமை வாய்ந்தவர் என்றும், அவருக்கு அடைமொழிகள் தரப்படுகிறது. இவற்றிற்கும் மேலான ஒரு பண்பும் அவருக்குத் தரப்படுகிறது. அதுதான் அவருடைய பணிவாழ்க்கையில், மிகச்சிறந்த பண்பாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அவர் ஆர்வமிக்க உள்ளம் கொண்டிருந்தார். ”ஆர்வமிக்க உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிய செய்தியைப்பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். இறைவனுடைய பணியைச் செய்வதற்கு நமக்கு முதலாவதாக ஆர்வம் இருக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் இரண்டு விதத்தில் நாம் செய்ய முடியும். ஏனோதானோவென்று வெறும் கடமைக்காக செய்வது முதல் வகை. செய்வதில் நிறைவோடு, ஆர்வத்தோடு செய்வது இரண்டாவது வகை. அப்போல்லோ இரண்டாவது வகையான மனிதராக இருக்கிறார். அந்த ஆர்வம் பல உதவி செய்யக்கூடிய நண்பர்களையும், கேட்கிறவர்களை கிறிஸ்துவின்பால் ஈர்க்கக்கூடியதாகவும்...

கடவுளே அனைத்து உலகின் வேந்தர்

திருப்பாடல் 47: 1 – 2, 3 – 4, 5 – 6 ”கடவுளே அனைத்து உலகின் வேந்தர்” கடவுள் அனைத்து உலகின் வேந்தர் என்பதை நாம் இரண்டு விதங்களாகப் புரிந்து கொள்ளலாம். முதலாவது, உலகம் என்பது நாம் வாழக்கூடிய இந்த பூமியோடு, இன்னும் பல கோள்கள் இருக்கின்றன. அவற்றையும் குறிக்கக்கூடியதாக நாம் பார்க்கலாம். இரண்டாவது, இந்த உலகத்தில் இருக்கக்கூடிய நாடுகளாக நாம் பார்க்கலாம். இந்த உலகத்தில் எத்தனை நாடுகள் இருந்தாலும், அந்த நாடுகளில் எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், அவற்றிற்கெல்லாம் ஒரே ஒரு கடவுள், அதுதான் யாவே கடவுள். அவர் தான் உண்மையான கடவுள். அந்த உண்மையான கடவுள் தான், இந்த உலகத்தின் வேந்தராக இருக்கிறார். கடவுள் அனைத்து உலகின் வேந்தர் என்பதை, எதை வைத்து ஆசிரியர் முடிவு செய்கிறார்? கடவுள் செய்த வல்ல செயல்களை வைத்து, ஆசிரியர் முடிவு செய்கிறார். ஏனென்றால், நடந்திருக்கிற செயல்கள் ஒவ்வொன்றுமே, ஆச்சரியத்தைத் தரக்கூடிய...

கடவுள் தம் நீதியை வெளிப்படுத்தினார்

திருப்பாடல் 98: 1, 2 – 3b, 3c – 4 ”கடவுள் தம் நீதியை வெளிப்படுத்தினார்” நீதி என்பது ஒருவருக்கு உரியதை ஒருவருக்குக் கொடுப்பது. அநீதி என்பது ஒருவருடைய உடைமையை அவரிடமிருந்து பறிப்பது. நீதி மற்றும் அநீதி என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கான அடிப்படை அளவுகோல் இதுதான். கடவுள் நீதியை வெளிப்படுத்தினார் என்பது ஒருவருக்கு உரியதை ஒருவருக்கு கொடுப்பது. இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது. இந்த உலகத்தை அவர் படைத்தபோது, குறிப்பிட்ட மனிதர்களுக்காக இந்த உலகத்தைப் படைக்கவில்லை. இந்த உலகத்தை எல்லாருக்குமாகப் படைத்தார். ஆனால், மனிதன் தன்னுடைய பேராசையினால், மற்றவா்களுக்கு உரியதை, தன்னுடைய தேவைக்கும் அதிகமானதை அபகரிக்கத் தொடங்கினான். இங்கே தான், அநீதி தொடங்குகிறது. ஒரு குழுவை மற்றொரு குழு அடக்கி வைக்கத் தொடங்குகிறது. அடிமைப்படுத்த தொடங்குகிறது. இங்கு தான் கடவுள் தன்னுடைய நீதியை வெளிப்படுத்துகிறார். சமுதாயத்தின் தாழ்த்தப்பட்ட மக்களை, அடிமைப்படுத்தப்பட்ட மக்களை அவர் கைதூக்கி விடுகிறார். தான் நீதியுள்ள...

நீங்கள் எல்லாரும் கடவுளைப் போற்றுங்கள்

திருப்பாடல் 148: 1 – 2, 11 – 12, 13, 14 ”நீங்கள் எல்லாரும் கடவுளைப் போற்றுங்கள்” மனிதன் யார்? என்கிற கேள்விக்கு பலவிதமான பதில்களை நாம் கேட்டிருக்கலாம். இன்றைய திருப்பாடல் மனிதன் யார்? மனிதன் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறான்? என்பதற்கான பதிலை, மிகத்தெளிவாக நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன் என்பதையும், மனிதனை கடவுள் படைத்தது அவரைப்போற்றுவதற்கும், புகழ்வதற்குமே என்பதையும் இது நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இயற்கையோடு இணைந்து கடவுளை மனிதன் போற்ற வேண்டும் என்பதுதான், மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கமாக இருக்கிறது. கடவுளை மனிதர்கள் அனைவருமே போற்ற வேண்டும். மனிதர்களில் பல வேறுபாடுகளை இந்த சமுதாயம் ஏற்படுத்தியிருக்கிறது. உயர்ந்தவர், தாழ்ந்தவர், பணக்காரர், ஏழை என்று பலவிதமான வேறுபாடுகளை இந்த உலகம் நமக்குக் கற்பித்திருக்கிறது. சாதாரண மக்கள் தான் கடவுளைப் போற்ற வேண்டும் என்றும், மற்றவர்கள் எல்லாமே பெற்றிருப்பதனால், அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், மனிதர்களில் ஒரு சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்,...