Category: Daily Manna

கடவுளின் அழைப்பு என்னும் கொடை

அழைப்பு என்பது கடவுளின் கொடை தான். அந்த கொடையை கடவுள் நமது நிலையைப் பார்த்து வழங்குவதில்லை. நமது உள்ளத்தைப் பார்த்து வழங்குகின்றார். எனவே, அது ஒரு கொடையாக கருதப்பட்டாலும், கடவுளின் அளப்பரிய அன்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்தாலும், நமது தகுதியின்மையில் இருக்கக்கூடிய தகுதியும், இதில் சிறந்த பங்கு வகிக்கிறது. கடவுள் முன்னிலையில் நாம் தகுதி என்றே சொல்ல முடியாது. எனவே, நமது தகுதியின்மையில் ஏதாவது தகுதி இருக்கிறதா? என்பதைப் பார்த்து, அதற்கேற்பவும் நிச்சயம் அந்த தகுதி வழங்கப்படுகிறது. இயேசு தனது பணிவாழ்வை தொடங்குகிறார். எந்த ஒரு பயணத்தைத் தொடங்குகிறபோதும், ஏதாவது ஒரு இடத்தில் இருந்து ஆரம்பித்தே ஆக வேண்டும். இயேசுவின் பணி அவரோடும், அவரது வாழ்வோடும் முடிந்துவிடக்கூடிய பணி அல்ல என்பது அவருக்கு நன்றாகத்தெரியும். எனவே, தனது பணியை ஆரம்பிப்பது ஆண்டாண்டு காலமாக, பல தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும். அதற்கு தொடக்கமாக, கடலில் வலைவீசி மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை அழைக்கிறார். நாம் நினைக்கலாம்? மீனவர்கள்,...

தந்தையைப் பூரிக்கச் செய்வோம் !

“மகன் தந்தைக்காற்றும் நன்றி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்” என்னும் அழகிய குறள்மொழியின் பொருள்: இப்படிப்பட்ட மகளை, மகனைப் பெறுவதற்கு, இவர் தந்தை என்ன தவம் செய்தாரோ எனப் பிறர் போற்றும் அளவுக்கு வாழ்வதே ஒவ்வொரு மகனும், மகளும் தமது பெற்றோருக்கு ஆற்றும் கடமை, நன்றி. இயேசு அப்படிப்பட்ட ஒரு மகனாக இருந்தார் என நற்செய்தி நூல் சான்று பகர்கிறது. இயேசு தம் பெற்றோருக்குப் பணிந்து நடந்தார் என்றும், “கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்” எனவும் லூக்கா நற்செய்தியில் (2: 51,52) வாசிக்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்திலோ, வானகத் தந்தையே விண்ணிலிருந்து “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்று விண்ணிலிருந்து பறைசாற்றினார் எனக் காண்கிறோம். தமது வளர்ப்புப் பெற்றோரையும், விண்ணகத் தந்தையையும் மதித்து, அவர்களை மகிழ்விக்கச் செய்வதே தமது கடமை, மகிழ்ச்சி என்னும் உணர்வோடு எப்போதும் சிந்தித்து, செயல்பட்டார் ஆண்டவர் இயேசு....

ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்

தொடர்ந்து மூன்றாவது நாளாக அரசத் திருப்பாடலான திபா 72 ஐயே பதிலுரைப் பாடலாகப் பாடுகிறோம். “ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்” என்பதையே பல்லவியாக வேண்டுகிறோம். இன்று 14, 15, 17 என்னும் மூன்று வசனங்களையும் நாம் நம்முடைய சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம். “அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார். அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது” என்றும், “அவருக்காக இடையறாது வேண்டுதல் செய்யப்படுவதாக. அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு நாள் முழுதும் மன்றாடப்படுவதாக! அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைத்திருப்பதாக! அவர் மூலம் மனிதர் ஆசிபெற விழைவாராக. எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக” என்னும் வரிகள் இன்று நம் கவனத்தை ஈர்;க்கின்றன. பொதுவாக இந்தத் திருப்பாடல் சாலமோன் மன்னனைக் குறித்தாலும், மேற்சொல்லப்பட்ட வரிகள் சாலமோனைவிட இயேசுவுக்கே அதிகம் பொருந்துகின்றன. எனவே, “மெசியாவின் திருப்பாடல்” என இதனை அழைக்கின்றனர் விவிலிய அறிஞர்கள். இதன் காரணமாகவே,...

ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்

அரசத் திருப்பாடலான திபா 72 ஐயே தொடர்ந்து இன்றும் நாளையும் நாம் பதிலுரைப் பாடலாகப் பாடுகிறோம். “சாலமோனுக்கு உரியது” என்னும் விளக்கத்துடன் தரப்பட்டுள்ள இத்திருப்பாடல் அரசருக்காக மன்றாடப்பட்ட ஒரு வேண்டுதல். “தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள். சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்” என்று 10ஆம் வசனத்தில் வாசிக்கிறோம். ஒருவேளை சாலமோன் அரசரைப் பற்றியே இவ்வரிகள் பாடப்பட்டிருக்கலாம், காரணம் சாலமோனின் காலத்தில்தான் யூதர்களின் அரசு மிகவும் விரிவடைந்திருந்தது. சாலமோனின் புகழையும், ஞானத்தையும், வெற்றிகளையும் கேள்விப்பட்டு, பன்னாட்டு அரசர்களும் (சேபா நாட்டு அரசி உள்பட) அவரைத் தேடிவந்தார்கள். பரிசுப்பொருள்கள் கொண்டுவந்தனர் (காண்க: லூக் 11: 31). ஆனாலும், திருப்பாடல் 2ஐப் போலவே, இந்தத் திருப்பாடலும் மெசியா இயேசுவைப் புதிய அரசராகக் காண்கிறது, அவரைப் போற்றுகிறது. “தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார். ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்” (திபா 72:...

உணவை வீணாக்க வேண்டாம்

நற்செய்தி நூல்கள் அனைத்திலும் காணப்படுகின்ற புதுமை, இயேசு அப்பத்தை பலுகச்செய்த புதுமை. பசுமையான புல்வெளியை பாலஸ்தீனத்தில் ஏப்ரல் மாத்தில் தான் பார்க்க முடியும். ஆகவே, இந்த புதுமை ஏப்ரல் மாதத்தின் நடுவில் நடைபெற்றிருக்கலாம். இந்த காலகட்டத்தில், சூரியன் ஏறக்குறைய மாலை ஆறு மணி அளவில் மறையக்கூடியதாக இருந்தது. எனவே, மாலைப்பொழுதில், சூரியன் மறையக்கூடிய அந்த நேரத்தில் தான் இந்த புதுமை நடைபெற்றிருக்க வேண்டும். மீதியுள்ள அப்பத்துண்டுகளை பன்னிரெண்டு கூடை நிறைய சேர்த்தார்கள் என்று சொல்லப்படுகிறது. பன்னிரெண்டு என்பது, திருத்தூதர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. எங்கோ அமர்ந்து உணவுக்கே வழியில்லாமல் இருந்த மக்கள்கூட்டத்தில் கூடை எங்கிருந்து வந்தது? என்று நாம் நினைக்கலாம். பொதுவாக, பாரம்பரிய யூதர்கள் தங்களின் உணவை தாங்களே கூடைகளில் வெளியே எடுத்துச் சென்றனர். குறிப்பாக நீண்ட தூரப்பயணம் அமைகிறபோது, இந்த நடைமுறையைப் பின்பற்றினர். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. யூதர்களுக்கு தூய்மை என்பது உண்கின்ற உணவிலும் மிகவும் சரியாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்....