திறந்த உள்ளத்தினராக வாழ்வோம்
திருத்தூதர் பணி 9: 1 – 20 திறந்த உள்ளத்தினராக வாழ்வோம் சவுலுடைய மனமாற்றம் பற்றிய சிந்தனைகளை இன்றைய முதல் வாசகம் நமக்குக் கற்றுத்தருகிறது. சவுல் திருச்சபையை அழித்தொழிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டு செயல்பட்டவர். யூதப் பாரம்பரியத்தில் வளர்ந்தவர். கிறிஸ்தவம் யூத மறையை அழித்துவிடும். எனவே, அதனை எப்படியாவது தடை செய்ய வேண்டும் என்று, விரோத மனப்பான்மையோடு செயல்பட்டவர். மற்றவர்களால் அவர் இயக்கப்பட்டார் என்று சொன்னாலும், அவருடைய உள்ளத்திலும் கிறிஸ்தவர்களை அழிக்க வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாகவே இருந்தது. ஆனால், அனைவரும் ஆச்சரியப்படக்கூடிய வகையில் அவர் ஒரே ஒரு காட்சியினால் மனமாற்றம் அடைகிறார். இது எப்படி சாத்தியம்? சவுல் உயிர்த்த இயேசு அவருக்கு கொடுத்த காட்சியினால் மனம்மாறினால் என்று ஒரு வரியில் சொன்னாலும், சவுலின் மனமாற்றம் எப்போது தொடங்கியிருக்கும் என்பது தான் உண்மை. அந்த தொடக்கத்தின் நிறைவு தான், இந்த மனமாற்றம். எது சவுலின் மனமாற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கும்? நிச்சயம்...