Category: Daily Manna

பவுலடியாரின் நம்பிக்கை வாழ்வு

திருத்தூதர் பணி 14: 19 – 28 தொடங்கியிருக்கிற பணியில், உறுதி கொண்ட கொள்கையில் பிடிப்போடு இருக்க வேண்டும் என்கிற வார்த்தைகளுக்கு முன்னோடியாக திகழக்கூடியவராக, பவுலடியார் இருப்பதை, இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கிறிஸ்துவைப் பற்றி பல இடங்களுக்குச் சென்று அறிவித்து வந்த, பவுலடியாரின் போதனைகளுக்கு மக்கள் நடுவில் ஆதரவும் இருந்தது. எதிர்ப்பும் இருந்தது. எதிர்ப்பு என்பது சாதாரணமானதாக இல்லை. அவரை கொலை செய்ய செல்லும் அளவுக்கு இருந்தது. இன்றைய வாசகம் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத்தான் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. அந்தியோக்கியாவிலிருந்தும், இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல் மேல் கல் எறிந்தார்கள். அவர் இறந்துவிட்டார் என்றும் அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது போல பவுல் இறக்கவில்லை. இந்த நிகழ்ச்சி நம்மில் ஒருவருக்கு நடந்திருந்தால், நம்முடைய அடுத்த சிந்தனை என்னவாக இருக்கும்? இனிமேல் இந்த பணி எதற்கு என்று, சோர்ந்துவிடுவோம் அல்லது சற்று உடல் தேறுகிறவரையில் ஓய்வு...

வாழ்க்கை என்னும் கொடை

திருத்தூதர் பணி 14: 5 – 18 தனி மனித வழிபாடு, நாம் வாழும் இந்த நவீன உலகத்தில் மட்டுமல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இருந்திருக்கிறது என்பதற்கு, இன்றைய வாசகம் அருமையான எடுத்துக்காட்டு. பவுல் மற்றும் பர்னபா ஆகிய இருவரும், மக்கள் நடுவில் சென்று, நோய்களை குணமாக்குகின்றனர். முடவர்களை நடக்கச் செய்கின்றனர். அதனைக்கண்டு அவர்களை வழிபடுவதற்காக, அவர்களுக்கு பலி செலுத்துவதற்காக ஒரு கூட்டம் அவர்களிடத்தில் வருகிறது. அதனைப் பார்த்து, பவுலும், பர்னபாவும் அதனை புறக்கணித்துவிட்டு, அவர்களை கண்டிக்கின்ற விதமாக, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். பணம் கொடுத்து விளம்பரங்களை தேடிக்கொள்ளும் இந்த உலகத்தில், இறைவன் ஒருவர் தான் மகிமைப்படுத்தப்பட வேண்டியவர் என்பதில், உறுதியாக இருந்து அதனை வாழ்ந்தும் காட்டியிருக்கிறார் பவுலடியார். உண்மைதான். இறைவனுக்காக அனைத்தையும் குப்பையென்று கருதுகிறேன் என்று வெறும் வார்த்தையில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் நிறைவாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். புறவினத்து மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்காக, தன்னுடைய வாழ்க்கை முழுவதையுமே அர்ப்பணித்த பவுலடியார், எந்த...

கடவுள் மாட்சி பெறட்டும்

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறாகிய இன்று நாம் செலுத்தும் அன்பு வழியாக இறைவன் மாட்சிமை அடையவேண்டும் என்றும், அன்பிலிருந்தே பிறர் நம்மை இயேசுவின் சீடர்களாக அடையாளம் காண்பர் என்றும் இறைமொழி வழியாக அறிகின்றோம். இயேசு தமது இறுதி செபத்தில் இவ்வாறு செபித்தார்: “மானிட மகன் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார்”. நாம் நேர்மையோடும், அன்போடும் ஆற்றுகின்ற ஒவ்வொரு செயலிலும் இறைவன் மாட்சி அடைகின்றார். மனம் மகிழ்கின்றார்; என்பதே ஒரு நற்செய்தி அல்லவா! எனவே, நாம் எதைச் செய்தாலும், அச்செயல் வழியாக இறைவன் மாட்சி அடையவேண்டும் என்னும் மனநிலையில் பணியாற்ற வேண்டும். நமது ஒவ்வொரு அன்புச் செயலும் இறைவனை மனமகிழச் செய்கிறது என்பதை உணர்ந்தால், நமது செயல்களுக்குப் புதிய பரிமாணம் கிடைக்காதா? எனவே, நாம எதைச் செய்தாலும், கூலிக்காக செய்யாமல், ஆண்டவருக்காக செய்ய முன்வருவோமாக! மன்றாடுவோம்: உழைப்பை மேன்மைப்படுத்தி, தந்தையை மாட்சிப்படுத்திய இயேசுவே, இறைவா, உம்மைப் போற்றுகிறோம். “தந்தை எனக்குக் கொடுத்த வேலையை...

இறைவனோடு கொண்டிருக்கிற உறவு

திருத்தூதர் பணி 13: 44 – 52 யூதர்களில் பெரும்பாலானவர்கள் பவுலையும், திருத்தூதர்களின் போதனையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. பலர் மனந்திரும்பி, இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொண்டாலும், அதிகாரவர்க்கத்தினர் அவர்களை நம்பவில்லை. எந்தெந்த வழியில் அவர்களுக்கு இன்னல்களை தர முடியுமோ, அத்தனை வழிகளிலும் அவர்கள் முயற்சி எடுத்து, அவர்களை தடை செய்ய பார்த்தார்கள். அதிகாரவர்க்கத்தினரின் இந்த மிரட்டல்களைக் கண்டு, சீடர்கள் பயப்படவில்லை. ஒளிந்து ஓடவுமில்லை. அதிகாரவர்க்கத்தினரை துணிவோடு எதிர்த்து நின்றனர். ”கடவுளின் வார்த்தையை உதறித்தள்ளி, நிலைவாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள்” என்று பவுல், யூதர்கள் முன்னிலையில் துணிவோடு பேசுகிறார். இவ்வளவு எதிர்ப்புகளுக்கு நடுவிலும், சீடர்கள் கலக்கமுறவில்லை. அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். ”சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்”. அவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க எவ்வளவோ இன்னல்களை அனுபவித்தபோதிலும், மிகுந்த மகிழ்ச்சியோ வாழ்ந்தனர். இறைவன் அவர்களோ இருக்கிறார் என்கிற ஆழமான விசுவாசம் தான், அவர்களுக்கு இந்த மகிழ்ச்சியைத் தந்தது. கவலை வருகிறபோது...

வாக்கு மாறாத இறைவன்

திருத்தூதர் பணி 13: 26 – 33 கடவுள் வாக்கு மாறாதவர், சொன்னதைச் செய்து முடிப்பவர் என்பது தான், தூய பவுலடியார் நமக்கு சொல்ல வருகிற செய்தியாகும். கடவுள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக, இஸ்ரயேல் மக்களுக்கு வாக்களித்திருந்தார். அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க மீட்பரை அனுப்புவேன் என்று, இறைவாக்கினர்கள் வாயிலாக முன்னறிவித்திருந்தார். இஸ்ரயேல் மக்களும், இறைவன் தங்களுக்கு கொடுக்கவிருந்த மீட்பருக்காக காத்திருந்தனர். அந்த மீட்பர் தான் இயேசு என்று, பவுலடியார் சொல்கிறார். இயேசுவின் வருகை, இறைவனுடைய வாக்குறுதி முழுமையாக நிறைவேறியிருப்பதை உணர்த்துகிறது என்பதுதான், அவருடைய செய்தியாக இருக்கிறது. மனிதர்கள் கடவுளிடத்தில் பல உடன்படிக்கைகளை மேற்கொள்ளுகிறார்கள். ஆனால், வெகு எளிதாக கடவுளோடு செய்து கொண்ட உடன்படிக்கையை உடைத்துவிடுகிறார்கள். ஆனால், கடவுள் அப்படிப்பட்டவரல்ல. கடவுள் வல்லமையுள்ளவராக இருந்தாலும், வாக்குறுதி மாறாதவராக இருக்கிறார். பொதுவாக, வலிமை படைத்தவர்கள் தான், உடன்படிக்கையை மீறுகிறவர்களாக இருப்பார்கள். தங்களின் அதிகாரத்தை காட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள். ஆனால், கடவுள் அப்படிப்பட்டவரல்ல....