ஆண்டவர் எத்துணை நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்
திருப்பாடல் 34: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8 அனுபவமே சிறந்த ஆசான் என்று சொல்வார்கள். கடவுளைப் பற்றி நாம் பல்வேறு கருத்துக்களைப் படிக்கலாம். மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால், அவையெல்லாம் கடவுளைப் பற்றிய உண்மையான சுவையை நமக்குத் தராது. நாமே அனுபவிப்பது மட்டும் தான், கடவுளை முழுமையாக சுவைப்பதற்கு உதவியாக இருக்கும் என்று திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார். திருப்பாடல் ஆசிரியர் கடவுளை முழுமையாக தன்னுடை வாழ்வில் அனுபவித்தவர். கடவுளின் அன்பையும், அருகாமையையும், உடனிருப்பையும் சுவைத்தவர். தாமஸ் அக்குவினாஸ் மிகப்பெரிய இறையியல் அறிஞர். கடவுளைப் பற்றி பல்வேறு மிகச்சிறந்த புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவர் ஒருமுறை திருப்பலியில், கடவுள் அனுபவத்தால் ஆட்கொள்ளப்பட்டார். அந்த அனுபவத்திற்குப் பிறகு அவர் சொன்னார்: ”கடவுள் அனுபவத்தைப்பற்றி இவ்வளவு நாட்கள் நான் எழுதிய புத்தகங்கள் எல்லாம் தூசுக்கு சமம் என்று நினைக்கிறேன்”. ஆம், கடவுள் அனுபவம் வெறும்...