மரியாளின் விண்ணேற்பு பெருவிழா & சுதந்திர திருநாள்
மரியாளின் விண்ணேற்பு பெருவிழா & சுதந்திர திருநாள் தாய்க்கும் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்ப்போம் லூக்கா 1:39-56 உங்கள் அனைவருக்கும் அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழா நல்வாழ்த்துக்களையும், சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்களையும் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தித்திப்பான நாளிலே நல்ல உடல் ஆரோக்கியமும், குறைவில்லா வருமானமும், தீராத சந்தோசமும், சிறந்த நற்பண்புகளையும் நீங்கள் பெற்றிட உங்களை வாழ்த்துகிறேன். விண்ணேற்பு அன்னை மரியின் பரிந்துரையும், ஆண்டவரின் ஆசீரும் உங்களுக்கு நிறைவாகவே கிடைப்பதாக! இன்றைக்கு நம் தாய்க்கும் தாய்நாட்டிற்கும் விழா எடுக்கிறோம். இருவருக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமையும் தொடர்பும் இருப்பதை நாம் பார்க்கலாம். தாய்க்கு எதற்காக? ஒரு சாதாரண தாயைவிட மேலாக, மரியாள் பிள்ளைகளாகிய நம்மீது முழுமையான அக்கறை கொண்டிருப்பவள். கண்மணிபோல கருத்தாய் காப்பவள். அதனால் நாம் அவருக்கு விழா எடுத்துக்கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது ஆகும். – “அன்னை தன்னைத் தேடிவரும் அனைவருக்கும் அடைக்கலம் தரும் நகரம்” – என்கிறார் புனித தமசீன்...