Category: Daily Manna

மனமிரங்கி கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்

திருப்பாடல் 112: 1 – 2, 5 – 6, 7 – 8, 9 உதவுதல் என்பது நாம் வாழக்கூடிய சமுதாயத்தில் ஒரு நல்ல விழுமியமாக பார்க்கப்படுகிறது. இன்றைக்கு உதவக்கூடிய மனிதர்கள் எல்லாரும் நல்லவர்களா? என்றால், அதனை நிச்சயமாக சொல்ல முடியாது. ஏனென்றால், இன்றைய உலகத்தில், எதையும் எதிர்பார்த்துச் செய்யும் பழக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒன்றைக்கொடுத்து மற்றொன்றைப் பெறுவத, நாம் வாழும் உலகில் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் செய்யக்கூடிய உதவி எப்படி இருந்தால், கடவுளின் ஆசீரை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை, இந்த திருப்பாடல் எடுத்துரைக்கிறது. நாம் மற்றவர்களுக்கு உதவுகிறபோது எதையும் எதிர்பார்க்காது கொடுக்க வேண்டும். அவர் மேல் நாம் கொண்டிருக்கிற அன்பின் மிகுதியினால் மட்டுமல்ல, மாறாக, நம்முடைய உள்ளத்தில் எழுந்த இரக்கத்தினால், உணர்வினால் பொங்கி எழுந்து கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அதுதான் மனமிரங்கி கொடுப்பது என்பதன் பொருளாகும். சாதாரணமாக, நாம் அதிகமாக அன்பு செய்கிறவர்கள்...

வாழ்வு என்னும் கொடையைப் போற்றுவோம்

இழப்பீடு என்பது இழப்பிற்கு சமமான ஒன்றைக் கொடுப்பதாகும். நாம் ஏதாவது பொருளை இழந்து விட்டால், அல்லது மழை, வெள்ளத்தில் நமது பொருட்களை இழந்துவிட்டால், அரசாங்கம் நமக்கு இழப்பீடு தருகிறது. அரசாங்கம் தரக்கூடிய இழப்பீடு நூறில் ஒரு பங்குக்கு கூட சமமாகாது என்பது வேறு கதை. ஆனால், இழப்பீடு வழங்குகிறது. அதேபோலத்தான், விபத்திற்கென்று இழப்பீடு, மருத்துவ இழப்பீடு என்று, இதில் பல வகைகள் அடங்கியிருக்கிறது. ஆக, ஒன்றிற்கு ஈடாக, அல்லது ஈடுபடுத்தும்விதமாகக் கொடுக்கப்படுவதுதான் இழப்பீடு என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இன்றைய நற்செய்தியில் வாழ்விற்கு ஈடாக எதை நாம் கொடுக்க முடியும்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பொருட்களுக்கு இழப்பீடாக பணத்தைக் கொடுத்துவிடலாம். ஆனால், இழப்பீடு தர முடியாத ஒன்று இருக்கிறது என்றால், அது நிச்சயம் வாழ்வு தான். பொன் கோடி கொடுத்தாலும், பதவி, புகழ், அந்தஸ்து பெற்றாலும், நமது வாழ்வை இழந்துவிட்டால், அவ்வளவுதான். இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை. எனவே, வாழ்வை பாதுகாப்போடு,...

தங்களை விடுவித்த இறைவனை மறந்தார்கள்

திருப்பாடல் 106: 6 – 7b, 13 – 14, 21 – 22, 23 ”திரும்பிப்பார்த்தல்” என்பது வெற்றிக்கான ஆரம்பப்புள்ளி என்பார்கள். திரும்பிப்பார்ப்பது என்பது நம்முடைய வாழ்வை நாம் சீர்தூக்கிப்பார்ப்பது என்கிற பொருளாகும். ஒவ்வொருநாளும் நம்முடைய வாழ்வை நாம் திரும்பிப்பார்க்கிறபோது, அது நமக்குள்ளாக பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. எந்த இடத்தில் நாம் தவறியிருக்கிறோம், எந்த இடத்தில் நாம் சரி செய்ய வேண்டும்? எவையெல்லாம் நம்முடைய பலமாக இருக்கிறது என்பதை, நமக்குக் கற்றுக்கொடுப்பதாக இது அமைந்திருக்கிறது. இன்றைய திருப்பாடலில், இஸ்ரயேல் மக்களுக்கு இறைவன் செய்த வியத்தகு செயல்களையும், அதற்கு முரணாக, நன்றியில்லாதத் தன்மையோடு இஸ்ரயேல் மக்களின் பதில்மொழிகளையும், ஆசிரியர் எடுத்துரைக்கிறார். எகிப்தில் இஸ்ரயேல் மக்களுக்கு பல அற்புதச்செயல்களைச் செய்து, இறுகிய மனதுடைய பார்வோன் மன்னரிடமிருந்து, அவர்களை விடுவித்தார். ஆனால், இறைவன் செய்த நன்மைகளையெல்லாம் பாராமல், இறைவனை விட்டு, இஸ்ரயேல் மக்கள் விலக ஆரம்பித்தனர். இந்த செயல்களையெல்லாம் திருப்பாடல் ஆசிரியர் திரும்பிப்பார்ப்பது, அவர்கள்...

கூடாரம் அமைப்போம்

பேதுருவின் நியாயமான ஆசை. மூன்று பேருக்கும் மூன்று கூடாரம் அமைக்க விரும்பினார். கூடாரங்கள் விவிலியத்தில் இறைப் பிரசன்னத்தின் அடையாளம். பழைய ஏற்பாட்டில் பாலை வனப் பயணத்தில் இஸ்ராயேல் மக்களோடு யாவே இறைவன் தனக்கென தனி கூடாரம் அமைத்துக் குடிகொண்டார். “மோசே பாளையத்துக்கு வெளியே கூடாரத்தைத் தூக்கிச் செல்வதும் பாளையத்திற்கு வெகு தூரத்தில் கூடாரம் அடிப்பதும் வழக்கம்அதற்கு அவர் சந்திப்புக் கூடாரம் என்று பெயரிட்டார். ஆண்டவரைத் தேடும் யாவரும் பாளையத்துக்கு வெளியேயுள்ள சந்திப்புக் கூடாரத்திற்குச் செல்வர்.” (விடுதலைப் பயணம் 33.7) இறை மாட்சியைக் கண்ட பேதுரு அத் தெய்வீகப் பிரசன்னம் தங்களோடு என்றும் தங்கியிருக்க விரும்பினார்.உண்மையில் இறைவன் நம்மோடு வாழும் தெய்வம். இம்மானுவேல் என்பது அவரது பெயர்.உலகம் முடியும்வரை நம்மோடு இருக்கும் தெய்வம். பேதுருவின் ஆசையிலும் இறைவனின் இயல்பிலும் ஒரே கருத்து உள்ளோடுவதை உணரமுடிகிறது. இதைச் செயல்படுத்துவதில் சில வேறுபாடுகளைக் காணமுடிகிறது. மாட்சியும் பெருமையும் அவரைக் கவர்ந்தது. பேரொளி, பெரிய ஆட்கள் அவருக்குப்...

என் மக்கள் எனது குரலுக்கு செவிகொடுக்கவில்லை

திருப்பாடல் 81: 11 – 12, 13 – 14, 15 – 16 வேதனையினாலும், வருத்தத்தினாலும் வெளிப்படுகிற வார்த்தைகள் தான், இந்த திருப்பாடலில் வருகிற வார்த்தைகள். இறைவனுடைய பார்வையிலிருந்து இந்த வரிகள் எழுதப்பட்டுள்ளன. தான் செய்த நன்மைகளையும், அற்புதங்களையும் மறந்து, வேறு தெய்வங்களை மக்கள் நாடிச்சென்று விட்டார்களே? என்கிற வருத்தத்தை இந்த பாடலில் நாம் பார்க்கலாம். இஸ்ரயேல் மக்களின் உள்ளம் எந்த அளவுக்கு கடினமானதாக மாறிவிட்டது என்கிற ஏக்கத்தையும் இந்த பாடல் நமக்கு ஒருங்கிணைத்துக் காட்டுகிறது. இஸ்ரயேல் மக்களின் நன்றியற்றத்தனம் இங்கே வெளிப்படுத்தப்பட்டாலும், கடவுளின் அன்பில் எந்த குறையும் இல்லை என்பதும், இங்கே நமக்குத்தரப்படுகிற செய்தியாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் மட்டும், கடவுளின் குரலைக் கேட்டிருந்தால், இவ்வளவுக்கு துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்காதே என்று கடவுள் வேதனைப்படுகிறார். நடந்தது நடந்து விட்டது. இவ்வளவு நடந்த நிகழ்வுகளுக்கும் இஸ்ரயேல் மக்கள் தான் காரணம் என்றாலும், கடவுள் அதனை பொருட்படுத்தாமல், அவர்களின் எதிரிகளை அழிக்க...